25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கேரளா, கொல்லம் அருகே சடையமங்கலத்தில் உள்ளஉலகின் மிகப் பெரிய பறவை சிற்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேரளா, கொல்லம் அருகே சடையமங்கலத்தில் உள்ளஉலகின் மிகப் பெரிய பறவை சிற்பம்.

ராமாயண கதையில், சீதையைக் காக்க, ராவணனுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த பறவை ஜடாயு, மிகப்பெரிய சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.உலகில் மிகப்பெரிய பறவை சிற்பம் கேரளா, கொல்லம் அருகே சடையமங்கலத்தில் உள்ளது.இது, 200 அடி நீளம், 150 அடி அகலம்,70 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சிதருகிறது. பிரபல சிற்பி ராஜீவ் அஞ்சல்,10 ஆண்டுகள் உழைப்பில் உருவாகியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் மரியாதை தரும் வகையில் அமைந்துள்ளது.

ஜடாயு எர்த் சென்டர் என்ற அமைப்பு இதை,65 ஏக்கர் பரப்பில் உருவாக்கியுள்ளது. நான்கு மலைகளில் பரந்து விரிந்துள்ளது. முதல் மலையில் ஜடாயு சிற்பமும், அருங்காட்சியகமும், காட்சியரங்கம் ஒன்றும் உள்ளன. இரண்டாம் மலை,சாகச விளையாட்டுகளுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு பெயிண்ட் பால், கயிறு பாலம், பாறை ஏறுதல், டிரெக்கிங் போன்ற சாகச விளையாட்டுகளை அனுபவிக்கலாம்.

மூன்றாவது மலை, ஆயுர்வேத சிகிச்சை மையமாக உள்ளது. நான்காம் மலைஉணவு தயாரிப்பு மற்றும் முகாம் நடத்தும் விதமாக அமைந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு, சூரிய ஆற்றல் மின் தயாரிப்பு போன்ற நவீன அமைப்புகள் இங்கு செயல்படுகின்றன.

பிரமாண்டமான ஜடாயு சிற்பத்திற்கு செல்ல, கேபிள் கார் வசதி உள்ளது. இதில் பயணிப்பது, இயற்கை அழகை ரசிக்க அற்புத வாய்ப்பாகவும் அமையும். இங்கு,826 படிகள் வழியாக நடந்தும் செல்லலாம். திருவனந்தபுரம் நகரில் இருந்து,46 கி.மீ., தொலைவில் உள்ளது. புராணம், இயற்கை, சாகசம், ஆன்மிக அனுபவங்களின் கலவையாக திகழ்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News