25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


நலம் வாழ

Oct 04, 2023

Tonsil , தொற்று நோய் 

குழந்தை முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று காரணமாக உள்நாக்கு வீக்கம் உண்டாகும்.இந்த உள்நாக்கு வீக்கத்தை Tonsilitis என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.உள்நாக்கு வீங்கி வளர்ந்துவிடும்,அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவது முறையான சிகிச்சையாகும்.உள்நாக்கில் வீக்கம் மற்றும் சதை வளர்வதை ஆரம்ப கட்டத்திலேயே, இயற்கையான பொருட்களைகொண்டுமிகஎளிமையானமுறையில்குணப்படுத்தலாம்.10-15 பூண்டு பல் எடுத்து, அதை இடித்து சாறு பிழிந்து கொள்ளவும்இந்த சாற்றை ஆள்காட்டி அல்லது நடுவிரலில் தொட்டு உள்நாக்கு வளர்ச்சியின் மீது தடவி வந்தால் விரைவில் வீக்கம் கரையும்.தொடர்ச்சியாக இவ்வாறு செய்து வந்தால் பூரண குணம் பெறலாம்.

Oct 03, 2023

சுண்டைக்காய்

சுவாசம் சம்பந்தப்பட்டநோய்களுக்கு அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி, சுண்டைக்காய் வற்றல் செய்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் தணியும், இந்த நோயினால் வரக்கூடிய உடற் சோர்வு வயிற்றுப் பொருமல், கை கால் நடுக்கம், மயக்கம் முதலியவற்றை நீக்கக்கூடிய சக்தி இதில் உள்ளதுஹீமோகுளோபின் குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு சுண்டைக்காய் ஒரு மருந்தாக பயன்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான வயிற்று வலி அஜீரணம் செரிமான பிரச்சனை போன்றவற்றை தீர்க்க சுண்டைக்காய் பயன்படுகிறது.பெண்களுக்கு பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது வழக்கம். அப்படி ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்ய சுண்டைக்காய் பயன்படுகிறது. இதில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்க முக்கிய பங்கு வகிக்கிறது.தலைசுற்றல் சோர்வு மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை போக்கவும் சுண்டைக்காய் உதவுகிறது.

Oct 02, 2023

மூட்டு முழங்கால் வலி குறைய ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ள இந்த எண்ணெயை உடல் பயன்பாட்டிற்காகவும் பல விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சன்னைக்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் 1-2 சொட்டு உட்கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.உடல் சுளுக்கு மசாஜ் செய்யலாம், நல்ல நிவாரணம் கிடைக்கும்.பித்தம் காரணமாக கால்களில் பித்தவெடிப்பு ஏற்படுகிறது, தினமும் இரவில் 2 சொட்டு தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.முடி உதிர்வதற்கு தேங்காய் எண்ணெயில் சில துளிகள் எண்ணெய் சேர்த்து தடவினால், முடி உதிர்வது நின்றுவிடும்.உடல் சூடு, மற்றும் மாதாவிடாய் நாட்களில் ஏற்படும், வலிக்கு எண்ணெய் தடவினால் தசை பிடிப்பு, வயிற்று வலி நீங்கும்.கணினியில்நீண்டநேரம்வேலைசெய்பவர்கள்,இரவில்கண்களுக்குமேல்எண்ணெய்துளிகள்தடவினால்,கண்குளிர்ச்சியடையும்.மூட்டு, முழங்கால்களில்எண்ணெய் தடவினால், விரைவில் வலி குறையும்.

Sep 29, 2023

நீரிழிவு  நோயாளிகளுக்கு, நினைவாற்றலுக்கு முருங்கைப்பூ

நீரிழிவு நோயாளிகள்,முருங்கைப்பூவை அடிக்கடிசமைத்து சாப்பிடலாம்..உடல் சூட்டை தணிக்கக்கூடியது இந்த பூ.. பெண்களுக்கு ஏற்படும்.உதிரப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது..நினைவாற்றலுக்கு, இந்த முருங்கைப்பூ பொரியல்குழந்தைகளுக்குசெய்து தரலாம்.. அல்லது, முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்கவைத்து, அத்துடன் பனங்கல்கண்டு கலந்து,தினமும் காலை, 2 வேளையும்  குடித்துவந்தாலும், நினைவாற்றல். அதிகரிக்கும்.முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து, பிறகு அந்த பாலை வடிகட்டி குடித்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.. கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்கள் இந்த முருங்கை பூவை அடிக்கடி சமையலில் சேர்த்து கொள்ள வேண்டும்.அல்லது, இந்த பூவை. நிழலில் உலர்த்திகாயவைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும்..

