25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jun 25, 2026

விடுமுறையை குறிவைத்து 5 படங்கள் திரைக்கு வருகை.

2026-ம் ஆண்டின் முதல் அரையாண்டு நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதால், ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பல புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.அந்த வகையில், "அந்தரன்", "அனந்தன் காடு", "அங்கீகாரம்", "கான்சிட்டி", "ப்ராமிஸ்" உள்ளிட்ட ஐந்து திரைப்படங்கள் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளன. இதில் நடிகர் ஆர்யா நடித்துள்ள "அனந்தன் காடு" தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.

Jun 25, 2026

முதல் நாளிலேயே வசூல் வேட்டை: சூர்யாவின் 'கருப்பு' மாஸ் தொடக்கம்.

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான "கருப்பு" திரைப்படம், பல்வேறு தயாரிப்பு மற்றும் வெளியீட்டு சவால்களை கடந்து மே 15-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.20.66 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவும், த்ரிஷாவும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பல திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

Jun 25, 2026

சமந்தாவின் வெற்றியை கொண்டாடிய நயன்தாரா.

நடிகை சமந்தா நடித்து, தயாரித்துள்ள "மா இன்ட்டி பங்காரம்" (தமிழில் "எங்கள் தங்கம்") திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தை பார்த்து பல்வேறு திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்."உனக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சாம். அன்பிற்கும் வெற்றிக்கும் நீ முழுமையாக தகுதியானவள். இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று நயன்தாரா பதிவிட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, "என் அன்பிற்குரிய நயன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Jun 25, 2026

'இரண்டு வானம்' என்னை கண்கலங்க வைத்தது – விஷ்ணு விஷால்.

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள "கட்டா குஸ்தி 2" திரைப்படம் ஜூலை 3-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள "இரண்டு வானம்" திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.படம் குறித்து பேசிய விஷ்ணு விஷால், "முழு படத்தையும் பார்த்தபோது என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக உழைத்துள்ளேன். காதல், வலி, உறவுகள் என பல உணர்வுகளை கொண்ட இந்தப் படத்தை ரசிகர்களும் ஆழமாக உணர்வார்கள்" என்று தெரிவித்தார்.

Jun 18, 2026

இந்த வாரம் தமிழில் வெளியாகும் படங்கள்.

கடந்த வாரத்துடன் இதுவரை தமிழில் வெளியான படங்கள் எண்ணிக்கை 108ஐ கடந்துவிட்டது. இந்தவாரம் ஜூன் 19ல், "டார்க் ஜெயன்ட், மக்கள் தலைவா, மனு, பதினென் கீழ்க்கணக்கு, நூறு சாமி" ஆகிய 5 படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றில் நூறு சாமி படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. தவிர சமந்தாவின் மா இண்டி பங்காரம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் ரிலீஸாகிறது.

Jun 18, 2026

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜில்லா', 'மெர்சல்' ரீ-ரிலீஸ்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜில்லா'மற்றும் 'மெர்சல்' திரைப்படங்கள் ஜூன் 19ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jun 18, 2026

செவிலியர் சீருடையில் மாற்றம் தேவை: கங்கனா ரணாவத்.

நடிகை கங்கனா ரணாவத், மருத்துவத் துறையில் செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பயன்படுத்தப்படும் செவிலியர் சீருடை ஆங்கிலேயர் காலத்தின் தாக்கத்தை கொண்டதாகவும், இந்தியாவின் காலநிலைக்கு ஏற்ற வகையில் அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு சீருடையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Jun 18, 2026

ஜூன் 19ல் ரிலீஸ். தமிழில் 'எங்கள் தங்கம்'எம்ஜிஆர் பட டைட்டிலில் சமந்தா.

தெலுங்கில் சமந்தா தயாரித்து கதை யின் நாயகியாகவும் நடித்துள்ள படம் 'மா இண்டி பங்காரம்'. நந்தினி ரெட்டி இயக்கி உள்ளார். இந்த படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் ரிலீஸாகிறது. இது எம்ஜிஆர் நடித்த படத்தின் தலைப்பாகும். மாமியார் வீட்டை பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ஆக்ஷன் மருமகளாக சமந்தா நடித்துள்ளார்.

Jun 18, 2026

8 படங்கள் – 6 புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகம் செய்த இயக்குனர் சசி.

‘சொல்லாமலே’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சசி, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19ல் வெளியாக உள்ளது. இதுவரை அவர் இயக்கிய 8 படங்களில் 6 புதிய இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவை: ‘சொல்லாமலே’ – பாபி, ‘டிஷ்யூம்’ – விஜய் ஆண்டனி, ‘பூ’ – எஸ்.எஸ். குமரன், ‘555’ – சைமன் கே. கிங், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ – சித்து குமார், மற்றும் தற்போது ‘நூறு சாமி’ – பாலாஜி ஸ்ரீராம்.

Jun 18, 2026

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘திரிஷ்யம் 3’

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.330 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் புதிய நம்பர் 1 சாதனையை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா’ ரூ.303 கோடி வசூலித்திருந்த நிலையில், அதனை ஓராண்டிற்குள் ‘திரிஷ்யம் 3’ முறியடித்துள்ளது

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 89 90

AD's



More News