மால்புவா இனிப்பு வகை கிழக்கு இந்தியாவிலிருந்து தோன்றியதாகும். பூட்டான், இந்தியா, நேபாள், பங்களாதேஷ் போன்ற இடங்களில் இந்த இனிப்பு மிகவும் பிரபலமாகும். காலையில் பிரேக் பாஸ்டாக டீயுடன் சேர்த்து சாப்பிடலாம், அல்லது சாதாரணமாக இனிப்பு வகையாகவும் உண்ணலாம். இது மிகவும் பழமையான இனிப்பு வகை என்று கூறப்படுகிறது. ஹோலி, ஜென்மாஸ்டமி போன்ற விஷேச நாட்களில் இதை செய்வார்கள். மால்புவா செய்ய தேவையான பொருட்கள்:மைதா -1 கப்.ரவை -1/4கப்.மில்க் பவுடர் -1/2கப்பால் -1/2 கப்.ஏலக்காய் பொடி - தேவையான அளவு.சக்கரை - 1கப்.குங்குமப்பூ - சிறிதளவு.நெய் - தேவையான அளவு.மால்புவா செய்முறை விளக்கம்:முதலில் ஒரு பாத்திரத்தில்1 கப் மைதா, ரவை¼ கப், மில்க் பவுடர்½ கப், ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்து பால் ஊற்றி தோசைமாவு பதத்திற்கு நன்றாக கலக்கி20 நிமிடம் மூடி வைத்து விடவும்.இப்போது இன்னொரு பாத்திரத்தில்½ கப் சக்கரை, தண்ணீர்½ கப் சேர்த்து நன்றாக சக்கரை கரையும் வரை கிண்டவும். அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.இப்போது அடுப்பில் பேன் வைத்து அதில் நெய்யை ஊற்றிக்கொள்ளவும். ஊற வைத்திருக்கும் மாவை குழிக்கரண்டியில் எடுத்து சிறிதாக ஊற்றி, நன்றாக மாவு பொன்னிறமாக மாறும் வரை வைத்து இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். பார்ப்பதற்கு பூரி போல இருக்கும். இப்போது இதை செய்து வைத்திருக்கும் சக்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.கடைசியாக ஒரு தட்டில் ஊற வைத்த ஸ்வீட்டை அடுக்கி அதன் மீது பொடியாக வெட்டி வைத்த பிஸ்தாவை தூவி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான மால்புவா தயார்.
. தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி - 200 கிராம் ,சுடுநீர் - தேவையான அளவு , உப்பு - 1/4 டீஸ்பூன்,உள்ளே வைப்பதற்கு... தேங்காய் - 1/4 மூடி ,ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன் * சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்சர்க்கரை பாகுவிற்கு... * சர்க்கரை - 200 கிராம் * தண்ணீர் - தேவையான அளவு * ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன் செய்முறை: * முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு, சுடுநீர் சேர்த்து கரண்டியால் கிளறி, அத்துடன் சிறிது உப்பு தூவி நன்கு கிளறி, 2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். * பின்னர் தேங்காயை எடுத்து துருவிக் கொள்ள வேண்டும்.செய்முறை -துருவிய தேங்காயை கிண்ணத்தில் எடுத்து, அத்துடன் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும். 2 மணிநேரம் ஆன பின், ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை கையால் லேசாக பிசைந்து, பின் சிறிது ஜவ்வரியை எடுத்து அதை தட்டையாக தட்டி, அதன் நடுவே சிறிது தேங்காய் கலவையை வைத்து மூடி உருண்டையாக பிடித்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் ஒரு 6-7 ஜவ்வரிசி உருண்டைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். உருண்டை பிடிக்கும் போது அதிகமாக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் கல் போன்று இருக்கும்.பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை உள்ளே வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். * அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாகுவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து, சர்க்கரையை கரைத்துக் கொள்ள வேண்டும். * ஜவ்வரிசி வெந்ததும், அந்த உருண்டைகளை எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டு, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இந்த ஜவ்வரிசி உருண்டையை பரிமாறும் போது, மேலே சிறிது சர்க்கரை பாகுவை ஊற்றி பரிமாறுங்கள். இப்போது ஜவ்வரிசி உருண்டை தயார்.மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சத்தான, அதே சமயம் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு ஸ்நாக்ஸ்.
தேவையான பொருட்கள் வாழைப் பழம் – 5 சர்க்கரை – ¼ கப் நெய் – 1/2 கப்,ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 1/4 கப் முந்திரி – தேவையான அளவு உலர் திராட்சை – தேவையான அளவு செய்முறை-முதலில் பாத்திரத்தில் நெய் தடவி தனியாக வைக்கவும். அதன் பிறகு, ஒரு நான்ஸ்டிக் பானில் நெய் விட்டு சூடாக்கி அதனுடன் மசித்த வாழைப் பழம் சேர்க்கவும். பிறகு,அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது கலவை கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.கலவை திரண்டு வரும் வரை வேக வைக்கவும். பிறகு இன்னொரு பானில் சர்க்கரை எடுத்து அதில் நீர் சேர்த்து சர்க்கரை பாகு செய்யவும். அதனை வாழைப்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு, வேறொரு பானில் நெய் சேர்த்து சூடாக்கி, பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை வறுக்கவும். பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து அல்வாவில் சேர்க்கவும். கடைசியாக ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறினால் சுவையான வாழைப்பழ அல்வா தயார்.
