மாதுளை பழச்சாறை தினமும் குடித்து வந்தால், கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறையும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி,BPயை சீராக வைக்க உதவும்.கொலஸ்டிரால் மற்றும்BP குறையும்.மாதுளையில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இது சரும செல்களுக்கு மட்டுமில்லாமல், உடலில் செல்கள் பாதிப்பு, அழற்சியால் ஏற்படக் கூடியChronicdiseasesillness கூறப்படும் நாட்பட்ட நோய்களை குறைக்கும். உடல் செல்கள் புத்துணர்ச்சியாக இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும், மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பானம். மாதுளையில் உள்ள சத்துக்கள்,antiinflammatory கொண்டுள்ளன. அதாவது, உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் ஏற்படும் அழற்சி, சேதம் ஆகியவற்றை ரிப்பேர் செய்து, மூட்டு வலி, வீக்கம், வாதம் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கும் பெண்களின் கருப்பை ஆரோக்கியத்தை பலப்படுத்தும், கருப்பை சார்ந்த குறைபாடுகளை சரி செய்யும் ஆற்றல் மாதுளையில் உள்ளது. எனவே, பெண்கள் தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பது, மாதவிடாய் முதல் பல பிரச்சனைகளை சுலபமாக சரி செய்ய உதவும் மாதுளையில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் செல்களை ஆரோக்கியமாக வைப்பது, வெளித் தோற்றத்திலும் பிரதிபலிக்கும். தினமும் மாதுளை ஜூஸ் குடித்தால் சருமப் பொலிவு கிடைக்கும், வயதாகும் அறிகுறிகள் தாமதமாகும், இதனால் இளமையான தோற்றம் பெறலாம். நோய், ஊட்டச்சத்து குறைபாடு, பலவீனம், கெமிக்கல் சிகிச்சை போன்றவற்றால் முடி அதிகமாக கொட்டினால், தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்தால், முடி உதிர்வு குறைந்து, முடி அடர்த்தியாக வளரத் துவங்கும்.
கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலால் சருமத்தின் நிறம் கருமையாகத் தொடங்கிவிடும். நீங்கள் வெளியே அதிகம் சுற்றுபவராக இருந்தால், இந்த கோடை வெயிலால் சருமத்தின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், சருமத்திற்கு பராமரிப்புக்களை தவறாமல் கொடுத்து வர வேண்டும்.தினமும் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை தவறாமல் கொடுப்பதன் மூலம் சரும செல்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, சரும நிறமும் மேம்படுவதுடன் சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அப்படி சரும நிறத்தை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் ரோஸ் வாட்டர்.இந்த ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் இரவு முகத்திற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், வெயிலால் முகம் கருமையாவது தடுக்கப்படுவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். இப்போது சரும நிறத்தை அதிகரிக்க உதவும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்குகள்.முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்: * முல்தானி மெட்டி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் * ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன் பயன்படுத்தும் முறை: * முதலில் ஒரு பௌலில் முல்தானி மெட்டி பவுடரை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.காபி பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்: * காபித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் * ரோஸ் வாட்டர் - 2-3 டேபிள் ஸ்பூன் பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்: * சந்தன பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் * ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன்பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்: * கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் * ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன் பயன்படுத்தும் முறை: * முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம், கழுத்து, கைகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்: * கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன் * ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன் பயன்படுத்தும் முறை: * முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் இரவு பயன்படுத்தி வந்தால், முகம் கருத்துப் போவதைத் தடுக்கலாம்.
