25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் -15 அனுசரிக்கப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் -15 அனுசரிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (15.06.2026) முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சமூக நலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா அவர்கள் தலைமையில், அனைத்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 15 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் 2011 ஆம் ஆண்டு முதல் இத்தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதியோர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு எதிராக நடைபெறும் கொடுஞ்செயல்களை தடுத்து அவர்களை கன்னியமாகவும், மரியாதையாகவும் நடத்துவதை உறுதி செய்திடும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன்-15, 2026 திங்கட்கிழமையன்று, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சமூக நலத்துறையின் மூலம் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 மேலும், இராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டியன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இராஜபாளையம் வட்டாட்சியர் திரு.ராஜீவ்காந்தி அவர்கள், இராஜபாளையம் நகராட்சி ஆணையர் திரு.நாகராஜன் அவர்கள், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.கி.திலகம் அவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்  உறுதி  மொழி எடுத்திடும் நிகழ்ச்சியும் மற்றும் இத்தினம் தொடர்பாக பள்ளிகளில் நடத்தபட்ட கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் இத்தினம் அனுசரிக்கப்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர் கூட்டரங்கில் அவர்கள்  மற்றும் தனி  துணை ஆட்சியர்(ச.பா.தி) அவர்கள் தலை மையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஜீன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News