25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இந்திய கோவில்களில் வியப்பில் ஆழ்த்தக்கூடிய  சிற்பக்கலை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய கோவில்களில் வியப்பில் ஆழ்த்தக்கூடிய சிற்பக்கலை

‘காலத்திற்கேற்ப மாற்றம்’ என்று சொல்லப்படுவது போல நம்முடைய ஆடை, அணிகலன், தொழில்நுட்பம் என்று நம் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெண்களுக்கும் பொருந்தும். எல்லாவற்றிலும் மார்டனாக மாறிய பெண்கள் முடியையும் ஃபெதர் கட், லேயர் கட் என்று வெட்டிக்கொண்டார்கள். இருப்பினும் தலைப்பின்னி பூ வைத்து பாரம்பரியமாக இருக்க பிடிக்காத பெண்கள்உண்டா? எந்த காலக்கட்டமாக இருந்தாலும், நிறைய முடி இருக்கும் பெண்களை பார்த்தால் சற்று பொறாமை வரத்தான் செய்யும்.இப்படி பெண்களை பார்த்து பெண்களே பொறாமை படக்கூடிய விஷயத்தை சிற்பமாக வடித்து வைத்திருக்கிறார்கள் தமிழக சிற்பிகள்.

எத்தனை கலைநயம், எத்தகைய நேர்த்தி, பார்த்து கொண்டேயிருக்கலாம் என்று தோன்றும் அழகு, இடுப்புக்கு கீழ் வரை செல்லும் கூந்தல், அதை பின்னி போட்டிருக்கும் அழகு. அத்துடன் தலையிலே இருக்கும் அணிகலன்கள் என்று ஒரு சிற்பமே உயிர்பெற்று பெண்ணாக நிற்பது போல தோன்றுகிறது.இந்த சிற்பம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பூவரக சுவாமி கோவிலிலே தான் உள்ளது. அடுத்து பார்க்கவிருக்கும் ஆப்டிக்கல் இலூசன் சிற்பம் உங்களை நிச்சயமாக பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதில்  சந்தேகமில்லை. 

கர்நாடக மாநிலத்தில் ஹரிஹரேஸ்வரர் கோவிலில் உள்ள ஒரு சிற்பம் தான் நம்மை ஆச்சர்யப்படுத்தியது, இந்த சிற்பத்திற்கு தலை ஒன்று தான். ஆனால் உடல்கள்5 உள்ளது. இது கிருஷ்ணரின் சிலை என்று கூறப்படுகிறது. ஒரு தலைக்கு ஐந்து உடல்கள் இருந்தாலும், தலையை எந்த உடலுடன் பொருத்தி பார்த்தாலும் சரியாகவேயிருக்கும். இத்தனைக்கும் ஐந்து உடல்களும் வெவ்வேறு நிலையில் இருக்கும். எனினும் சரியாக பொருந்துவது போல வடிவமைத்த சிற்பியை கலைநயம்,, நேர்த்தியை நினைத்து வியந்து , பார்த்து கொண்டேயிருக்கலாம் இக்கோவில்12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கோவில்களில் வடிவமைக்கப் பட்டிருக்கும் சிலைகளைக் காணும் போது, சிற்பிகள் வடித்தது சிலையா இல்லை உயிர் உள்ள மனிதர்களா? என்று தோன்றும் அளவிற்கு  அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற அதிசய சிற்பங்கள் இந்தியா முழுதும் உள்ள கோவில்களில் அமைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் பொறுமையாகவும், நிதானமாகவும் ரசிக்க நேரமிருப்பவர்கள் கண்டிப்பாக இதுபோன்ற சிற்பங்களை ரசிப்பதற்கென்றே ஒரு பயணம் மேற் கொள்ளலாம் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News