25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இன்றைய தினம்

Jun 21, 2025

ஆரோக்கியமான வாழ்விற்கான யோகா* என்ற தலைப்பில் யோகா பற்றிய அறிமுக வகுப்பு ஆன்லைனில் நடைபெற உள்ளது.

உங்களின் உடல், மன ஆரோக்கியத்திற்காக, சர்வதேச யோகா தினத்தில் யோகா கற்றுக் கொள்ள ஓர் வாய்ப்பு.ஞானோதயம் கல்வி அறக்கட்டளை* 21.06.2025 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடத்தும்  *ஆரோக்கியமான வாழ்விற்கான யோகா* என்ற தலைப்பில் யோகா பற்றிய அறிமுக வகுப்பு ஆன்லைனில் நடைபெற உள்ளது.கட்டணங்கள் ஏதுமில்லை.இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள (கூகுள் பார்மை)https://forms.gle/dRAgtxYTSfwD8mec9Google form பூர்த்தி செய்து whatsapp குரூப்பில் இணைந்தால்  காலை 10 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் யோகா வகுப்பில் பங்கேற்கலாம்.WhatsApp group Link https://chat.whatsapp.com/LvatF8EYKLJFqSf3Kd8Ujc

Jun 08, 2025

வைகாசி விசாகம்

முதலில் வீட்டை சுத்தம் செய்து, முருகப் பெருமானின் படம், விளக்கு உள்ளிட்ட அனைத்தையும் சுத்தம் செய்து விட வேண்டும். வைகாசி விசாக நாளன்று அதிகாலையில் எழுந்து முருகப் பெருமான் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். வேல் அல்லது முருகப் பெருமானின் விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அன்றைய தினம் முருகப் பெருமானின் மனம் குளிர குளிர பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும் இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். முருகன்  அவதரித்த வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தை பேரு கிட்டும் என்பது நம்பிக்கை.

May 16, 2025

இராஜபாளையம் மூத்தோர் நலச் சங்கத்தின் சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி “ஆபரேசன் சிந்தூர் வெற்றி பேரணி” உரிய அனுமதியுடன் இன்று மாலை 05:30 மணிக்குநடைபெற உள்ளது.

இராஜபாளையம் மூத்தோர் நலச் சங்கத்தின் சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி “ஆபரேசன் சிந்தூர் வெற்றி பேரணி” உரிய அனுமதியுடன் நடைபெற உள்ளது.   இன்று   மாலை 05:30 மணிக்குநாள்: 17-05-25, சனிக்கிழமை நேரம்: மாலை 05:30 மணிதுவங்கும் இடம் : ஜவஹர் மைதானம் தியாகி P S K  சிலை வளாகம்அங்கிருந்து காந்திகலைமன்றம், PSK பார்க், அம்பலப்புளி பஜார்  வழியாக மீண்டும் ஜவஹர் மைதானத்தை வந்தடையும்.பேரணி *தேசியக்கொடி* ஏந்தி,கீழ்கண்ட கோஷங்களுடன் நடைபெறும்.1. தேச ஒற்றுமை - ஓங்குக .2. முப்படைகளை -  போற்றுவோம்.3. வந்தே மாதரம்  - ஜெய் ஹிந்த் !4. பாரத மாதாகி -  ஜெய்ஆண்கள் வெள்ளை சட்டையும், பெண்கள் குங்குமம் (மெரூன்) கலர் சேலையும் அணிந்து வந்தால் சீருடை போல் நன்றாக இருக்கும்.கட்டுக்கோப்பாக தேசமே முதன்மை என்ற கோட்பாடுடன் *தேசபக்தி உள்ள அனைத்து பொதுமக்களும்* கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.நம் நகர் முன்னாள் இராணுவ  வீரர்கள் வெற்றி பேரணியில்   கலந்து கொண்டு பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

May 11, 2025

சித்ரா பெளர்ணமி 2025 

11.5.2025 ஞாயிறு இரவு முதல் திங்கள் இரவு வரை சித்ரா பெளர்ணமிகடும் வெயில் காலத்தில் குளிர் நிலவுடன் வரும் நாள் சித்திரா பெளர்ணமி அன்றுதான் இந்திர லோக தலைவன் இந்திரன் மதுரை சொக்கரை வழிபட்டு பல வரங்களை பெற்றான் .அழகர் ஆற்றில் இறங்கி மதுரையை சொர்க்கமாக மாற்றும் நாள்.மதுரையின் ஆதி வழிபாடு மட்டுமல்ல தமிழின் ஆதி விழா சித்திரை திருவிழா .கோடிக்கணக்கான உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தன் அவதாரம் நாள்.கணக்கு எழுதுபவரின் பிறந்த நாள் என நமக்கு சூட்சுமமாக சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் ஒளிந்து இருக்கிறதுபூர்வ புண்ணியாதிபதி சூரியன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார் பேரறிவு கிரகம் லக்னத்தில் இருக்கும் நாள் அறிவுக்கு பலம் கொடுக்கும் நாள் அல்லவா அன்றைய தினம் நம் அறிவுக்கண் பிரகாசம் அடையும் நாள்..மதுரையம்பதியில் சொக்கனை நாளை தரிசிப்பவர்கள் நாளை கிரிவலம் வந்து அண்ணாமலையானை பூசிப்பவர்கள் ,தாமிரபரணியில் குளித்து நெல்லையப்பனை காண்பவர்கள் ,கொடுமுடி மகுடேஸ்வரர் ,பவானி சங்கமேஸ்வரரை ,சென்னை கபாலீஸ்வரனை தரிசிப்பவர்கள் மட்டுமல்லஉங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆற்றிலோ குளத்திலோ குளித்து விட்டு அரச மர வினாயகரை காலையோ மாலையோ தரிசனம் செய்தாலும் பெரும் புண்ணியம்.அதிர்ஷ்டம்.அவர்கள் மூளை திறன் பல மடங்கு பிரகாசிக்க போகிறதுநாளை ஒரு வேளை உணவாவது பசித்தவர்களுக்கு கொடுங்கள் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு பேனா வாங்கி கொடுங்கள்முதியவர்கள் வெயிலில் நொந்து நடந்து செல்பவர்களுக்கு குடையோ செருப்போ வாங்கி கொடுங்கள் ..மாலையில் வீட்டில் தீபம் ஏற்றி ,வழிபடுங்கள் .உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் அம்மன் கோயிலில் சிவன் கோயிலில் அபிசேகத்துக்கு பால் வாங்கி கொடுங்கள்.நீண்டதொலைவில்இருக்கும்கோயிலுக்குசென்றுஅவதிபடாதீர்கள்.முக்கியமாக மிதுனம் ,கன்னி ,தனுசு ,மீனம் ராசியினர் அருகில் இருக்கும் கோயிலில் வழிபடுவதே நல்லது.குலதெய்வம் கோயில் சென்று மாவிளக்கு போட்டு சர்க்கரை பொங்கல் வைத்து சுவாமிக்கு பால் அபிசேகம் செய்து வழிபட்டால் எல்லா கஷ்டமும் தீர்ந்து செல்வ நிலை உயரும்.

