செண்டு மல்லி பூ சாகுபடி முறை.
செண்டு மல்லிசாகுபடி முறையில்விதைவிதைத்து இருபதுநாட்களில் நாற்றுவளர்ந்து விடும். வளர்ந்த நாற்றுக்களைஒரு ஏக்கருக்குபதினெட்டாயிரம் நாற்றுக்களாகபிரித்து நடவுசெய்ய வேண்டும்.நடவு செய்யப்பட்டஅறுபது நாட்களில்செண்டு மல்லிபூ பிடித்துவிடுகிறது. பின்னர்நூறு நாட்கள்வரை தொடர்ந்துபலன் கொடுக்கிறது.
கோடைகாலங்களில் ஏக்கர்ஒன்றுக்கு பதினைந்துடன் முதல்இருபது டன்வரை மகசூல்கொடுக்கிறது. குளிர்காலங்களில் செடிசிறுத்து ஏக்கர்ஒன்றுக்கு எட்டுமுதல் பத்துடன் வரைமகசூல் கொடுக்கிறது.
செண்டு மல்லிபூ சாகுபடிமுறையில் எல்லாவகையான மண்ணிலும்சாகுபடி செய்யலாம்.அதுவும் எல்லாகாலகட்டத்திலும் சாகுபடிசெய்யலாம். இதன்கடைசி உழவின்போது25 டன்அடி உரமானதொழு உரத்தைஇடலாம். பின்15 செ.மீஇடைவெளியில் பார்கள்அமைக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு15 கிலோ விதையளவு.நடவு பருவம்ஆண்டு முழுவதும்என்றாலும், ஜுன்மற்றும் ஜுலைமாதங்களில் நடவுசெய்ய ஏற்றவை.
நிலத்தை 2-3 முறைநன்கு உழுதுகடைசி உழுதின்போதுமக்கிய தொழுஉரத்தை இட்டுநன்கு கலக்கிவிட வேண்டும்.
விதைகளை20 கிராம்அசோஸ்பைரில்லம் கொண்டுநேர்த்தி செய்தபின்15 செ.மீ இடைவெளியில்விதைகளை வரிசையாகபாத்திகளில் விதைக்கவேண்டும். விதைத்தவிதையை மண்கொட்டி நன்றாகமூட வேண்டும்.
விதைத்த 7 நாட்களில்விதை முளைத்துவிடும், 30 நாட்கள் ஆனவுடன்நாற்றுகளை பிடுங்கிநடவேண்டும்.
வரிசைக்குவரிசை 45 செ.மீ, செடிக்குசெடி 30 செ.மீ இடைவெளியில்நடவேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல்சத்து ஆகியஉரங்களை அடியுரமாகஇட வேண்டும்.
செடிகளை நட்ட 45 நாட்கள் கழிந்ததும் 45 கிலோ தழைச்சத்துஉரத்தினை இட்டு, செடிகளின் வேர்பகுதியில் மண்அணைக்க வேண்டும்.
செண்டுமல்லி சாகுபடிபொறுத்தவரை வீரியஒட்டு ரகத்துக்கு 90:90:75- வுடன் தழை, மணி, சாம்பல்சத்து ஆகியவற்றைபயிர் காலம்முழுவதும் நீர்பாசனத்துடன்இட வேண்டும்.
செண்டுமல்லிசாகுபடி பொறுத்தவரைநடவு செய்த 30, 60ஆம் நாள்களில்களை எடுக்கவேண்டும்.
செண்டுமல்லி களையெடுக்கும்சமயத்தில் மண்அணைத்தல் அவசியம். இது நன்குவேர் பிடிக்கவும், செடியினை தாங்குத்திறனை அதிகப்படுத்தவும்உதவுகிறது.
நடவு செய்த30 நாட்களில் செடிகளின்நுனிப்பகுதியை அல்லதுசெடியின் முதல்பூ மொட்டுக்களைகிள்ளி எடுக்கவேண்டும். இப்படிசெடிகளின் நுனியைகிள்ளி விடுவதால்செடிகள் நன்றாகதுளிர் விட்டுவளரும்.
மேற்கண்ட முறைகளைமுறையாக கடைபிடித்தால்நடவு செய்த60ஆம் நாளில்இருந்து மகசூல்கிடைக்கும். காலைநேரத்தில் பூக்களைச்செடியில் இருந்துபறித்து கூடைஅல்லது சாக்குப்பையில் அடைத்துவிற்பனைக்கு எடுத்துச்செல்லலாம்.
0
Leave a Reply