மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்காக இந்த பூமிப்பந்தின் நிலப்பரப்பில் இருந்த,பசுமையான மரங்களில்46 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மரங்கள் நிழல் மட்டும் தரவில்லை, மாறாக மரங்கள் காற்றை சுத்திகரித்து, காலநிலை மாற் றத்தை குறைக்க போராடுகின்றன. அதாவது, காடுகளின் மரங்கள் வளிமண்டலத்தில் இருக்கும் கார் பன் என்ற கரியமில வாயுவை உறிஞ்சி, மனிதன் சுவாசிக்க தூய் மையான பிராண வாயு என்னும் ஆக்சிஜனை தருகின்றன. மனிதன் கரியமிலவாயுகலந்த காற்றை சுவா சித்தால் மூச்சுத்திணறல் முதற ஏற்படும் ்றுநோய்வரை ஏற்படும் எனமருத் துவ ஆய்வுகள் கூறுகின்றன.பூமியிலஇருக்கும் மரங்கள் சுற்றுச்சூழல் கரியமில வாயுவின் அளவில் 30 சதவீதம் அளவுக்கு உறிஞ்சி, காற் றில் கலந்திருக்கும் மாசுவை கட் டுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறு கின்றன. மரங்களின் எண்ணிக் கையை அதிகரிக்கும்போது சுற்றுச் சூழலில் இருக்கும் பெருமளவு கரியமில வாயுவை மரங்கள் உறிஞ்சி சுத்தப்படுத்திவிடும். இத னால், மனிதன் தூய்மையான பிராண வாயுவை சுவாசிக்க முடி யும். பூமியில் உள்ள அனைத்து தாவரங்கள். மற்றும் விலங்குகளில் 50 சதவீதம் காடுகளில் உள்ளன.மரங்கள் ட்டப்பட்டு காடுகளி பரப்பளவுகுறைந்து போனால் மனித வாழ்க்கை பல்வேறு சிக்கல்களை சந்திக்கும். இதனை உணர்ந்த பல் வேறு நாடுகளும் தற்போது மரங் களை நகரம், கிராமம் என்ற பாகு பாடு இல்லாமல் எங்கும் வளர்ப்பதில் முனைப்புடன் இறங்கி உள்ளன .
தாவரங்கள் சூரிய ஒளியில் இருந்து உணவை தயாரித்து கொள்கின்றன. ஆனால், சில வகை தாவரங்கள் பூச்சிகள், சிறிய இந்த வகை தாவரங்கள் கார்னிவோர்ஸ் அல்லது இறைச்சி உண் மணிகள் என்று அழைக்கப்படுகின்றன.இந்த அசைவ தாவரங்களானது, பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகளில் கிடைக்கும் சுவையான ஊட்டச்சத்துக்களை உண்பதற்காக மிகவும் தந்திரமாக அவற்றை பிடித்து விடுகின்றன.தாவரவியலாளர்கள் ஆராய்ச்சியில் சுமார் 630 வகையான இறைச்சி உண்ணி தாவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.இதில், பெரும்பாலானவை பூச்சிகள், மீன்கள், கொசு லார்வாச் கள் மற்றும் சிறிய மீன்களை உண்கின்றன. ஆனால், பெரிய அளவில் காணப்படும் தாவரங்களானது பாம்புகள் போன்ற ஊர்வன எலிகள் போன்ற உயிரினங்களை பிடித்து இறுக்கி, அவற்றை ஜீரணிக்கும் திறன் கொண்டவை.இயல்பான தாவரங்கள் சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் எல்லாம் வளரக்கூடியவை. இறைச்சி உண்ணி தாவரங்களின் வாழ்விடங்கள் என்பது அதன் உணவுகள் கிடைக்கும் சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், நீர்வழிகள், காடுகள் மற்றும் மணல் சார்ந்த இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே வளர்கின்றன. அண்டார்டிகா தவிர மற்ற கண்டங்களில் இறைச்சி உண்ணி தாவரங்கள் காணப்படுகின்றன.இவ்வகைதாவரங்கள், தமக்கான இரையை பொறிகளில் இழுக்க அதிக மணம் கொண்ட ஒரு வகை தேனை உற்பத்தி செய்கின்றன மேலும், இந்த தாவரங்கள் தன் இலைகளை பூக்கள் போன்ற வடி விலும் நிறத்திலும் மாற்றி அமைக்கின்றன.இலையின் உள் நுனியில் வழுக்கும் திரவமும் காணப்படும். இதனை பூக்கள் என்று கருதி வரும் வண்டுகள், பூச்சிகள் இந்த இ லைகளின் உள்ளே வந்து சிக்கி மடிந்து போகின்றன. இயற்கையின் மர்மங்களில் இறைச்சி உண்ணி தாவரங்கள் அதிசயிக்கத் தக்க ஒன்றாகும்.
கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : புளி, புங்கன், நாவல், சவுக்கு ,வேம்பு, வாகைவண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : தேக்கு, மூங்கில், வேம்பு ,கருவேல் ,சவுண்டல் புளிகளர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : குடை வேல், வேம்பு,புளி, பூவரசு ,வாகைஉவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : சவுக்கு, புங்கன், இலவம், புளி, வேம்புசதுப்பு நிலம்,ஈரம் அதிகம் உள்ள நிலம்- பெரு மூங்கில், நீர் மருது, நாவல், இலுப்பை புங்கன்வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள்-, ஆயிலை, பனை, வேம்பு ,குடைவேல் ,செஞ்சந்தனம்அமில நிலம் : குமிழ், சில்வர் ஓக் சுண்ணாம்பு படிவம் உள்ள மண் : வேம்பு, புங்கன் புளி வெள்வேள் சுபாபுல்குறைந்த அழமான மண் : ஆயிலை, ஆச்சா, வேம்பு, புளி, வாகை பனைகளிமண்ணுக்கு ஏற்ற மரங்கள் : வாகை ,புளி ,வேம்பு, புங்கன், சுபாபுல் ,நெல்லி ,கரிமருது, கருவேல்.
ஆடி, மாசி ஆகியபருவகாலங்கள் உளுந்துசாகுபடிக்கு ஏற்றபருவகாலங்கள் ஆகும்.வெப்பம் மற்றும் மிதவெப்பமண்டலங்களில் உளுந்துபயிர் அதிகமாகசாகுபடி செய்யப்படுகிறது.நல்ல வடிகால் வசதிகொண்ட வளமானமண் உளுந்துசாகுபடிக்கு ஏற்றது. அதேபோல் உளுந்துஎல்லா வகைமண்ணிலும் சாகுபடிசெய்தாலும் வண்டல்மண், உளுந்துசாகுபடிக்கு மிகவும்சிறந்தது.டிஎம்வி 1, டி 9 மற்றும்கோ9 ஆகியஇரகங்கள் உளுந்துசாகுபடிக்கு மிகவும்ஏற்ற இரகங்கள்ஆகும்.ஒரு ஏக்கருக்கு8 கிலோவிதைகள் உளுந்துசாகுபடிக்கு போதுமானது.ஆறிய அரிசி வடிகஞ்சியுடன்200 கிராம் அளவுஅடுப்பு சாம்பலைநன்றாக கலந்துஇவற்றை8 கிலோவிதைகளுடன் கலந்துகொள்ளனும்.உயிர் உரவிதை, நேர்த்திசெய்யரைசோபியம்200 கிராம்,பாஸ்போபாக்டிரியா200 கிராம் ஆகியவற்றைஆறிய வடிகஞ்சியில்கலந்து விதைநேர்த்தி செய்து,நிழலில் உலர்த்திவிதை நேர்த்திசெய்யவேண்டும்.இரண்டு முதல் மூன்றுமுறை நிலத்தைபுழுதிப்பட உழுதுநிலம் தயார்செய்ய வேண்டும்.செடிக்குச் செடி ஒருசெ.மிஇடைவெளியும், வரிசைக்குவரிசை 10 செ.மி இடைவெளியும்விட வேண்டும்.உளுந்து சாகுபடி: விதைப்பதற்குமுன் அடியுரமாகமானாவாரிப் பயிராகஇருந்தால் ஏக்கருக்கு12.5 கிலோ தழைச்சத்து,25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல்சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்துஇடவேண்டும். இறவைப்பயிராக இருந்தால்ஏக்கருக்கு 25 கிலோதழைச்சத்து, 50 கிலோமணிச்சத்து, 50 கிலோசாம்பல் சத்துமற்றும் 20 கிலோகந்தகச்சத்து இடவேண்டும்.