கால் மேல தண்ணி ஊத்திட்டு வீட்டுக்குள்ள வரப்ப, கால மிதியடில நல்லா தொடச்சிட்டு வீட்டுக்குள்ள வாங்க,கால தொடைக்காம வரப்ப ,நம்ம கால்தடம் அடியடியா தரைல பட்டு ,பாக்றவங்களுக்கு நம்மமேல அருவெறுப்ப உண்டு பண்ணும். அதே மாறி Restroom use பண்ண அப்புறமும் கால மிதியடில நல்லா தொடச்சிட்டு வாங்க, இப்படி பண்றது மூலமா வீணா போன கிருமி நம்ம வீட்டுக்குள்ள வராம தடுக்க முடியும். அதே மாறி இந்த பழக்கம் உங்க குணத்தையும் உங்க குடும்பத்தையும் பாதுகாக்கும்.
வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட்டுகள் இரண்டிலும் கொலஸ்ட்ரால் முதன்மையாக மஞ்சள் கருவில் உள்ளது. சமீபகால ஆய்வுகள், ஒருமுறை நினைத்தபடி, உணவுக் கொலஸ்ட்ரால் இரத்தக் கொழுப்பின் அளவைக் கணிசமாகப் பாதிக்காது என்பதைக் காட்டுகிறது. ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கின் கூற்றுப்படி, நமது உடல்கள் முக்கியமாக முட்டை போன்ற உணவு மூலங்களிலிருந்து இல்லாமல் ,நமது உணவில் உள்ள நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் மூலம் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கின்றன. எனவே, ஒரு வேகவைத்த முட்டையில் சுமார் 186 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, குறைந்த மஞ்சள் கரு அல்லது முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆம்லெட் புரதத்தை தியாகம் செய்யாமல் கொலஸ்ட்ரால் நுகர்வு குறைக்க உதவும்.
வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட்டுகள் தனித்துவமான ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகின்றன. வேகவைத்த முட்டைகள் குறைந்த கலோரி, புரதம் நிறைந்த தேர்வு, விரைவான உணவுக்கு ஏற்றது. ஆம்லெட்டுகள் பல்துறைத்திறனை வழங்குகின்றன, மேலும் காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அனுமதிக்கின்றன, ஆனால் கலோரி மற்றும் கொழுப்பு உட்கொள்ளலை நிர்வகிக்க கவனமாக மூலப்பொருள் தேர்வு தேவைப்படுகிறது. இரண்டும் புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களின் நல்ல ஆதாரங்கள், கொலஸ்ட்ரால் கவலைகள் இப்போது உணவுக் காரணி குறைவாக உள்ளது.முட்டைகள் புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த ஊட்டச்சத்தின் ஆற்றல் மையமாகும். ஆரோக்கியமான உணவில் முட்டைகளை சேர்த்துக்கொள்ளும் போது, பலர் வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். உணவுத் தேர்வுகள் இரண்டும் பெரும்பாலும் காலை உணவில் பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகின்றன. இரண்டு விருப்பங்களும் சுவையாகவும் வசதியாகவும் இருந்தாலும், அவை ஊட்டச்சத்து உள்ளடக்கம், கலோரிகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
பகல் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் அல்லது 1மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்ந்து குடித்தால் ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும். உணவு நன்றாக செரிக்கும். மேலும், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் பாதுகாப்பதனால் உடல் பருமன் பிரச்சனை நீங்கும். வயிறு, செரிமான பிரச்சனைகள் வராமல் காக்கும்.
