25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நன்மையை தரும்  விளாம்பழம்   (Wood Apple )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நன்மையை தரும் விளாம்பழம்  (Wood Apple )

விளாம்பழம். இதை ஆங்கிலத்தில் Wood Apple அல்லது Stone fruit என்பார்கள். இந்த பழம் எல்லா காலங்களில் கிடைக்காது. இது ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிடைக்கும் பழமாகும்.இதன் மேல் ஓடு போன்று இருக்கும். அதை உடைத்தால் அதில் ஒரு பல்ப் (pulp)இருக்கும். அந்த சதை பகுதியான பல்ப்பை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா. அதை சிறிது வெல்லத்தை பொடித்து நன்கு கைகளால் பிசைந்தால் பஞ்சாமிர்த பதத்திற்கு வரும். அதை அப்படியே ஸ்பூனாலோ அல்லது கைகளாலோ சாப்பிட்டால் பஞ்சாமிர்தம் திடீரென தேவாமிர்தமாக மாறிவிடும்.

இது புளிப்பு சுவையுடையது. அதனால் அதை ஈடுகட்ட வெல்லத்தூள் சேர்க்கிறோம். இது புளிப்பு சுவை கொண்டது என்பதால் இது சீதளம், குளிர்ச்சி என கருதி பலர் தவிர்க்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனையாகும் இந்த பழத்தை வாங்கி விநாயகருக்கு படைத்துவிட்டு  குப்பையோடு குப்பையாக வீசி விடுகிறார்கள். 

இது பசியை தூண்டக் கூடியது. ரத்தத்தை சுரக்கும் தன்மை கொண்டது. வாந்தியை கட்டுப்படுத்தும், மலத்தை இறுக்கும், பித்தத்தை நீக்கிவிடும். இதனால் ஏற்படும் தலைச்சுற்றலை போக்கிவிடும். முக்கியமாக கோழையை அகற்றிவிடும். வாய்ப்புண், ஈறு பிரச்சினைக்கு நல்லது. இருமல், சளியை எடுக்கும். வெள்ளைப்படுதலை நீக்கும், மாதவிடாய் அதிக ரத்த போக்கை கட்டுப்படுத்தும்.

வயிற்றுப்போக்கு, சீதபேதியை நிறுத்தும்.. குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இந்த பழத்தை கொடுத்தால் உள்ளுறுப்புகளில் புண் ஏதேனும் இருந்தாலும் அது ஆறிவிடும். ஆஸ்துமா, அலர்ஜிக்கு அருமருந்தாக அமைகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News