உடற்பயிற்சி + உணவுப்பழக்கத்தின் மூலம் மட்டும் அல்ல. தங்கள் உடல் எடையை சீராக பராமரிப்பவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர், தினமும் காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆய்வு சொல்கிறது.காலை உணவு சரியாக இருந்துவிட்டால், அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலும், சுறுசுறுப்பும், சத்துக்களும் நமக்கு கிடைத்துவிடும்., உடலில் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனை தரக்கூடியது இந்த வைட்டமின் C அதிகமுள்ள உணவுகள்தான். வைட்டமின் C, மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை.. கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், செரிமானத்துக்கும் உதவி புரிகிறது.. உடைக்காத முழுத்தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகு தோசை போன்றவற்றில் வைட்டமின் C அதிகம் நிறைந்திருக்கின்றன.பால், தயிர், பாலாடைக்கட்டிகள் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச்சத்தும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்துக்குத் தேவையான சக்திகள் கிடைக்கின்றன.. அதேபோல ஒரு தக்காளி பழத்தையாவது சாப்பிடுவதால், வைட்டமின் C ஓரளவு பெற முடியும்.. ஓட்ஸ் உணவுகளில் கலோரிகள் குறைந்த கார்போ ஹைட்ரேட்டுகள், பீட்டா குளூக்கன் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கொழுப்பின் அளவை குறைக்கிறது.. சாதாரண ஓட்ஸையே வாங்கி, வேக வைத்து, அதில் தேன், பால், நட்ஸ்களை சேர்த்து சாப்பிட்டாலே போதுமான சத்துக்கள் கிடைக்கும். வெறும் ஓட்ஸிலேயே சிறிது காய்கறிகளை வேகவைத்து உப்புமா போலவும் சாப்பிடலாம்.அரிசி அவல்களைவிட, கோதுமை அவல்களில் நிறைய சத்துக்கள் உள்ள து. இந்த அவல்களில் டிபன் செய்து சாப்பிடுவதால் நல்ல எனர்ஜி கிடைக்கிறது. இப்படி காலை உணவுகளில் எது சாப்பிட்டாலும் இவைகளுடன் சேர்த்து, கிரீன் டீ ஒன்று குடிக்கலாம்.. காலை உணவை சரியாக எடுத்து கொள்ள முடியாத சூழலில், வேகவைத்த முட்டை அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம், வெறும் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சீரகம், பெருஞ்சீரகம், பட்டைத்தூள், சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கலாம்.. அல்லது ஒரு ஸ்பூன் ஓமத்தை, தண்ணீரில் கலந்து, கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்துவந்தாலும் தொப்பை கரையும்.. எலுமிச்சம் சாறு + இஞ்சி கலந்து தண்ணீர் குடிக்கலாம்..இறைச்சி சாப்பிட்டபிறகு, அரை மணிநேரம் கழித்து, சிறிது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், இறைச்சியில் உள்ள புரதச்சத்து முழுவதும் ஊறச்செய்து, செரிமானம் ஆகிவிடும்..கொய்யா இலையில் கசாயம் போல செய்து குடிக்கலாம்.. டீ போட்டுக் குடிக்கலாம்.. இதில் சிறிது இஞ்சியையும் தட்டி சேர்த்து குடித்தால், உடல் எடை குறையும். கெட்ட கொழுப்புகள் கரைந்துவந்துவிடும். அல்லது கொய்யா இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை மெல்ல குறையும். உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.. கொய்யாக்காயையும் தினமும் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்..
நன்றாகதலைமுடி வளர, ஒரு பங்கு சீயக்காய், 1/4 பங்கு வெந்தயம், 1/2 பங்கு பச்சைப் பயிர், புங்கங்காய் ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை நன்றாக ஊறவைத்து பின்பு மிக்சியில் போட்டு அரைத்து கூந்தல் ஷாம்பாக பயன்படுத்தலாம்.ரசாயனம் இல்லாத இயற்கையான முறையில் பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வதை கட்டுப்படுத்தி, முடி வளர ஆரம்பிக்கும்.காயவைத்த செம்பருத்தி பூ ,ஆலமரத்தின் வேரைப்பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் கருமையாக வளரும்.வெங்காயத்தையும், முட்டைகோசையும் பொடிப்பொடியாக நறுக்கி இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலை செம்பு பாத்திரத்தில் வைத்து சிறிது யூடிகோலன் சேர்த்தால்வெங்காயம் வாசனை நீங்கிவிடும்.இந்த சாறுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சீயக்காய் பொடி போட்டு தலை குளித்து வந்தால் முடி பளபளப்பாகவும், மிகவும் மென்மையாகவும் காணப்படும்.
