25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இன்றைய தினம்

Jan 03, 2026

வைத்தியநாத சுவாமி கோவிலில் இன்று திருவாதிரை திருவிழா !

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இன்று  காலை 10 மணிக்கு 10 அடிஉயர  ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அதன் பிறகு சந்தன காப்பு அணிவிக்கப்படும்,  வைத்திய நாத சுவாமி கோவில் கோபுரம் ,திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் மற்றும் நிர்வாகத்தினர்  இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். 

Jan 01, 2026

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  2026

நிறைந்த வளம். நிறைந்த ஆரோக்கியம் மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும்.வெற்றிகள், சந்தோஷங்கள் மற்றும் உன்னதமான சாதனைகள் நிரம்பிய ஆண்டாக 2026 அமையட்டும்.

Dec 25, 2025

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் உனக்கு உன்னதரை உள்ளங்கள் பறைசாற்ற, நம்பாரம் தீர்த்திடவே பாவங்களை மீட்க வந்த பரமனவன் பிறந்தநாளை, பக்தியோடு ஏற்றிடுவோம் பந்தமென போற்றிடுவோம்.நட்சத்திரங்கள் போல் • உங்கள் வாழ்க்கையில் ஒளி வீசட்டும் ,கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

Dec 23, 2025

முன்னாள் பிரதமர்சவுத்ரி  சரண் சிங் பிறந்த தினமான டிச. 23 , தேசிய விவசாயிகள் தினம்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் பிரதான தொழில் விவசாயம். நாட்டின் மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வது விவசாயத்தொழில் உள்ளது.  முன்னாள் பிரதமர் சவுத்ரி  சரண் சிங் விவசாய துறைக்கு பல சட்டங்கள், திட்டங்களை கொண்டு வந்து மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்.  அவரது பிறந்த தினமான டிச. 23 மத்திய அரசு சார்பில் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

Dec 03, 2025

'சமூக முன்னேற்றத்தை வளர்ப்பதில், மாற்றுத் திறனாளிகளையும் சமூகத்தில் இணைப்பது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.

உலக மக்கள் தொகையில் 16 சதவீதம், 130 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால், பல துறைகளிலும் சாதிக்கின்றனர். இவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுதல், அவர்களுக்கான அடிப்படை உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச.,3ல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  

Dec 03, 2025

 திருக்கார்த்திகை தினம்

சிவபெருமான் அக்னி வடிவமாக ஆதியும் அற்று அந்தமும் அற்று திருவண்ணாமலையில் உருவெடுத்தாக வரலாறு கூறுகிறது. அதனால் அந்த நாளை ஒவ்வொரு ஆண்டு திருக்கார்த்திகையாகக் கொண்டாடி வருகிறோம். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Dec 02, 2025

பரணி தீபத்தை நம் வீட்டில் ஏற்றினால் நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு, பஞ்ச பூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

கார்த்திகை மாதம் 2025 பரணி தீபம் ஏற்ற உகந்த நேரம்.இந்த வருடம் பரணி நட்சத்திரம் டிசம்பர் இரண்டாம் தேதி மாலை ஆறு இருபத்து நான்கு மணிக்கு தொடங்கி ,மறுநாள் நான்கு நாற்பத்தி ஏழு மணிக்கு முடிகிறது. முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை அன்று தொடங்குகிறது இந்த தெய்வீக நாள்.இந்த நாளில் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் ஐந்து விளக்கு ஏற்ற வேண்டும். கட்டாயம் ஐந்து விளக்கு தான் ஏற்ற வேண்டும் வீட்டில்.பாவத்தை போக்கும் பரணி தீபத்தை வீட்டில் ஏற்றும் முறை, அன்று வாசலில் இரண்டு தீபங்களும், பூஜை அறையில் விளக்கும் ஏற்ற வேண்டும். அதோடு தனியாக ஒரு தாம்பாளத்தில் 5 விளக்குகளை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். அனைத்து விளக்குகளும் அனைத்து திசை நோக்கி எரியும் ,என்பதால் திசை கணக்கு கிடையாது.நம்முடைய வாழ்க்கையில் செய்த சின்னச் சின்ன பாவங்கள் கூட நம்மை விட்டுப் போவதற்காக வேண்டி ஏற்றக்கூடிய தீபம்தான் பரணி தீபமாகும்.கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று (டிசம்பர் 2. 2025) ஏற்றக்கூடிய தீபம் பரணி தீபம்.எமதர்ம ராஜனுக்கு மிகவும் பிரியமான பரணி நட்சத்திரத்தில் நாம் வாழும் காலமும், வாழ்க்கைக்குப் பிறகும் துன்பம் இல்லாமல் இருப்பதற்காக இந்த தீபம் ஏற்றப்படுகிறது.

