சிகப்பு அவல் கார கொழுக்கட்டை.
தேவையானவை -
ஒரு கப் சிகப்பு அவல்,உப்பு தேவையான அளவு,எண்ணை தேவையான அளவு,1 பெரிய வெங்காயம்,2 பச்சைமிளகாய்,ஒரு டீஸ்பூன்கடுகு,அரை டீஸ்பூன்சீரகம்,ஒரு டீஸ்பூன்கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன்உளுத்தம்பருப்பு,இஞ்சி சிறிய துண்டு,கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிதளவு,அரை மூடிதுருவிய தேங்காய்
செய்முறை
சிகப்பு அவல் கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான உணவு.
சிகப்பு அவலை சுத்தம் செய்து கழுவிய பின் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ,இஞ்சி, இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், கருவேப்பிலை ,வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ,இவற்றை தாளித்து கொள்ளவும். இதனுடன் துருவிய தேங்காய் சற்று வதக்கி கொள்ளவும்.
அவலை நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும் .தாளிப்பை மற்றும் உப்பு சேர்த்து, வடித்த அவலுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
தாளித்துச் சேர்த்த அவலை கொழுக்கட்டையாக பிடித்து ,இட்லி பானையில் வைத்து10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.10 நிமிடத்திற்கு பிறகு சிவப்பு அவல் கார கொழுக்கட்டை எடுத்துப் பரிமாறவும்.
0
Leave a Reply