25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூடும் சங்கமம் விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூடும் சங்கமம் விழா

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூடும் சங்கமம் விழா முன்னாள் மாணவர்கள் சங்க கலையரங்கில் வைத்து நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலர் சோமசுந்தரம் வரவேற்புரையாற்றினார்‌. தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். சங்கப் பொருளாளர் வெங்கடேஸ்வரன் மாணவர் சங்க குறிப்புரை வழங்கினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் ராமகிருஷ்ணன் மதிப்புரை வழங்கினார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பலரும் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். சங்கத்தின் திட்ட பணிகள் குறித்து துணைத் தலைவர் குமார் ராஜா விளக்கிப் பேசினார். இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், வேலைவாய்ப்பு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக சங்கம ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெகநாத் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் 450 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News