கடலை மாவுடன் தக்காளி மற்றும் தேன் சேர்த்து தினமும் இரவில் முகத்தில் தடவி10 நிமிடம் கழித்து வாஷ் செய்யவும்.தக்காளியுடன் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து ஸ்க்ரப் போல் முகத்தில் அப்ளை செய்யவும். பச்சை பால், கடலை மாவு, தேன் சேர்த்து மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி20 minituesகழித்து காட்டன் துணியை நனைத்து துடைத்து எடுத்தால் சருமம் ஜொலிக்கும்.கடலை மாவுடன் தயிர், ஓட்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, வெவெதுப்பான நீரால் வாஷ் செய்யவும்.கடலை மாவில் எலுமிச்சை பிழிந்து மிக்ஸ் செய்து, பருவில் வைத்தால் போதும், முகத்தில் முகப்பருவே வராமல் நின்று விடும்.கடலை மாவு குளிர்ச்சி என்பதால் முகத்தில் அதிக நேரம் ஊற விட கூடாது. அதே போல் நீரை கொண்டு மட்டுமே வாஷ் செய்ய வேண்டும்.
முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள பெண்கள்நினைப்பார்கள்.ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன. சில நிமிடங்களில் முகம் பளபளக்க....தேவையான பொருட்கள்· எலுமிச்சை பழம்-1· தக்காளி - 1· அரிசி - 3 ஸ்பூன்· தயிர் - 2 ஸ்பூன்· மஞ்சள் - 3 ஸ்பூன்· கடலை அல்லது அரிசி மாவு - சிறிதளவு செய்முறை-முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் எலுமிச்சை, தக்காளி, அரிசி போன்றவற்றை நன்கு அரைத்து,பின் இதை ஒரு வட்டிகட்டியில் வடித்து தண்ணியாக எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தயிர், மஞ்சள், கடலை அல்லது அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் சிறிய ப்ரெஷ் கொண்டு அப்ளை செய்யவும்.20நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும் முகம் பிரகாசமாக இருக்கும்.இந்த FacePackஐ வாரத்திற்கு ஒருமுறையாவது பயன்படுத்தி வர முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.
பாதம்- வெடிப்பு காணாமல் போக கால் டம்ளர் நீரை கொதிக்க வைத்து மஞ்சள் தூளை குழைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போதே சேற்றுப்புண் மீது தடவி கொள்ள வேண்டும். இரவு முழுவதும் காய்ந்தால் மறுநாளே இந்த புண் ஓரளவு மட்டுப்படும்.விளக்கெண்ணெயை நன்றாக சூடு செய்து, உடனே அதில் வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்து, பொடி செய்து போட்டால்,பாதங்களில் வறட்சி. மறை ந்து விடும்..கலவையை வெதுவெதுப்பாக பாதத்தில் போட்டால் பாதம் மிருதுவாகும்.. வெடிப்பு காணாமல் போய்விடும்கால் விரல் இடுக்குகளில் வரக்கூடிய புண்கள் தான் சேற்றுப்புண் என்று அழைக்கப்படுகிறது. மண்களில் மழைக்காலங்களில் சேறு சகதிகள் இருக்கும் இடங்களில் பாக்டீரியாவும் நுண்கிருமிகளும் இருக்க கூடும். இந்த இடங்களில் நீண்ட நேரம் நிற்கும் போது, அல்லது இவை கலந்திருக்கும் நீரில் நீண்ட நேரம் நின்று துணிகளை துவைக்கும் போது, பாதங்களுக்கு நடுவே இரண்டு விரல்களுக்கு நடுவே அரிப்பையும் புண்ணையும் உண்டாக்கும்..
