25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


அழகுக் குறிப்பு

Sep 01, 2026

சருமப் பராமரிப்புக்கு வேப்பிலை .

வேப்பிலை நம் பாரம்பரியத்தில் பல ஆண்டுகளாக இயற்கையான பராமரிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் வேப்பிலையைப் பயன்படுத்தும் பல வீட்டு முறைகள் உள்ளன.வேப்பிலையை நன்கு கழுவி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் நீரை வடிகட்டி வைத்துக்கொள்ளலாம்.இந்த வேப்பிலை நீரை குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு கலந்து பயன்படுத்துவது பாரம்பரியமாக சருமப் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.மேலும், வேப்பிலை நீரை காட்டனில் நனைத்து முகத்தில் மெதுவாகத் தடவி வருவது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

Aug 27, 2026

பெண்களின் அழகு -ரகசியங்கள்.

தேங்காய் எண்ணெய் - குளிக்கும் முன் உடலெங்கும் தடவி, கடலைமாவுடன் குளித்தால்- தேகம் மின்னும்.மஞ்சள் + கற்றாழை - முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்தால் - முகம் கொழுகொழுவென மாறும்.கேரள அரிசி - பாலிஷ் செய்யாத பெரிய அரிசி- ஊட்டச்சத்தும், அழகும் சேரும்.பால் - முகத்தில் தடவினால் துளைகள் மூடி, நிறம் மங்காமல் காக்கும்.செம்பருத்தி + சீயக்காய் -ஷாம்பூவிற்குப் பதில் - கருங்கூந்தலை நீளமாக்கும்.வீட்டுக் காஜல் - கண்களை பளிச்சென்று அழகாக்கும்.சந்தனம் + முல்தானி மெட்டி - முகத்தில் தடவினால் - பளிங்குபோல மின்னும்.நல்லெண்ணை + கோதுமை மாவு + மஞ்சள் - முகத்தில் தேய்த்தால் - முடிகள் தானாக விழுந்துவிடும்.

Aug 25, 2026

முகப்பரு வந்தால் .

ஒரு நாளைக்கு 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை வெறும் நீரால் முகம் கழுவு வேண்டும்.கற்றாலை ஜெல்லை நன்றாக மசித்து, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து முகத்தில் போடலாம்.வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, அத்துடன் வெந்தயம் எசன்ஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம்.

Aug 18, 2026

வெள்ளை முடி கருப்பாக …...

நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி இயற்கையாகவே கருமை கலந்த ஊதா நிறத்தை தருவது. மருதாணி இலை சிவப்பு நிறத்தை தரும். முதலில் மருதாணி இலையினை அரைத்து தலையில் தடவி சிறிது நேர இடைவெளியில், அவுரி பொடியையும் தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து சுத்தம் செய்தால் வெள்ளை முடிகளில் கருமை நிறம் ஏறி இருக்கும். கரிசலாங்கண்ணியுடன் கறிவேப் பிலை மற்றும் நெல்லிக்காய் பொடி இணைத்து அரைத்து முடிகளின் வேர் கால்களில் படும்படி தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் வெள்ளை முடியின் வளர்ச்சி கட்டுக்குள் வரும்.

Aug 11, 2026

பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.

ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும். பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.

Aug 04, 2026

தலைமுடி உதிர்வைத் தடுக்கும் வழிகள்.

முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டி தடவினால் முடி வளரும்.கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து, பாசிப்பருப்பு மாவு கலந்து தேய்த்தால் முடி உதிர்தல் நிற்கும்.கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும், தலையும் குளிர்ச்சியாகும்.சிறிய வெங்காய சாறை தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளிப்பது முடி உதிர்வைத் தடுக்கும்.செம்பருத்தி பூ + தேங்காய் எண்ணெய் கலவை கூந்தலைக் கருமையாக்கும்.முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து சீயக்காய் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது முற்றிலும் நிற்கும்.

Jul 28, 2026

கோடை சருமத்திற்கு அற்புதம் செய்யும் கற்றாழை ஐஸ் கட்டிகள்.

வெயில் காலத்தில் ஏற்படும் சரும வறட்சி மற்றும் பொலிவிழப்பைத் தடுக்க கற்றாழை ஐஸ் க்யூப்ஸ் (Ice Cubes) சிறந்த தீர்வாகும்.தயாரிக்கும் முறை: கற்றாழை ஜெல்லினை நன்றாகக் கூழாக்கி, ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைத்து இதனைத் தயாரிக்கலாம்.பயன்கள்: இந்த ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்வதால் சருமம் குளிர்ச்சியடையும், துளைகள் இறுக்கமடைந்து சுருக்கங்கள் குறையும். மேலும்,  இது முகப்பரு மற்றும் தடிப்புகளைக் கட்டுப்படுத்தி முகத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகிறது.

Jul 21, 2026

சரும பொலிவு மற்றும் நிறம் மேம்பட பன்னீர் ரோஸ் (Paneer Rose) .

தோல் பொலிவு மற்றும் பளபளப்பு.முகத்தை பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் நீங்கி பிரகாசமாகவும் வைக்க விரும்புபவர்களுக்கான சோப்புகள்:பன்னீர் ரோஸ் (Paneer Rose).முகத்திற்கு இயற்கையான ரோஸ் நிற பொலிவையும் மென்மையையும் தரும்.பீட்ரூட் கேரட்(Beetoot Carrot  ).சருமத்தின் வறட்சியை நீக்கி, இயற்கையான நிறத்தை மேம்படுத்தும் அதிமதுரம் .தோலில் உள்ள மங்கலான நிறம் மற்றும் கருந்திட்களை போக்க உதவும்.

Jul 14, 2026

கருகருவென முடி வளர முடக்கத்தான் கீரை  .

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். அதுமட்டும் அல்ல ,இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

Jul 07, 2026

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள்..

பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக்கான முக்கியத்துவம் அளவுக்கு மீறி உள்ளது. மேக்கப் செய்ய ஆர்வம் இல்லாதவர்கள் கூட லிப்ஸ்டிக்குடன் vஅலம் வருகின்றனர்.  ஆனால் லிப்ஸ்டிக்கின் தேர்வில் கவனம் செலுத்துவது அவசியம். சில லிப்ஸ்டிக்குகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உண்டு. லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்? லிப்ஸ்டிக்கில் உள்ள ஈயம், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். பித்தலேட்டுகள், நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளை பாதிக்கும். பாலி எத்திலின், கிளைகோலிக் அமிலம் போன்றவற்றின் பயன்பாடு நரம்பு மண்டலத்திற்கும் பாதிப்புகளை உண்டாக்கக்கூடியது. பாரபின் (மெழுகு) ரசாயனமும், சருமத்துக்குள் ஊடுருவி சரும எரிச்சல், புற்றுநோய் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். லிப்ஸ்டிக் வாங்கும் முன், அதில் உள்ள பொருட்களை கவனித்து, அது எவ்வளவு பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்துகொள்ள வேண்டும். லிப்ஸ்டிக்கில் ஈரத்தன்மை ஏற்படுவதால், உதடுகளில் திடீரென அரிப்பு ஏற்படும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒவ்வாமை பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். பெரும்பாலான ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையை கொண்டுள்ளதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் ஏற்படக்கூடும். லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்பட்ட ரசாயனங்கள், இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுத்தும். பெட்ரோ கெமிக்கல்கள், நாளமில்லா சுரப்பி செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை உருவாக்கலாம். அடிக்கடி லிப்ஸ்டிக் பயன்படுத்துவது, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் காட்மியம் அதிக அளவில் இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 27 28

AD's



More News