தேன், ஆரஞ்சுப் பழச்சாறு, ரோஸ் வாட்டர், முல்தாணிமட்டித்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பேக் போட்டு நன்கு காய்ந்த பின்பு கழுவி வர சருமம் பொலிவு பெறும்.வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 1 தேக்கரண்டி இம்மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர பருக்கள் மறைவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.எண்ணெய் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருக்கும். இதற்கு தக்காளிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து பேக் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவி வர துவாரங்கள் இறுக்கமாகும்.நன்றாக பழுத்த வாழைப்பழத்தில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றை கலந்து நன்றாக மசித்து பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவவேண்டும்
தேவையான பொருட்கள்- கோதுமை மாவு - 2 ஸ்பூன் பால் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு பயன்படுத்தும் முறை- முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, பால் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்துக்கொள்ளவும் பின் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும். இதற்கடுத்து முகத்தில் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது சருமத்தில் உள்ள முடிகள் நீங்கும். அதன் பின் மூகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, உலர்த்த வேண்டும் இந்த பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.
உதடுகளின் கருமையை நீக்க, குங்குமப்பூவை பச்சைப் பாலில் அரைத்து உதடுகளில் தேய்க்கவும். இதன் பயன்பாடு உதடுகளின் கருமையை நீக்குவது மட்டுமல்லாமல், முன்பை விட கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும்
சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு. கருவளையத்தை நீக்கும் வெள்ளரி. பொடுகைப் போக்கும் எலுமிச்சை. நரைமுடிகளைப் போக்கும் நெல்லிக்காய். முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை. உதட்டிலுள்ள கருமையைப் போக்கும் புதினா இலை. தலைமுடியை கருமையாக்கும் கறிவேப்பிலை. முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள். வசீகர அழகை தரும் ஆரஞ்சு. தோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை.
சிலர் உடல் எடை அதிகமாக இருப்பதால் உடலை நினைத்து மிகவும் வருந்துவார்கள். இந்த நிலையை போக்குவதற்கு கருமிளகு தூள் 1/4 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 3 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி மூன்றையும் நீரில் நன்றாக கலந்து உடல் எடை அதிகம் உள்ளவர்கள் 3-4 மாதம் வரை தொடர்ச்சியாக குடித்து வர விரைவில் உடல் எடை மாற்றம் அடையும்.இதுமட்டும் இல்லாமல் 3-4 மாதங்கள் வரை காலை உணவிற்கு முன்பு தினமும் 1 தக்காளி சாப்பிட்டுவர உடல் எடையானது குறைவதை நீங்களே அறியலாம்.அடுத்து உடல் எடையினைகுறைப்பதற்கு முழுமையாக கருவேப்பிலை இலையினை 10 முதல் 12 இலைகளை சாப்பிட்டு வர 3 அல்லது நான்கே மாதங்களில் உடல் எடை முற்றிலுமாக மெலிவடைந்துவிடும்.
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பாதங்களில் வறட்சி காணமாக வெடிப்பு உண்டாகும். உடல் எடை அதிகரித்தாலும் அழுத்தம் ஏற்பட்டு பாத வெடிப்பு உண்டாகும். இதற்கு மருதாணி இலைகள் சிறந்த தீர்வைத் தரும். குளிர்ச்சி தன்மையுடைய மருதாணி இலைகளை அரைத்து வெடிப்புகள் உள்ள இடங்களில் தடவி உலர்ந்த பிறகு கழுவிவர வெடிப்புகள் மறைந்துவிடும்.
உடலில் ஏற்படும்வெளுப்பு மற்றும் தேமல் நோய் குணமாக சிறந்த மருத்துவகுணம் உள்ள வெள்ளை பூண்டை, வெற்றிலை சேர்த்து ,மசிய அரைத்து ,தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துக்குளித்து வர நல்ல மாற்றம் எற்படும்.பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடங்களில் பூசி வர முகத்தில் காணும் தேமல் அகலும்.அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள் , மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும். இந்த நாயுருவி இலையானது எளிதாக கிராமப்புறங்களில் கிடைக்க கூடியது. அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், நாட்டுமருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
கொய்யா இலை10,5 செம்பருத்தி அரைத்து சாறு எடுத்து கடுகு வெந்தயம் பொன்னிறமாக வறுத்து தூளாக்கி இரண்டு ஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடியை இரண்டு ஸ்பூன் கொய்யா சாற்றில் கலந்து தேவைக்கு நீரிட்டு ,நன்கு தடவி அரை மணி நேரம்ஊறவைத்து மாதத்தில் ஒரு முறை குளித்தாலே போதும் தலை முடி நன்கு கருப்பாக ஆகும், டை தேவையில்லை.
முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க பலாப்பழ கொட்டையை பயன்படுத்துங்கள். ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பால் எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கி பலாப்பழ கொட்டையை பாலில் நன்கு ஊறவை வேண்டும். இவற்றுடன் தேன் சேர்த்து பேஸ்ட் போல் எடுத்து முகத்தை நன்கு கழுவிய பின் இவற்றை முகத்தில் அப்ளை மசாஜ் பண்ணவும். வாரத்திற்கு ஒரு முறைஇப்படி செய்தால்சுருக்கம்நீங்கிபொழிவுகிடைக்கும்.பலாப்பழத்தில்வைட்டமின்ஏ, வைட்டமின்சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது.
சீரகத்தூள் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும் பருக்கள் இருந்த தடமும் நீங்கும். கற்றாழை ஜெல் மஞ்சள்தூள் சர்க்கரை பேக்கிங் சோடா ஆகியவற்றை கலந்து இந்த பேஸ்ட்டை கழுத்தை சுற்றி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் கழுத்தை சுற்றியுள்ள கருமை நீங்கும். காபி பொடி சர்க்கரை சேர்த்து தக்காளியில் தொட்டு முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவாக இருக்கும்.கோவக்காய் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.