Nov 14, 2025

குழந்தைகள் தினம் .

 இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவ. 14, தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்குவது குழந்தைகள்.அன்றைய தினத்தில் மட்டும் குழந்தைகளைப் பற்றி பேசி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிவிட்டு, நம்மில் பலர் கடந்து சென்று விடுகிறோம். குழந்தைகளை கொண்டாட மறந்து விடுகிறோம். குழந்தைகளை ஒரு நாள் மட்டும் அன்று எல்லா நாட்களும் கொண்டோடுவோம். குழந்தைகள் கண்ணாடி போன்றவர்கள். அவர்களை உடைத்து விடாமால், பக்குவமாய் உடன் பயணித்து வழிநடத்து வோம்.குழந்தைகளை, குழந்தைகளாக இருக்க அனுமதிப்போம். அவர்கள் நன்றாக விளையாடட்டும். சிரிக்கட்டும், கேள்விகள் பல கேட்கட்டும். வரைவது பிடித்தால் வரையட்டும், நடனம் பிடித்தால் ஆடட்டும். அவர்களுக்கு தேவையானதை அவர்களிடம் கேட்டறிந்து கொடுப்போம். எதையும் குழந்தைகள் மீது திணிக்காமல் இருப்போம்.பல குழந்தைகள் படிப்பதையும், கலை, விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதையும் சுமையாக நினைத்து மகிழ்ச்சியின்றி இருக்கின்றனர். அந்த நிலையை மாற்றிடுவோம்.இந்த குழந்தைகள் தினம் அர்த்தமானதாக மாற, குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் நின்றிட வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவும்கிடைக்க வேண்டும். போரினால் மரித்து போகும் மழலைகளின் உயிர் காக்கப்படவேண்டும்.

Oct 20, 2025

தீபாவளி  நல்வாழ்த்துக்கள் .

தீபாவளி என்றால் "தீபங்களின் வரிசை  அல்லது"விளக்குகளின் திருவிழா என்று அர்த்தம்.இது இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாகும், மேலும் தீமையை அழித்து நன்மையை வரவழைக்கும் வெற்றியைக் குறிக்கிறது. பல நூற்றாண்டுகள் பழமையான இத்திருவிழா, இந்து மதத்தின் முக்கிய பண்டிகையாகும்தீப  என்றால் விளக்கு மற்றும் "ஆவளி  என்றால் வரிசை அல்லது  தொடர்என்பதால், தீபங்களின் வரிசைஎன்று பொருள்படும். தத்துவம் -  இது இருள் மற்றும் தீமையை அகற்றி, ஒளி மற்றும் நன்மையை வரவேற்கும் பண்டிகையாகக்  கொ ண்டாடப்படுகிறது.நரகாசுரனை கிருஷ்ணர் வதம்செய்த தினமாக இது அனுசரிக்கப்படுகிறது.எனவே இதை“நரக சதுர்த்தசி" என்றும் அழைப்பதுண்டு.

Oct 15, 2025

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த தினம்.

இளைஞர்கள், மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள்ஜனாதிபதி, அணு விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்த தினமான அக். 15 உலக மாணவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.  டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்  கலாமின் பொன்மொழிகள் . நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்! உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்! “ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால். ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாள் ஆகின்றான்" .  ."கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான்புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.” "கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.” மாணவர்களே இளைஞர்களே விடை பெறுகிறேன்..நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வது உங்கள் கடமை.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News