கோடை வெப்பத்தில் இருந்து, உடலை தற்காத்து கொள்ள மோர் உள்ளது. மசாலா பொருட்கள் நிறைந்த மோரை குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சி தரும் மசாலா நீர் மோர் செய்ய கெட்டியான புளித்த தயிர், மூன்று கொத்து பச்சை கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு. மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிரை சேர்த்துக் கொள்ளவும். அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். நன்றாக அரைத்த பின்னர் ஒரு லிட்டர் தண்ணீரை மீண்டும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயப்பொடியை சேர்த்து கொள்ளவும். தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகளை சேர்த்தோ அல்லது காராபூந்தியை சேர்த்தோ சுவையான மசாலா மோரை பருகவும். மோரில்90% நீர்ச்சத்து நிறைந்து உள்ளது. ஒரு கப் மோரில்8 கிராம் புரதம் உள்ளது..எலும்பை வலுப்படுத்தும்கால்சியம் மோரில் ஏராளமாக உள்ளது. மோரில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கிறது. மோரில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன.நோயெதிர்ப்பு, வளர்சிதை மாற்றத்தில்,முக்கிய பங்கு வகிக்கிறது.மோரில்இரத்த அழுத்த அளவை பராமரிக்கவும், தசை மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டை ஊக்கப்படுத்தவும், பொட்டாசியம் உள்ளது. செரிமான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.மோரில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.மோரில் உள்ள கலோரிகள் மற்ற உணவுகளை ஒப்பிடும் போது குறைவாக உள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்களுக்கும், இருக்கும் எடையை சீராக்க விரும்புபவர்களுக்கும் ஏற்ற உணவாக உள்ளது.
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - கால் கப், பச்சரிசி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் -2. இஞ்சி -ஒரு துண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன். உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிது.செய்முறை: பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஒரு மணிநேரம் ஊறப் போடுங்கள். தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம். உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து காயும் எண்ணெயில் சிறு வடைகளாக தட்டி போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், புளிக்காத புது தயிர்ஒரு கப், பால் கால் கப், உப்பு - ருசிக்கேற்ப, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், காராபூந்தி (அ) ஓமப்பொடி (விருப்பத்துக்கேற்ப) சிறிது, எண்ணெய்- தேவையான அளவு, கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: முந்திரிப்பருப்பு 4, பச்சை மிளகாய் சீரகம் கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன். செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நைஸாக அரைத்தெடுங்கள். கால் கப் தயிரை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தயிரில் அரைத்த விழுதைக் கலந்து, கடுகு பொரித்து கொட்டுங்கள். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். ஒன்றேகால் கப் தயிருடன், பால், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.ஊறிய உளுந்தை மெத்தென்று அரையுங்கள்.. உப்பு சேர்த்து கலந்து, பிறகு வழித்தெடுங்கள்.. எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்து தயிர், பால் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊற விட்டு, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள் (ஒன்றின் மேல் ஒன்று படாமல்).அரைத்த விழுது கலந்துள்ள தயிரை அதன் மேல் சுற்றிலும் ஊற்றுங்கள். அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, துருவிய கேரட், மிளகாய்தூள், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு ஒரு கப், பொடியாக நறுக்கிய கோஸ் ஒரு கப், இஞ்சி -ஒரு துண்டு, பச்சை மிளகாய் 2. கறிவேப்பிலை - சிறிது, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:- உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ். இஞ்சி,மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய்- தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் - 2 கப், புளித் தண்ணீர் - அரை கப், தக்காளி சாறு (வடிகட்டியது) - அரை கப், பழுத்த தக்காளி 1, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, பெருங்காயம் - அரை டீஸ்பூன்.பொடிக்க: மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது. - தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.செய்முறை:- உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள். பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து. ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்).
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவைக்கு. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப்,. பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு. சாம்பாருக்கு: துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் 1. தக்காளி - 3, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு. உப்பு ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். வறுத்துப் பொடிக்க: தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.செய்முறை:-உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.துவரம்பருப்பை. மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும். தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங் காயம். கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து. சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள்.சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து. ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள். பரிமாறும்பொழுது. சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்..
தேவையான பொருட்கள்- குட மிளகாய் 1 சிறியது (நறுக்கியது) கோதுமை மாவு 3/4 கப், கடலை மாவு 3/4 கப், கான் பிளவர் சோள மாவு 1/4 கப், ராகி மாவு 1/4 கப், இஞ்சி 1/4 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது, சீரக தூள் 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன், மிளகு தூள் பெப்பர் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. கீரை3 கப், பாலக்கீரை, முருங்கைக் கீரை, பொடியாக நறுக்கி வதக்கவும் .எந்த வகை கீரை இருந்தாலும் போடலாம் அல்லது இரண்டு வகை கீரை இருந்தாலும் கலந்து செய்யலாம்.செய்முறை- முதலில் நான்கு விதமான மாவுகள் , கீரை, குடமிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில்போட்டுதேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைய வேண்டும்.பின் இஞ்சி சீரகத்தூள் கரம் மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து தோசை மாதிரி வார்த்தால் சத்தான கீரை அடை ரெடி.