மானாவாரி மற்றும் இறவைப்பயிர்களுக்கு டைஅம்மோனியம் பாஸ்பேட்2 சதவீதம் அல்லதுயூரியா2 சதவீதம்பூக்கும் தருணத்திலும்பின்பு15 நாள்கழித்தும் தெளிக்கவேண்டும்.உயிர் உரமாக ரைசோபியம்2 கிலோ, பாஸ்போபாக்டீரிய2 கிலோ ஆகியஉயிர் உரத்துடன்,50 கிலோ ஈரப்பதம்உள்ள மக்கியதொழு உரத்துடன்கலந்து அடியுரமாகஇடவேண்டும்.நடவு செய்த15ம்நாள் ஒருமுறையும், பின்பு30ம் நாள்ஒரு முறையும்களை நிர்வாகம்கண்டிப்பாக செய்யவேண்டும். பயிர்சாகுபடியில் சரியானதருணத்தில் களைநிர்வாகம் செய்யாமல்இருந்தால், கண்டிப்பாகபயிர் வளர்ச்சிபாதிக்கப்பட்டு மகசூல்குறைந்து விடும். எனவே சரியானதருணத்தில் களைநிர்வாகம் செய்யவேண்டியது மிகவும்அவசியம்.விதை முளைக்கும் பருவம்,பூ பூக்கும்பருவம், காய்வளர்ச்சி பருவம்ஆகிய பருவங்களில்கண்டிப்பாக பயிர்களுக்குநீர் நிர்வாகம்செய்ய வேண்டியதுஅவசியம்.முதிர்ந்த காய்களைப் பறித்துஉலர்த்த வேண்டும்.அறுவடை செய்யும்போதுபயிர்களை வேரோடுபிடுங்க வேண்டும்.இல்லையெனில் முழுதாவரத்தையும் வெட்டிஎடுக்க வேண்டும்.பின்னர் குவித்துவைத்து உலர்த்திபயிர்களை பிரிக்கவேண்டும்.
2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியைப் பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ் அறிவித்துள்ளது.சமீபத்தில் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட சிறந்த உணவுகள் கொண்ட 100 நாடுகளில், இந்தியாவுக்கு 11ஆவது இடம் அளித்திருந்தது.நீளமான, தனித்துவமான சுவை, வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி. இந்தியத் துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது.இந்தியாவில் மட்டும் சுமார் 34 பாஸ்மதி அரிசி ரகங்கள் பயிரிடப்படுகிறது.பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்ச்சுக்கலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1.வேளாண்மைத் திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய - www.tnagrisnet.gov.in2.தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்கள் அறிய - www.tnau.ac.in3.தோட்டக்கலை பயிர்கள், திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய - www.tnhorticulture.tn.gov.in4. விதைகள் தொடர்பான தகவல்கள் அறிய - www.seedtamilnadu.com5. வேளாண் எந்திரங்கள் தொடர்பான தகவல்கள் அறிய - www.aed.tn.gov.in6 வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள- www.13fpedia.com7 அங்ககச் சான்று தொடர்பான தகவல்கள் அறிய - www.tnocd.net.
