தேவையானவை: பால் 2 லிட்டர், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், - பொடித்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - இரண்டரை கப், சிட்ரிக் ஆசிட் (அ) லெமன் சால்ட் - கால் டீஸ்பூன்.செய்முறை: அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, பாலை விட்டு சுண்டக் காய்ச்சவும். இதில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட்டை விட்டு சிறிது நேரம் காய்ச்சவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும். பால் திரிந்து அல்வா பதத்தில் வந்ததும் இறக்கவும்.
தேவையானவை: கொட்டை இல்லாத பேரீச்சம்பழம், சர்க்கரை, நெய் தலா ஒரு கப், பால் அரை கப், பாதாம், முந்திரி, குங்குமப்பூ தேவையான அளவு.செய்முறை: பேரீச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைத்து, பால் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். கடாயை சூடாக்கி, அதில் சக்கரையைப் போட்டு இளம் பாகு பதம் வந்ததும், அரைத்த பேரீச்சம்பழ விழுதைக் சேர்த்து நெய் விட்டுக் கிளறவும். இதில் பாதாம், முந்திரி, குங்குமப்பூ சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும்.
தேவையான பொருட்கள் -பால் 2 லிட்டர்,ஜல்டின் பவுடர் ஒரு ஸ்பூன், கஸ்டர்டு பவுடர் 7 ஸ்பூன், சீனி 400 கிராம், வெண்ணிலா எசன்ஸ், அன்னாச்சி பழ எசன்ஸ் ஒரு ஸ்பூன்.செய்முறை- பாலை நன்றாக காய்ச்சவும் 2லிட்டர் பால் 1 லிட்டர் ஆகும் வரை வத்தவைக்கவும், பின்பு ஜல்டின் பவுடரை வற்றிய பாலில் சேர்த்து நன்றாக கலக்கவும். கஸ்டர்டு பவுடரை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து, அதை பாலில் சேர்க்கவும். கடைசியில் சீனியை நன்கு கரைத்தபின்பு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். பால் ஆறிய பின்பு ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.
பேரி ஜெல்லி தோலோடு வெட்டி உள்ளேயிருக்கும் கடினமான பாகத்தை நீக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டுத் துண்டுகளை மூடும் அளவுக்குத் தண்ணீரை ஊற்றி, நன்றாக வேக வைத்து தண்ணீரை வடித்துவிடவும். பிறகு அந்தச் சாற்றில் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு சர்க்கரை சேர்த்து, இரண்டு எலுமிச்சம் பழ ரஸத்தையும் பிழிந்து விடவும். பின்பு அதை அடுப்பிலேற்றி மெதுவாக எரிய விடவும். ஜெல்லி தயாரானதும் இறக்கவும்.பின்பு ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.
ஆப்பிள் ஜெல்லி ஒரு ஆப்பிள் ஒரு கிலோ கிராம். பழத்தை நான்காக வெட்டி உள்ளேயிருக்கும் கடினமான பாகத்தை நீக்கிவிட்டு 6 கிலோ கிராம் பழத்துண்டை நன்றாக ஆட்டி, அரைக்கிலோ தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ரஸத்தை வடித்துக் கொள்ளவும். ரஸம் எவ்வளவு இருக்கிறதோஅவ்வளவு சர்க்கரைஅதில் சேர்த்து இரண்டு எலுமிச்சம் பழங்களையும் பிழிந்துவிட்டு அடுப்பிலேற்றி, மெதுவாக எரிய விடவும். ஜெல்லி தயாரானதும் இறக்கிக் கொள்ளலாம்.பின்பு ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.