Sep 28, 2023

சமையலில் தவிர்க்க முடியாத வெந்தயம்

முந்தின நாள் இரவு வெந்தயம் அல்லது சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.அடுத்த நாள் காலை எழுந்தவுடன் இந்த பானத்தை குடிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி ஏற்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.சீரகத் தண்ணீர் செரிமான பிரச்சனைகளை நீக்கும் தன்மை கொண்டது.சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று வெந்தயம், ஆனாலும் கூடபலருக்கு அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. கிராமங்களில் உள்ளபெரியவர்கள் பிள்ளைகளுக்கு வயிற்று வலி வந்தால், உடனேவெந்தயத்தை வாயில் போட்டு மென்று மோரைகுடிக்க சொல்வார்கள். வயிற்று வலி நீக்குவதோடு உடல் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

Sep 26, 2023

களாக்காய் சாப்பிட்டால்

மிகவும் அதிகம் கிடைக்கும் அதே நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் களாக்காய் சாப்பிட்டால் மிகப்பெரிய அளவில் உடலுக்கு நல்லது என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் களாக்காய் மிக அதிகமாக கிடைக்கும். புளிப்பு இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்டாய்ந்த களாக்காய் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் வளர்கின்றன.  ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை களாக்காய் சீசன் உண்டு. வைட்டமின் சி பி இரும்பு சத்து மாங்கனிசியம் பொட்டாசியம் காப்பர் உள்பட பல சத்துக்கள் இந்த களாக்காயில் உள்ளன. களாக்காய் சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகிக்கிறது. மேலும் உடலின் உள் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கும். தலை முடியை வலிமையாக்கும், கூந்தல் ஆரோக்கியமாகவும் நீளமாகவும்  பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றும், சீரான மாதவிடாய் ஏற்படுத்த உதவும் ஆகிய பல நன்மைகள் களாக்காய் சாப்பிடுவதால் உண்டாகிறது.

Sep 25, 2023

நன்மையை தரும் விளாம்பழம்  (Wood Apple )

விளாம்பழம். இதை ஆங்கிலத்தில் Wood Apple அல்லது Stone fruit என்பார்கள். இந்த பழம் எல்லா காலங்களில் கிடைக்காது. இது ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிடைக்கும் பழமாகும்.இதன் மேல் ஓடு போன்று இருக்கும். அதை உடைத்தால் அதில் ஒரு பல்ப் (pulp)இருக்கும். அந்த சதை பகுதியான பல்ப்பை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா. அதை சிறிது வெல்லத்தை பொடித்து நன்கு கைகளால் பிசைந்தால் பஞ்சாமிர்த பதத்திற்கு வரும். அதை அப்படியே ஸ்பூனாலோ அல்லது கைகளாலோ சாப்பிட்டால் பஞ்சாமிர்தம் திடீரென தேவாமிர்தமாக மாறிவிடும்.இது புளிப்பு சுவையுடையது. அதனால் அதை ஈடுகட்ட வெல்லத்தூள் சேர்க்கிறோம். இது புளிப்பு சுவை கொண்டது என்பதால் இது சீதளம், குளிர்ச்சி என கருதி பலர் தவிர்க்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனையாகும் இந்த பழத்தை வாங்கி விநாயகருக்கு படைத்துவிட்டு  குப்பையோடு குப்பையாக வீசி விடுகிறார்கள். இது பசியை தூண்டக் கூடியது. ரத்தத்தை சுரக்கும் தன்மை கொண்டது. வாந்தியை கட்டுப்படுத்தும், மலத்தை இறுக்கும், பித்தத்தை நீக்கிவிடும். இதனால் ஏற்படும் தலைச்சுற்றலை போக்கிவிடும். முக்கியமாக கோழையை அகற்றிவிடும். வாய்ப்புண், ஈறு பிரச்சினைக்கு நல்லது. இருமல், சளியை எடுக்கும். வெள்ளைப்படுதலை நீக்கும், மாதவிடாய் அதிக ரத்த போக்கை கட்டுப்படுத்தும்.வயிற்றுப்போக்கு, சீதபேதியை நிறுத்தும்.. குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இந்த பழத்தை கொடுத்தால் உள்ளுறுப்புகளில் புண் ஏதேனும் இருந்தாலும் அது ஆறிவிடும். ஆஸ்துமா, அலர்ஜிக்கு அருமருந்தாக அமைகிறது.

