25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Jul 17, 2026

இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்.

வாழைப்பழம், ஆப்பிள், கிவி, பூசணி, நெல்லிக்காய், செர்ரி போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவை உடலுக்குப் புத்துணர்ச்சி தருவதால் இரவு தூக்கம் பாதிக்கப்படலாம்.ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளால் புகைபிடிக்காத பெண்களுக்குக்கூட நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல். உணவுகள் காரணமல்ல, அவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் வீரியமிக்க பூச்சிக்கொல்லிகளே காரணம்.

Jul 14, 2026

இரவில் செல்போன் பார்ப்பதால்........

இரவு நேரத்தில் செல்போன் பார்ப்பதால், திரையில் இருந்து வெளிவரும் நீலநிற ஒளி கண்களுக்கு அதிக அழுத்தத்தை தரும். மேலும் கண் வறட்சி, மங்கலான பார்வை ஏற்படவும் வாய்ப்புள்ளது.இந்த ஒளி தூக்க ஹார்மோனான மெலடோனினை குறைத்து தூக்கத்தை பாதிக்கும்.இந்த பழக்கம் பல நாட்கள் தொடர்ந்தால் தூக்கமின்மை, கவனக்குறைவு,உடல் எடை அதிகரித்தல், காலையில் எழுந்தாலும் மீண்டும் சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

Jul 11, 2026

இரும்புச்சத்து உள்ள உணவுகள்.

ரத்த சோகை- ஆக்சிஜன்- ஊட்டச்சத்து உடல் முழுவதும் ஆக்சிஜன் செல்லவும், ரத்த சோகையைத் தடுக்கவும் ,இரும்புச் சத்து அவசியம். கம்பு - அரிசியைவிட எட்டு மடங்கு இரும்பு சத்து உள்ளது. கீரை வகைகள் - முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.ஆட்டு ஈரல் - ரத்த சோகையை நீக்க மிகச் சிறந்த உணவு. இரும்புச்சத்து எளிதில் கிரகிக்கப்படும். வேர்க்கடலை - இரும்புச்சத்து, புரதம், நல்ல கொழுப்பு நிறைந்தது. தினமும் சிறிதளவு உண்ணவும்.

Jul 08, 2026

. குழந்தைகளுக்கு செல்போன்: 'கண் உலர்ச்சி' (Dry Eyes) ஆபத்து!

குழந்தைகள் நீண்ட நேரம் கண்களுக்கு அருகில் செல்போன் பார்ப்பதால் கண்களில் ஈரப்பதம் குறைந்து, 'கண் உலர்ச்சி' (Dry Eyes) ஏற்பட்டு கண்கள் திறக்க முடியாமல் போகலாம்.தொடர்ந்து போன் பார்ப்பதால் வரும் பாதிப்புகள்:கண் எரிச்சல் & தலைவலிபார்வை குறைபாடுஇரவில் பார்ப்பதில் சிரமம்குறிப்பு: குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தைக் காக்க செல்போன் தருவதைக் கட்டுப்படுத்துங்கள்!

Jul 07, 2026

மூட்டு வலிக்கு யானை பலம் தரும் பாரம்பரிய புளியங்கொட்டை பற்று.

கிழிந்த ஜவ்வையும் கூட்டி, முட்டிக்கு நல்ல பலம் தரும் ஒரு சித்த வைத்தியம்: நாட்டு பாக்கு 10 மற்றும் புளியங்கொட்டை 10 ஆகியவற்றை நன்றாக ஊற வைத்து, தண்ணீர் விடாமல் அம்மியில் அரைத்துக் கொள்ளவும். அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து கலக்கி, முட்டியில் பற்று போட வேண்டும். பற்று கீழே விழாமல் இருக்க ஒரு வெள்ளை துணியால் கட்டி, அதன் மீது சிறிது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அது காய்ந்த பிறகு மீண்டும் எண்ணெய் ஊற்றலாம்.

