வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. அதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்து விடும். அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புச்சத்தை ஏற்படுத்திவிடும்.
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர், முக்கால் டம்ளர் எடுத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதில் அரை ஸ்பூன் நெய் மற்றும் சீரக பவுடர் அரை ஸ்பூன் சேர்த்துவெதுவெதுப்பாக குடித்தால் இடுப்பு வலி பறந்து போகும்.சாதம் மீந்து போனால், அதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, கூட கடலை மாவு, உப்பு, வெறும் மிளகாய்த்தூள் சேர்த்து தோசை வார்த்தால் அடை போன்று சுவையுடன் ருசியாக இருக்கும்.
தேங்காய் தண்ணீரில் சியா விதைகள் சேர்த்தால், அவை நீரில் ஊறி பெரிதாக வீங்கும். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதுடன், வயிறு நிறைந்த உணர்வையும் தருகிறது. இதனால் அதிகமாக சாப்பிடும் பழக்கம் குறைந்து. உடல் எடையை கட்டுப்படுத்த உதவக்கூடும்.
BP உள்ளவர்களுக்கு காலை ஹைட்ரேஷன் மிகவும் முக்கியம்.அதனால் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும்.பொட்டாசியம் நிறைந்த உணவுகள், வாழைப்பழம்,இளநீர் (கொக்கோனட் வாட்டர்) ,ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.எண்ணெய், உப்பு அதிகம் உள்ள காலைஉணவுகளை தவிர்க்க வேண்டும்.நார் சத்து (Fiber) அதிகம் உள்ள உணவுகள்,பச்சைப்பயறு,ஓட்ஸ்,விதைகள் காலை நேரத்தில் சாப்பிட்டால் BP குறைய உதவும்.10 நிமிடம் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep Breathing) BP மீது நல்ல விளைவைக் கொடுக்கும். BP தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
கர்ப்ப காலத்தில் கிவி பழம் சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். இதில் போதுமான அளவு ஃபோலேட் சத்து உள்ளது, இது கருவின் மூளை மற்றும் தண்டுவடத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.மாதவிடாய் காலங்களில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது, ஏனெனில் அதில் அதிக அளவில் மெக்னீசியம் உள்ளது.
பால், மோர், வெந்தயம், எள், ராகி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள்,முட்டையின் மஞ்சள் கரு, காளான் ஆகிய வைட்டமின் டி உணவுகள், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாதாம், வால்நட் போன்ற புரதம் நிறைந்தவை,வாழைப்பழம், பேரீச்சை, கடலை பருப்பு, பூசணி, சூரியகாந்தி விதை ஆகிய மெக்னீசியம், பாஸ்பரஸ் இருப்பவை. அதேநேரம், இனிப்புகள், குளிர்பானம், கூடுதல் உப்பு மற்றும் அளவுக்கதிமான காஃபின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில்2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு அல்லது தேன் கலந்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை, மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை வலி மற்றும் வறட்டு இருமல் குணமாகும்.இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வறண்ட இருமலைக் குறைக்க பெரிதும் உதவும். தொண்டையில் ஏற்படும் தொற்று மற்றும் எரிச்சலைக் குணப்படுத்த உப்பு நீர்ச்சிகிச்சை மிகவும் பாரம்பரியமானது.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு,நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய்மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையிலிருந்து நல்ல பாதுகாப்பு தரும்.நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருக்கும். கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும்.
குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதும், பருப்புத் தண்ணீர் கொடுக்கத் தொடங்குங்கள். ஏனெனில், பருப்புத் தண்ணீர் உடலில் இரத்த உருவாக்கத்திற்கு உதவுகிறது.
வயிறு நிறைந்த நிலையில் செய்யக்கூடிய உடலின் ஒரே ஆசனம் இதுதான்.சாப்பிட்ட பிறகு படுப்பது மரணத்தை வரவழைப்பதற்குச் சமம். சாப்பிட்ட உடனேயே, 10 நிமிடங்கள் வஜ்ராசனத்தில் அமருங்கள். இது கற்களை ஜீரணிக்கவும், வயிறு பெரிதாகாமல் தடுக்கவும் உதவும்.