Sep 24, 2023

ஒயிட் சாக்லெட் சாப்பிடுவதால்

சாக்லேட்டுகள் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகளில் உள்ளது. ஒயிட் சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால் போன்றவற்றால் ஆனது.ஒயிட் சாக்லேட் பாலால் தயாரிக்கப்படுகிறது. இதில் சுமார்169 மிகி கால்சியம் இருக்கும். இதனால், இவை எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு உதவுகிறது.ஒயிட் சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளான பளேவோனாய்டுகள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.ஒயிட் சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும். இதில் உள்ள கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். ஒயிட் சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.ஒயிட் சாக்லேட் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதாகஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒயிட் சாக்லேட்டை அடிக்கடி சாப்பிட்டால், அதில் உள்ள டோபமைன், மயக்க உணர்வை உண்டாக்கி மூளையை அமைதியடைய செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற செய்யும்.

Sep 22, 2023

பிஸ்கட் அதிகம் பிஸ்கட் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

 குழந்தைகள் பிஸ்கட்டுகளை விரும்பி சாப்பிடும் என்பதும் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக, பெற்றோர்கள் பிஸ்கட்டுகளை அதிகம் வாங்கிக் கொடுப்பதும் நடந்து வருகின்றன. ஆனால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக பிஸ்கட் சாப்பிட்டால். குழந்தையின் செரிமான சக்தி குறையும் என்றும் பிஸ்கட்டுகள் நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மை உடையதால் மலச்சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.  பிஸ்கட் என்பதை உணவுக்கு மாற்றாக பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என்றும் உடல்நலம் இல்லாத நிலையில் உணவு சாப்பிட முடியாத பட்சத்தில் மட்டும் பிஸ்கட் கொடுக்கலாம்.. சத்தான உணவு மட்டுமே குழந்தைகளுக்கு ஏற்றது என்றும் அதற்கு மாற்றாக ஒருபோதும் பிஸ்கட்டுகளை கொடுக்கக் கூடாது என்றும் கூறப்படுகிறது. பிஸ்கட்டுக்கு பதிலாக பழங்கள் சுண்டல் ஆகிவற்றை கொடுக்கலாம் என்றும் பிஸ்கட்டுகளை அளவோடு குழந்தைகளுக்கு கொடுத்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Sep 21, 2023

பாதாம் பால் நன்மைகள்

பாதம் பாலில் நிறைந்துள்ள பண்புகள் ஆரோக்கியத்தில்நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பாதாம் வைட்டமின்E இன் சிறந்த ஆதாரமாகும். இது செல்களின் மீளுருவாக்கத்திற்கும், சூரிய கதிர்களால் சேதமடைந்த சருமத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது.பாதாம் பாலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களின் எதிர்மறை விளைவுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. இதனுடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.இது தாவர அடிப்படையிலானது என்பதால், வேகன் உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு ஏற்றது. இதை பசும்பாலுக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம்.100 மில்லி பாதாம் பாலில்30 முதல்55 கலோரிகள் வரை இருக்கும். மற்ற பாலுடன் ஒப்பிடுகையில் பாதாம் பால் குறைவான கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.பாதாம் பாலில் வலுவூட்டப்பட்ட கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்துக்கள் மிகவும் முக்கியமானவை பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு பாதாம் பால் ஒரு சிறந்த மாற்று உணவாக இருக்கும்.நட்ஸ் வகைகளில் உள்ள நல்ல கொழுப்புகள் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.இந்நிலையில் அதிக அளவு வைட்டமின்E மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த பாதாம் பால் இதயத்திற்கு நன்மை தரும்.

1 2 ... 45 46 47 48 49 50 51 52 53 54

AD's



More News