Jul 06, 2026

அஸ்வகந்தா பொடியின் நன்மைகள்.

குழந்தைகளுக்கு 1-3 கிராம் அஸ்வகந்தா பொடியை பாலுடன் கலந்து கொடுப்பது, ஒரு மாதத்திற்குள்அவர்களை அழகாகவும், நல்ல வடிவத்துடனும், ஆரோக்கியமாகவும் மாற்றும்.உங்கள் தலைமுடி இளநரைத்து உதிர்ந்தால், தினமும் 3 கிராம் அஸ்வகந்தாவை பாலுடன் கலந்து உட்கொள்ள வேண்டும்.இது நிச்சயமாக உங்கள் பிரச்சனையைத் தீர்க்கும்.உயரத்தை அதிகரிக்க, ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடியை பசும்பாலுடன் கலந்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன் அருந்தவும்.கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) அளவைக் குறைப்பதன் மூலம் மன அமைதியைத் தருகிறது.ஆழ்ந்த தூக்கத்தைத் தூண்டி, சோர்வைப் போக்குகிறது.உடல் வலிமை மற்றும் தடகள செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை வலுப்படுத்துகிறது.

Jul 01, 2026

சாப்பிட்டவுடன் உடனே தண்ணீர் குடிக்கக் கூடாத உணவுகள்.

கீழ்க்கண்டவற்றைச் சாப்பிட்டவுடன் உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்:வேர்க்கடலை: உடனே தண்ணீர் குடித்தால் இருமல், தொண்டை வலி ஏற்படும்.இனிப்புகள்: உடலில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது.பழங்கள் & ஜூஸ்:செரிமான ஆற்றல் பாதிக்கப்படும் (பழங்கள் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பின் குடிப்பது நல்லது).டீ, காபி (சூடான பானங்கள்):சூடான பானங்களுக்குப் பின் குளிர்ந்த நீர் குடிப்பது பல்,  ஈறு மற்றும் செரிமான அமைப்பைக் கெடுக்கும்.

Jun 27, 2026

இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ள….

பீன்ஸில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ளும். எனவே நீரிழிவு நோயாளிகள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், பீன்ஸை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Jun 26, 2026

கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்.

வெள்ளரிக்காய் - அதிக நீர் உள்ளதால், உடலை ஹைட்ரேட் செய்து குளிர்விக்கும்.தர்பூசணி - சுமார் 90% நீர் கொண்டதால், தாகத்தை தணிக்க உதவும்.இளநீர் -உடலை குளிர்வித்து நீர்ச்சத்தை அதிகரிக்கிறது,இயற்கை எலக்ட்ரோலைட்கள் நிறைந்தது.தயிர் & மோர் - உடலை குளிர்விக்கும், குடல் ஆரோக்கியம் மேம்படும், ப்ரோபயாட்டிக் நிறைந்தவை.எலுமிச்சை நீர் - உடலை ஹைட்ரேட் செய்து புத்துணர்ச்சி தரும், வைட்டமின் C நிறைந்தது.முலாம் பழம் - அதிக நீர் உள்ளதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.கரும்பு சாறு - இயற்கை ஆற்றல் பானமாகச் செயல்பட்டு,உடலை புத்துணர்ச்சியாக வைக்கும்.பச்சை திராட்சை  - நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும்.

Jun 25, 2026

பார்வை குறைபாடு நீங்க.

சாதிக்காயைப் பசும்பாலில் உரசி, இரவு கண்களைச் சுற்றி பற்றுப் போட்டு காலையில் குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் முருங்கை கீரையையும், வாரத்தில் ஒரு நாள் அகத்திக்கீரையையும் சமைத்து சாப்பிடவும்.இப்படி செய்வதால் பார்வை குறைபாடு நீங்கி, கண்பார்வை அதிகரிக்க உதவும்.கண்ணாடி அணிந்திருந்தாலும், கழட்டி விடலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 51 52

AD's



More News