May 09, 2025

புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா.

மே 1-ம் தேதி கொடியேற்றதுடன், துவங்கிய புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மஞ்சள் நீராட்டு விழா. திரளாக அம்மன் அருளைப் பெற மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். 

Apr 30, 2025

மே தின, உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 2025

வீட்டை உயர்த்திட நாட்டை வளர்த்திட நாளை உருவாக இன்று உழைந்திடும் உன்னதக் கரங்களே..! தொழிலாளர்கள் உங்கள் உழைப்பும் அப்பணிப்புமே நாட்டை  கட்டமைக்க உதவுகிறது.உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் உன்னத தோழனே உன்னுடைய நாளில் உங்களை நாங்கள் வணங்குகிறோம்..!

Apr 29, 2025

அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்.

இந்த அட்சய திருதியை நாளில் வாழ்க்கை எப்போதும் ஏராளமான செழிப்பையும் மகிழ்ச்சியை நிறைந்ததாக இருக்க லட்சுமி தேவியின்பூரண அருள் கிடைக்கட்டும். செல்வ வளம் பெற்று, இன்பமுடன் இனிதே வாழ அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்.

Apr 21, 2025

போப் ஆண்டவர், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாபெரும் தலைவர் மரணமடைந்தார்.

அர்ஜென்டினாவை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி, போப் ஆண்டவராக பொறுப்பேற்று தனது பெயரை "போப்" பிரான்சிஸ்" என்று மாற்றிக் கொண்டார். 12 ஆண்டுகள் போப் பதவியில் இருந்த அவர் , தனது 89 வது வயதில்  (போப் பிரான்சிஸ் 1936 - 2025 )உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.  போப் ஆண்டவர். உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாபெரும் தலைவர். ரோம் நகர போப், புனித பீட்டரின் வாரிசு, வாடிகன் நகர தலைவர் என்ற பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர்.போப் ஆண்டவருக்கு போன்டிபெக்ஸ் மேக்சிமஸ் என்ற பட்டமும் உண்டு. இது "மிக உயர்ந்த பூசாரி" என்று பொருள்படும்.மனித நேயம் மிக்க மறைந்த போப் பிரான்சிஸ், ஒரு மதத்தின் தலைவராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார். அவரது மரணம் உலகத்திற்கே மாபெரும் ஓர் இழப்பாகும். அனைத்து நாடுகளிலும் அவருக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. போப் என்பது லத்தீன் மொழியில்  பொருள் தந்தை ,பப்பா என்ற சொல்லில் இருந்து உருவானது.. ஒரு போப் ஆண்டவர், தான் விரும்பி ராஜினாமா செய்யும் வரையும், மரணம் அடையும் வரையும் அந்த பதவியில் இருக்கலாம். அவரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. 

Apr 13, 2025

இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும்.நல்லதே நடக்க... நானிலம் சிறக்க...மகிழ்ச்சி பெருக...மனிதநேயம் சிறக்க...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  

Apr 05, 2025

CHITRA HOSPITALS

Chitra Hospitals, with a new facelift, to be inaugurated by Thiru K.K.S.S.R. Ramachandran Minister - Revenue and Disaster ManagementVirudhunagar's largest 24/7 Emergency Department to be inaugurated by Thiru P.R. Venketrama Raja Chairman - RamcoThe regions's most advanced Cardiac Surgery Department to be inaugurated by Thiru K.T. Srinivasa Raja MD-Adyar Ananda BhavanThe district's most sophisticated Cardiac Cath Lab to be inaugurated by Dr. G.S.K. Velu Chairman - Neuberg and TrivitronHTI Scans and Labs with the district's first 80-Slice CT Scanner to be inaugurated by Dr. C. Vijayabaskar MLA - Viralimalai | Former Minister - Health and Family Welfare24/7 HTI Pharmacy to be inaugurated by Dr. Xavier Britto Chairman - Kerry Indev Logistics | Movie Producer In the presence ofDr. Rani Srikumar -MP-TenkasiThiru S. Thangappandian -MLA RajapalayamTmt. A.A.S. Pavithra Shyam -Chairperson - Rajapalayam MunicipalityThiru S. Sivaprakasam -Ex-Chairman - AruppukottaiWith the blessings of our founder. Late Dr. K. Bhimraja, M. D.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News