ரோஜா வகைகளில் பன்னீர் ரோஜா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனுடைய மணமும், குணமும் விசேஷமான தன்மை உள்ளது. பன்னீர் ரோஜாவை கொண்டு பல்வேறு வாசனை திவிரயங்கள் தயார் செய்யப்படுகின்றன. பன்னீர் பல மருத்துவ விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பன்னீர் ரோஜா பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் நம்முடைய கண்களுக்கு குளிர்ச்சிபடுத்துவதாக அமைந்திருக்கிறது.நாம் நர்சரிகளில் வாங்கும் பன்னீர் ரோஜா வாங்கிய புதிதில் பெரிய பெரிய மொட்டுக்களும், நிறைய பூக்களும் பூத்திருக்கும். ஆனால் வீட்டிற்கு வாங்கி வந்தவுடன் பார்த்தால் புதிதாக மொட்டுக்களும் நிறைய வைப்பதில்லை. நர்சரிகளில் செயற்கையாக கொடுக்கப்படும் உரங்களினால் செடிகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் இருக்கின்றன. அதை நாம் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கும் பொழுது அந்த அளவிற்கு நிறைய மொட்டுக்கள் வைப்பதில்லை. இதற்கு இரண்டு வகையான டிப்ஸ்கள் உள்ளன. அதை சரியாக செய்து வந்தாலே ஒவ்வொரு கிளையிலும் அதிகம் மொட்டுக்கள் வைக்கத் துவங்கி விடும். செடி முழுவதும் கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்கும்பன்னீர் ரோஜா மட்டுமல்ல எந்த வகையான ரோஜா செடிகளுக்கும் இந்த பராமரிப்பை கட்டாயம் செய்ய வேண்டும். ஒருமுறை மொட்டுக்கள் வைத்த கிளையில் திரும்பவும் மொட்டுகள் வரவில்லை என்றால் அந்த கிளையை வெட்டி விட வேண்டும். அந்தக் கிளையின் அடிபாகத்தில் இலைகள் துளிர்க்காது. இதை வைத்தே அந்த கிளையை தேவையில்லாத கிளை என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.அந்தக் கிளையை மட்டும் முக்கால் பாகத்தில் வெட்டிவிட்டு கால் பாகத்தை அப்படியே விட்டு விடுங்கள். அதிலிருந்து புதிய கிளை பச்சையாக மீண்டும் முளைக்கத் தொடங்கிவிடும். புதியதாக வரும் கிளையில் நிறைய மொட்டுக்கள் பூக்கும். வாரம் ஒரு முறை இதற்கு ஊட்டச் சத்தான உரத்தை நாம் கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்று. பன்னீர் ரோஜா செடிக்கு நாம் நர்சரிகளில் காசு கொடுத்து உரத்தை வாங்கி போடுவதை விட வீட்டிலேயே வேண்டாம் என்று தூக்கி எறியும் சில பொருட்களை வைத்து உரம் கொடுத்தால் நன்றாக செழித்து வளரும்.அன்றாடம் சமையல் செய்யும் பொழுது கிடைக்கும் காய்கறிகளுடைய தோல் மற்றும் பழங்களின் தோல் இவைகளில் இருக்கும் அதிக சத்துக்கள் பன்னீர் ரோஜா செடி சிறப்பாக வளர உதவியாக இருக்கும். வெங்காய தோல், பூண்டு தோல், பழங்களின் தோல்கள் இவற்றை தனித்தனியாக சேகரித்துவாரம் ஒருமுறை உங்களுடைய பன்னீர் ரோஜா செடி வைத்திருக்கும் தொட்டியில் வேர் பகுதி அடி படாதவாறு ஓரங்களில் பள்ளம் தோண்டி சேகரித்த தோல்களைப் போட்டு மண்ணை மூடி வைத்து விடவும். மண்ணைத் தோண்டும் போது உள்ளே வேர்ப்பகுதி அடிபட்டால் செடி காய்ந்து போய் விடும். ஓரிரு நாட்களில் நீங்கள் வைத்த தோல் கழிவுகள் உரமாகி விடும். இதனை வாரம் ஒரு முறை செய்ய செடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும். இந்த இரண்டு வேலைகளையும் சரியாக செய்து விட்டால் போதும். புதியதாக முளைக்கும் ஒரே கிளையில் 10 மொட்டுக்கள் கூட கொத்து கொத்தாக விரைவிலேயே விட்டுவிடும். சிறிய செடியாக இருந்தாலும் நிறைய பூக்கள் கொடுக்கும்.
வீடுகளில் 2 செண்பகமரங்களைவளர்த்தால்சொர்க்கத்தை காணலாம்எனபுராணகதைகள்கூறுகின்றன.உண்மையில், கண்களைகவரும் மஞ்சள் நிறமும், மனதை மயக்கும் ஒரு வித மணமும் கொண்ட செண் பக பூக்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மேற்குத்தொடச்சி மலைக்காடுகளில் இயற்கையாக வளர்ந்து கிடக்கும் ஒரு அழகிய குறுவகை தாவரம் ஆகும்.தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பா லான சிவ தலங்களில் செண்பக மரம் தலவிருட்சமாக காணப்படுகிறது. பொதுவாக, கோவில்களில் தல விருட்சமாக இருக்கும் மரங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், மருத்துவ குணங்கள் நிரம்பிய மரங்களாகவும் இருப்பதற்கு காரணம், முன்னோர்கள் அவற்றின் அபூர்வமான மருத்துவ குணங்களை அறிந்து அவற்றை காக்க வேண்டும். என்று இறைவனுக்கு அருகில் அவற்றை வைத்து பராமரித்தது தான்.செண்பக மரம் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் ஆற்றலை பெற் றுள்ளது. இதன் இலைகள் நீண்டும், இலைகளின் மேற்புறம் பசுமையாக, ரோமங்கள் அடர்ந்து காணப்படு கிறது. இந்த இலைகள் காற்றில் கலந்திருக்கும் தூசி துகள்களை வடிகட்டி தூய காற்றை தருகிறது.செண்பக மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது. இதன் இலைகளை நிழலில் உலர்த்தி தேநீர் ஆக குடித்து வந்தால் வயிற்று கோளாறுகள் சரியாகும், பசியின் மையை போக்கி பசியைத்தூண்டும். இன்றைய காலத்தில் பெருமளவு காணப்படும் அல்சர் என்னும் வயிற்றுப் புண்களை ஆற்றும். இதன் துவர்ப்பு தன்மை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.