தேவையான பொருள்கள்பாதாம் பால் - 2 கப்வெல்லம் - கால் கப்வெண்ணிலா - 1 டிஸ்பூன்செய்முறைசாஸ்பேன் எடுத்து அதில் பாதாம் பாலை மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும். இந்த பால் பொங்கவிட கூடாது. இதில் வெல்லத்தை பொடியாக்கி சேர்க்கவும். வெல்லம் பாலுடன் நன்கு கரைந்தவுடன் அதில் வெண்ணிலா சேர்க்க வேண்டும்.பின்னர் இதை நன்கு குளிர்ச்சி அடைய செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து ஐஸ்க்ரீம் மேக்கருக்கு மாற்றி ப்ரிட்ஜில் ப்ரீஸ் செய்ய வேண்டும்.அவ்வளவுதான் சுவை மிக்க வெண்ணிலா, பாதாம் பால் ஐஸ்க்ரீம் தயார்
தேவையான பொருள்கள்வாழைப்பழம் - நான்குகொக்கோ பவுடர் - கால் கப்பீநட் பட்டர் (கடலை வெண்ணெய்) - 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் பால் - கால் கப்செய்முறைபீநட் பட்டர், கொக்கோ பவுடர் மற்றும் வாழைப்பழத்தை பிளெண்ட் செய்ய வேண்டும். இந்த கலவையைில் தேங்காய் பால் ஊற்றி கலந்த பின்னர், சுமார் 2 மணி நேரம் வரை ப்ரீஸ் செய்ய வேண்டும். நன்கு கடினமான பின் ஸ்கூப்பாக கோன்களில் வைத்து சாப்பிடலாம்
தேவையான பொருள்கள்முழு கொழுப்பு தேங்காய் பால் - 1 கேன்பேரிட்சை - 6 முதல் 8 வரைவெண்ணிலா - 1 டிஸ்பூன்உப்பு - தேவைக்கு ஏற்பசெய்முறைஇந்த ஐஸ்க்ரீம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தேங்காய் பாலை ப்ரிடீஜில் குளிர்ச்சியடைய செய்ய வேண்டும். பிளெண்டரில் வைத்து திடமான தேங்காய் பாலில் இருந்து க்ரீமை மட்டும் வெளியே எடுக்கவும்.பேரிட்சை, வெண்ணிலா, உப்பு ஆகியவற்றையும் பிளெண்டரில் சேர்த்து க்ரீம் போன்று அரைக்கவும்.பின்னர் இந்த கலவையை ஐஸ்க்ரீம் மேக்கருக்கு மாற்றி அதை ப்ரீசரில் சில மணி நேரங்கள் குளிர்ச்சி அடைய செய்ய வேண்டும். அவ்வளவுதான் பின்னர் எடுத்து பரிமாறலாம்
. தேவையான பொருள்கள்:எலுமிச்சை இலை - ஒரு கப்கடலைப் பருப்பு - 50 கிராம்காய்ந்த மிளகாய் - 15பெருங்காய் துண்டு - 3பூண்டு - 8 பல்மல்லி - ஒரு தேக்கரண்டிசீரகம் - கால் தேக்கரண்டிமிளகு - கால் தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுசெய்முறை: வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் எலுமிச்சை இலையை வறுக்கவும். அடுத்து கடலைப் பருப்பு, மிளகாய், பெருங்காயம், மல்லி, சீரகம், மிளகு அனைத்தையும் தனித்தனியே வறுத்துகொள்ளவும்.மிக்ஸியில் முதலில் மிளகாய், எலுமிச்சை இலையை சேர்த்து நன்றாக பொடித்த பின் கடலைப் பருப்பு, மல்லியை சேர்த்து அரைக்கவும் கடைசியாக, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.கமகமக்கும் வாசனையுடன் மிகவும் சுவையாக இருக்கும் இப்பொடியை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சாதத்துடன் கலந்து பிசைந்தும் சாப்பிடலாம்.
பாரம்பரிய SWEET ‘உக்களி’தென்இந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்புவகை தான் இந்த உக்களி. இது சேலம் மாவட்டத்தில் மிகவும் பிரபலமாகும். உக்களியை திருமண விழாக்களில் பாரம்பரியமாக செய்து பரிமாறுவது அங்கே வழக்கமாகும். அத்தகைய உக்களியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க.தேவையான பொருட்கள்:அரிசி மாவு-1 கப்.தண்ணீர்- 1 ¼ கப்.உப்பு- 1 சிட்டிகை.நல்லெண்ணெய்-1 குழிக்கரண்டி.நெய்-2 தேக்கரண்டி.முந்திரி-10.வெல்லம்-3/4 கப்.ஏலக்காய்-1 தேக்கரண்டி.பச்சை கற்பூரம்-1 சிட்டிகை.செய்முறை விளக்கம்:முதலில் பவுலில்1 கப் அரிசி மாவு,1 சிட்டிகை உப்பு,1¼ கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவும்.இப்போது ஃபேனில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில் செய்து வைத்திருக்கும் மாவு ஊற்றி ஒரு10 நிமிடம் பிரட்டினால், மாவு நன்றாக வெந்துவிடும். மாவு வெந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளகையில்எடுத்துதொட்டுப்பார்த்தால் மாவு ஒட்டாமல் இருக்க வேண்டும்.இப்போது அந்த மாவில்3/4கப் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். வெல்லம் நன்றாக மாவுடன் கலந்ததும்,1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்,1 சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து10 நிமிடம் பிரட்டிக்கொண்டேயிருந்தால் பூந்தி பூந்தியா வந்துடும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து2 தேக்கரண்டி நெய் ஊற்றி10 முந்திரியை நன்றாக பொன்னிறமாக வறுத்து அதையும் செய்து வைத்திருக்கும் உக்களியுடன் சேர்த்தால் சுவையான உக்களி தயார். வீட்டிலே ஒருமுறை செஞ்சி பாருங்க. டேஸ்ட் சுவையாக இருக்கும்