விஷால் சதுர்வேதி இயக்கத்தில் இந்தியில் ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான ‘ஹனுமான் அன்ஸ்’ திரைப்படம் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறது.உள்நாட்டு பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூ.329.61 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டின் உள்நாட்டு வசூலில் சன்னி தியோலின் ‘பார்டர் 2’ படத்தை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.
தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான செழியன் (57) சமீபத்தில் காலமானார்.அவர் இறப்பதற்கு முன் இயக்கி, ஒளிப்பதிவு செய்த 'காகிதமலர்' திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் 'ஆசியன் பியூச்சர்' பிரிவிலும், போட்டிப் பிரிவிலும் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை' பிரதமர் மோடி அக்டோபர் 11 அன்று திறந்து வைக்கிறார்.சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கி வைப்பதோடு, இம்மையத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார். இந்த ஆராய்ச்சி மையம், இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை சாய் பல்லவி தமிழில் கடந்த 8 ஆண்டுகளில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ள நிலையில், தற்போது பல பெரிய படங்களில் நடித்து வருகிறார்:'ஓம்':ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி நடிப்பில் நவம்பர் 20-ல் வெளியாகிறது.'ராமாயணா':ரன்பீர் கபூர் ஜோடியாக ஹிந்தியில் நவம்பர் 6-ல் வெளியாகிறது.மணிரத்னம் இயக்கத்தில் 'இஞ்சி வெல்லம்' படத்திலும் நடித்து வருகிறார்.இந்த பான் இந்தியா படங்கள் மூலம் தமிழில் தனது மார்க்கெட்டை மீண்டும் தீவிரமாகப் பிடிக்க அவர் எதிர்பார்த்துள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடித்து ஹிட்டான 'திரிஷ்யம் 3', ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் அபிஷேக் பதக் இயக்கத்தில் 'திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.அக்டோபர் 2 அன்று வெளியான இப்படம், முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ. 80 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 15 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ. 95 கோடியை வசூலித்துள்ளது.முதல் நாள் வசூலில் அதிக வசூல் ஈட்டிய ஹிந்தி படங்களில் 'துரந்தர் 2' படத்திற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தை பிடித்துள்ளது.
ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' விரைவில் வெளியாகவுள்ளதால், இந்த வாரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.அதற்குப் பதிலாக அக்டோபர் 9 அன்று "ஆல் பாஸ், இ 1, கிட்டி, பருந்து, நோவா, தாய் நிலம்" ஆகிய 6 சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள 'பெஸ்ட் ஆப் தி பெஸ்ட்' (Best of the Best) என்ற அமெரிக்க ஆங்கிலப் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான 'என்ஜாய் எஞ்சாமி' மற்றும் 'மாமதுர' ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. லீனா ஹான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் ஒரு நடனக் குழுவைப் பற்றிய கதையாகும்
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், நம்பியார் நடிப்பதுடன் கடந்த மாதம் 10-ல் வெளியான படம் 'மண்டாடி'.திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியும், உலகளவில் ரூ. 150 கோடியும் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது நடிகர் சூரிக்குக் கிடைக்கும் முதல் ரூ. 100 கோடி படமாகும்.
இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'பௌசி' திரைப்படம் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1940-களின் சுதந்திரப் போராட்ட காலத்தை பின்னணியாகக் கொண்ட காதல் கதையாக உருவாகும் இப்படத்தில், இமான்வி நாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
ஹரி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் ‘பீல் மை லவ்’ திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், அவரது மகன் ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜ் அய்யப்பா, மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் தயாராகிறது. வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் அதிசயம் நிகழலாம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இது உருவாகிறது.