வாரம் ஒரு முறை சிறிதளவு எப்சம் உப்பை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம் செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம் சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும்.முட்டை ஓடுகளை காய வைத்து நன்கு தூளாக்கி போட வேண்டும் இதில் இருக்கும் கால்சியம் செடிகளுக்கு நல்ல உரமாகும்4 ஸ்பூன் வினிகர் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊற்றவேண்டும்அலங்கார மீன் தொட்டியில் தண்ணீர் மாற்றும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரை செடிகளுக்கு ஊற்றலாம் செடிகள் செழிப்பாக வளரும்சாம்பல் சிறந்த உரம் கிடைத்தால் போடலாம்ஓக் மர இலைகள் அல்லது வேப்பமர இலைகளை வாளியில் உள்ள நீரில் போட்டு வெயிலில் வைக்கவேண்டும் நீரின் நிறம் நன்றாக மாறியதும் குளிர வைத்து செடிகளுக்கு ஊற்றலாம்காய்கறி கழிவுகளை செடியின் அடியில் போட்டு வரலாம்.
1. கருப்புகவுணி அரிசி -புற்று நோய் வராது. இன்சுலின் சுரக்கும்.2. மாப்பிள்ளை சம்பா அரிசி- நரம்பு, உடல் வலுவாகும் ஆண்மை கூடும்.3. பூங்கார் அரிசி - சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்4. காட்டுயானம் அரிசி - நீரழிவு, மலச்சிக்கல், புற்று நோய் சரியாகும்5.கருத்தார் அரிசி - மூலம், மலச்சிக்கல் சரியாகும்6. காலா நமக் அரிசி -மூளை நரம்பு,இரத்தம் சீறுநீரகம், சரியாகும்7. மூங்கில் அரிசி - மூட்டுவலி முழங்கால் வலி சரியாகும்8. அறுபதாம் குறுவை அரிசி - எலும்பு சரியாகும்9. இலுப்பை சம்பா அரிசி - பக்கவாதம், கால் வலி சரியாகும்10. தங்கச்சம்பா அரிசி -பல் இதயம் வலுவாகும்11. கருங்குருவை அரிசி - இழந்த சக்தியை மீட்கும். கொடிய நோய்கள் குணமாகும்12. கருடன் சம்பா அரிசி - இரத்தம், உடல்; மனம் சுத்தமாகும்13 கார் அரிசி - தோல் நோய் சரியாகும்14. குடை வாழை அரிசி - குடல் சுத்தமாகும்.15 கிச்சி சம்பா அரிசி - இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அதிகம்.16. நீலம் சம்பா அரிசி - இரத்த சோகை நீங்கும்17. சீரக சம்பா அரிசி - அழகு தரும், எதிர்ப்பு சக்தி கூடும்18. தூயமல் அரிசி - உள் உறுப்புகள் வலுவாகும்19. குழியடிச்சான் அரிசி - தாய்ப்பால் ஊறும்20. சேலம் சன்னா அரிசி - தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்21. பிசினி அரசி - மாத விடாய் இடுப்பு வலி சரியாகும்22. சூரக்ககுறுவை அரிசி - பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்23. வாலான் சம்பா அரிசி - சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும் இடுப்பு வலுவாகும்24. வாடன்சம்பா அரிசி வரும் அமைதியான தூக்கம் வரும்.