எலுமிச்சை மற்றும் சர்க்கரை இவை இரண்டும் சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி10,-15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். கற்றாழை ஜெல் வயதான தோற்றத்தை குறைக்க மிகவும் நன்மை பயக்கும். கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சையுடன் ஒரு நல்ல ஃபேஸ் பேக்கை தயார் செய்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.முகத்தில் எலுமிச்சை சாறு தடவுவது பல நன்மைகளை தரும். பளபளப்பான சருமத்தை பெற எலுமிச்சை மிகவும் உதவும். சுருக்கங்களைக் குறைக்கவும் உதவும்.சருமம் கருத்து போவதைத் தடுக்கும்.எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக முன் முகத்தில் தடவவும்-5,-7 நிமிடங்கள் முகத்தை நன்றாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். கலந்து இரவு படுக்க செல்வதற்கு எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டரில் வயதான* தோற்றத்தைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. தேனில் வயதான தோற்றத்தை குறைக்கும் பண்புகள் உள்ளன. தேனை எலுமிச்சை சாறுடன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும்..15,-20 நிமிடங்கள் முகத்தை அப்படியே ஊற விடவும். இதன் மூலம் முகத்தில் சுருக்கம் விழாமல் இருக்கும். .
.வெள்ளை முடிகருப்பாக வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான வைத்தியங்கள்.மோசமான உணவு, அதிகப்படியான காபி, டீ, மரபணு போன்ற காரணங்களால் நரை முடி ஏற்படுகிறது.தலை முடி நரைப்பதை தடுக்க,பாதாமில் கேடலேஸ் என்ற என்சைம் உள்ளது, இது தலை முடி நரைப்பதை தடுக்கிறது. இது தவிர, பாதாமில் இருக்கும் காப்பர், மெலனினை உற்பத்தி செய்கிறது, இதனால் வெள்ளை முடி வராது. பாதாம் தலை முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். பாதாம் சாறு தயாரிக்கும் முறைபாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.மறுநாள் காலை அதை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை வடிகட்டி சாறை மட்டும்· தனியாக எடுத்துக்கொள்ளவும்.உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசவும்.அதன் பிறகு வடிக்கட்டிய பாதாம் சாறை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அலசவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடியில் தடவி மாற்றத்தை பார்க்கவும். BLACK COFFEE தயாரிக்கும் முறைகருப்பு காபியைவெள்ளை முடி பிரச்சனைக்கும் பயன்படுத்தலாம். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து.அதில்4-,5 டீஸ்பூன் காபி தூளை சேர்க்கவும். பின்னர் ஆற வைக்கவும்.இந்த கருப்பு காபியை உங்கள் தலைமுடியில் தடவவும்.சுமார் அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியை அலசவும். உங்கள் தலைமுடி கருப்பாக மாறும். .
இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். இருப்பினும், அழகு என்பது காலப்போக்கில் மாறுகின்றன.அதுப்போலவே உதட்டின் வண்ணமும் மாறிவிடும். பலருக்கு கருமையான உதடும் இருக்கிறது. இது அவர்களின் மொத்த அழகையும் தடுக்கிறது .என்று கூறலாம். இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். இருப்பினும், அழகு என்பது காலப்போக்கில் மாறுகின்றன.உதட்டின் வண்ணமும் மாறிவிடும் எனவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து கருமையான உதட்டை மாற்றலாம்.. தோல் நிறத்தைப் போலவே, உதடுகளின் நிறமும் நபருக்கு நபர் மாறுபடும். கருமையான சருமம் உள்ளவர்களுக்கு உதடுகள் கருமையாக இருக்கும்.இயற்கையாகவே கருமையான உதடுகளைக் கொண்டவர்கள் வீட்டு வைத்தியம் மூலம் தற்காலிகமாக அவர்களை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற முடியும்..மஞ்சள் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்த பேஸ்டை வடிக்கட்டி சாறு மற்றும் தனித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.தனியாக பீட்ரூட் சாறு எடுத்து வைத்ததை அடுப்பில் வைத்து சூடாக்கிக் கொள்ளவும். கெட்டியாக வரும் போது சுத்தமான நெய் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும்.அடுப்பில் இருந்து இறக்கிய ஆறியவுடன் ஒரு சிறிய டப்பாவில் அடைத்து 2 மணி நேரம் குளிரூட்டியில் வைக்கவும். பயன்படுத்தும் முறைமுதலில் மஞ்சள் மற்றும் சர்க்கரை சேர்த்து தயார் செய்து வைத்திருந்த கலவையை வைத்து உதட்டில் தேய்த்து சுத்தம் செய்துக்கொள்ளவும்.அடுத்ததாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த கலவையை உதட்டில் பூசலாம். உதட்டின் வண்ணமும் இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.