40கள் மற்றும் 50கள் முழுவதும் வளர்சிதை மாற்றம் குறைகிறது, மேலும் மூட்டு ஆரோக்கியம் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற பிற அம்சங்கள் மிகவும் முக்கியமானதாகிறது. இந்த வயதுப் பிரிவினர் தினசரி 30 முதல் 45 நிமிடங்கள் மிதமான வேகத்தில் உலாவுவதால் பயனடையலாம். வலிமை உடற்பயிற்சிகள் அல்லது சரிவுகள் அல்லது பாதைகள் போன்ற வெவ்வேறு நிலப்பரப்புகளில் நடப்பது நன்மைகளை அதிகரிக்கலாம். இந்த ஆண்டுகளில், கூட்டு ஆரோக்கியத்தை பராமரிப்பது ஒரு முக்கிய பிரச்சினையாகிறது; எனவே, பொருத்தமான பாதணிகளை அணிவது மற்றும் சமமான பரப்புகளில் நடப்பது மிகவும் முக்கியம்.
வரகு - உடல் எடை மற்றும் சர்க்கரை நோய்க்கு. குதிரைவாலி- இதய நோய் சம்பந்தமான குறைபாட்டுக்கு.சாமை - இரத்த சோகை மற்றும் உடலின் கொழுப்பினை குறைக்க.திணை- இதயத்தை பலப்படுத்தும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்,இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த.சோளம்- இரத்த ஓட்டம், செரிமான சக்தியை மேம்படுத்துதல் மற்றும் வாயுத்தொல்லை நீங்க.நாட்டு கம்பு- உடல் வெப்பம், பார்வைதிறன், இரத்ததில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க.நாட்டு ராகி- இரும்புச்சத்து, சுண்ணாம்புசத்து, பெருங்குடல் புற்றுநோய் & தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க.பனி வரகு- சருமத்தை பிரகாசமாக வைத்தல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலமாக்க.
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இனிப்பு சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, டைப்-2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. பழங்களில் சர்க்கரை அல்லது சிடரிக் அமிலம் இருப்பதால் 5 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்க வேண்டாம். ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது ஐஸ்கிரீம் சாப்பிட்ட 15 நிமிடம் கழித்துதண்ணீர் குடிக்கலாம்.டீ காபி, சூடான பானங்கள் அருந்திய பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ எடுத்துக் கொண்டால், எடை வாயு, அமிலத்தன்மை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கருணைக்கிழங்கு உடல் சூட்டை தணிக்கும், மூல நோயை குணமாக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு உடலுக்கு பலம் தரும் சொறி, சிரங்குகளை குணமாக்கும். சேப்பங்கிழங்கு மலச்சிக்கல் தீரும், நரம்புகளுக்கு வலுசேர்க்கும் சேனைக்கிழங்கு நீரிழிவை தடுக்கும் உடல் பருமனை குறைக்கும் உருளைக்கிழங்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். குடல் ஆரோக்கியம் மேம்படும் மரவள்ளிக்கிழங்கு உடல் பலம் பெறும். வியாதிகளை குணமாக்கும் தன்மை உள்ளது.
அதிகம் சாப்பிடுதல் கூடாது. மிதமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பால் குடிக்கக்கூடாது. .இரவு ஏழு முப்பது மணிக்குள் சாப்பிட வேண்டும். 9மணிக்கு இரவு தூங்கிவிட வேண்டும். அதிக நேரம் தொலைபேசி பார்க்க கூடாது. .இரவில் குப்பைகளை வெளியில் கொட்ட கூடாது. .இரவு நேரத்தில் துணி துவைக்க கூடாது.
ஆப்பிள் விதைகள் நச்சுத்தன்மையுள்ளபொருள். மென்று தின்னும் போதோ ,அரைபடும்போதோ நச்சாக மாறுகிறது. ஆப்பிள் ஜூஸ் போடும்போது வடிகட்டப் போவதால், கொட்டையோடு சேர்த்து அரைக்கக்கூடாது. ஒன்றோ இரண்டோ விழுங்கினால் தப்பில்லை.அதிக அளவு பயன்படுத்தும் போது விதைகள் நீக்கிய பிறகே சாப்பிடவோ ஜூஸ் போடவோ ரெசிப்பிக்கோ பயன்படுத்தனும்