25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வெள்ளித்திரை

Sep 24, 2026

மீண்டும் இணையும் சசிகுமார் – சமுத்திரக்கனி.

நண்பர்களான சசிகுமாரும், சமுத்திரக்கனியும் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் இருவருக்கும் விருதுகள் கிடைத்தன.இந்த நிகழ்வில், இருவரும் இணையும் புதிய படத்தையும் அறிவித்துள்ளனர். ‘ஸ்கூல் பஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார். சசிகுமார், கிச்சா சுதீப், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. பள்ளிப் பருவத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், அதன்பிறகு வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு கதை உருவாகிறது.

Sep 24, 2026

மலையாளத்தில் 2-வது ரூ.300 கோடி வசூல் படம்.

துல்கர் சல்மான் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முதன்முறையாக நடித்த ‘லோகா சாப்டர் 1’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. மலையாளத் திரையுலகில் ரூ.300 கோடி வசூல் செய்த முதல் படமாக இது அமைந்தது.தற்போது மலையாளத்தில் 2-வது ரூ.300 கோடி வசூல் படமாக கடந்த மாதம் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் உருவெடுத்துள்ளது.கிரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பஹத் பாசில் தயாரித்துள்ளார்.

Sep 24, 2026

இந்த வார ரிலீஸ் படங்கள் லிஸ்ட்.

கடந்த வாரம் தமிழில் 10 திரைப்படங்கள் வெளியாகின. அவற்றில் பல படங்கள் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.செப்டம்பர் 25-ம் தேதி இந்த வாரம் அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’, கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’, கங்கை அமரனின் ‘லெனின் பாண்டியன்’, ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’, ‘இ1’, ‘கிராண்ட் மாஸ்டர்’ உள்ளிட்ட 6 படங்கள் வெளியாகின்றன.தெலுங்கு திரைப்படமான நானியின் ‘தி பாரடைஸ்’ செப்டம்பர் 24-ம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

Sep 24, 2026

கின்னஸ் சாதனை படைத்த ‘ராக்கா’.

அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே நடிப்பில் ‘ராக்கா’ திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக இப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பில் 37 கலைஞர்களை வைத்து ஒரே நேரத்தில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.இதற்கான சான்றிதழை நடிகர் அல்லு அர்ஜுனும், இயக்குநர் அட்லியும் பெற்றுக் கொண்டனர்.

Sep 24, 2026

ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு கவுரவம்.

இசையமைப்பாளர் இளையராஜா தற்போது ஆஸ்திரேலியாவில் இசைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அவரது 50 ஆண்டு இசைப் பயணத்தைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவில் இளையராஜாவை சிறப்பிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அமைச்சர் இந்த தபால் தலையை வெளியிட, அதனை இளையராஜா பெற்றுக்கொண்டார்.

Sep 24, 2026

சூரிக்கு முதல் ரூ.100 கோடி வசூல் படம்.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுகாஸ் உள்ளிட்டோர் நடித்த ‘மண்டாடி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.வசூலில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ள இப்படம், சூரியின் திரைப்பயணத்தில் முதல் ரூ.100 கோடி வசூல் படமாக அமைந்துள்ளது.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில் உள்ள வீட்டில் படக்குழுவினரை அழைத்து குடும்பத்தினருடன் கேக் வெட்டி சூரி கொண்டாடினார்.

Sep 17, 2026

சூரியின் ‘மண்டாடி’ ரூ.50 கோடி வசூல்.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், டி.எம். பிரகாஷ் இசையமைப்பில், சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்துக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் படத்தின் வசூலும் அதிகரித்து, ரூ.50 கோடியை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் வெளியான கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களால் வசூலில் தடுமாறி வருகிறது.

Sep 17, 2026

சைமாவில் 6 விருதுகளை வென்ற ‘டூரிஸ்ட் பேமிலி’.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான 14-வது சைமா விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது.இதில் தமிழ் திரைப்படப் பிரிவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ அதிகபட்சமாக 6 விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான விருதை ‘பைசன்’ திரைப்படத்துக்காக துருவ் விக்ரம் பெற்றார். சிறந்த திரைப்படத்துக்கான விருது ‘டிராகன்’ படத்துக்கு வழங்கப்பட்டது.

Sep 17, 2026

இந்த வாரம் 11 படங்கள் ரிலீஸ்.

இந்த வாரம் தமிழ் சினிமாவில் மட்டும் ‘பீப்’, ‘டார்க் ஹெவன்’, ‘E1’, ‘என்ன விலை’, ‘கோல்டு கால்’, ‘நல்ல படம்’, ‘பாரீஸ் கபே’, ‘ரவாளி’, ‘லட்சியவாதி’, ‘வள்ளி மலை வேலன்’, ‘சண்டக்காரி’ என 11 திரைப்படங்கள் வெளியாகின்றன.இவற்றில் கருணாஸ், நிமிஷா நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் செப்டம்பர் 17-ம் தேதியும், மற்ற திரைப்படங்கள் செப்டம்பர் 18-ம் தேதியும் வெளியாகின்றன. இந்த ஆண்டில் இதுவரை ஒரே வாரத்தில் இத்தனை தமிழ் திரைப்படங்கள் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

Sep 17, 2026

தீபாவளிக்கு வரிசைகட்டும் படங்கள்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.இதனால் மற்ற நடிகர்களின் படங்கள் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. பிரபுதேவா, யோகிபாபு நடித்துள்ள ‘மூன்வாக்’, சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.மேலும், சூர்யாவின் 47-வது படம் மற்றும் இந்தியில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ முதல் பாகம் ஆகியவையும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனுடன் ரஜினியின் ‘அண்ணாமலை’ திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 97 98

AD's



More News