முழங்கை கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பூசி வந்தால் மிருதுவாக மாறும். வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால், முகம் பிரகாசமாக இருக்கும்.
ஒரு கைப்பிடியளவு வெந்தயக்கீரை, சிறிது துளசி இலைகள், சிறிது கொத்துமல்லி இலை ஆகியவற்றை ஒன்று சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் உள்ள பருக்களில் பூசி வந்தால், பருக்கள் மறைவதோடு, பருக்கள் ஏற்படுத்திய கரும்புள்ளிகளும் மறையும்.
200 கிராம் பச்சை பயிறு. 100 கிராம் கடலை மாவு .50 கிராம் ரோஜா இதழ் பொடி .50 கிராம். ஆரஞ்சு தோல் பொடி. 10 கிராம் பூலாங்கிழங்கு பொடி. 10 கிராம் பாதம் பருப்பு பொடி.இவற்றினை எல்லாம் ஒன்று சேர்த்து நன்கு மாவாக அரைத்து ஜலித்து எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த கலவையை குளிக்கும் பொழுது பயன்படுத்தினால் எந்தவிதமான பிரச்சனையும் வராது. இந்த கலவையானது குழந்தையின் தோல் நிறத்தினை மாற்ற உதவுகிறது.
முடக்கத்தான் கீரையை வாரம் ஒரு முறை அரைத்து தலையில் தேய்த்து5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பார்க்கவும்.முடி கொட்டுவது நின்று விடும். அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும்.கருகருவென முடி வளர தொடங்கும்.
ஆவாரம்பூ10 கிராம், வெந்தயம்100 கிராம், பயத்தம் பருப்பு1/2 கிலோ, இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.இந்தப் பவுடரை குளிப்பதற்கு முன், வெந்நீரில் கரைத்து,15 நிமிடங்கள் ஊற வைத்த பின் அந்தப் பேஸ்ட்டை வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நின்றுவிடும்.முடி நல்ல அடர்த்தியாக சில்க்கி ஆக மாறுவது கண்கூடாக காணலாம்.
2 ஸ்பூன் ஆப்பிள் சாறுடன் சிறிது தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விட ,பொலிவிழந்த சருமம் கண்ணாடி போல் பளபளக்கும்.நெய் ஃபேஸ்பேக் சந்தனம் 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், அத்துடன் நெய் சிறிது சேர்த்து நன்கு குழைத்து,முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து ,வெதுவெதுப்பான நீரில் கழுவி விட முகத்திற்கு உடனடி பொலிவையும் தரும்.
தினந்தோறும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய், கனிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.தினமும் வைட்டமின் ஏ நிறைந்த கேரட் மூன்று நிற வகைப் பழங்கள் சாப்பிடுங்கள். சருமத்துக்குப் பொலிவைத் தந்து இளமைத் தோற்றத்தை தக்கவைக்கும்.மறக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
குளிப்பதற்கு சோப் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது.சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக நலங்கு மாவு பயன்படுத்தினால் சருமம் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.நலங்கு மாவு செய்ய தேவையானவை:கடலை மாவு, பச்சை பயிறு மாவு- கால் கிலோ,வெட்டிவேர், விளாமிச்சு வேர். பூலாங்கிழங்கு, கோரைக் கிழங்கு, சந்தனச் சிராய், ஆவாரம் பூ, ஆகியவை 50 கிராம், கார்போக அரிசி, காட்டுச் சீரகம் -20 கிராம்.மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை அரைத்து சலித்து குளியலுக்கு பயன்படுத்த முகம் இயற்கை பொலிவு பெறும்.
சிலருக்கு உதட்டிற்கு மேல் பகுதியில் முடி வளர்ந்து அழகை கெடுக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் சர்க்கரை இரண்டையும் சிறிதளவு தண்ணீர் விட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும்.ஆறியதும் முடிகள் உள் இடத்தில் தடவி வர சருமத்தில் உள்ள முடிகளை முற்றிலுமாக நீக்கிவிடும்.
சின்ன வெங்காயம் வேப்பிலைக் கொழுந்து இரண்டையும் சுத்தம் செய்து, அரைத்து முற்றிய தேங்காய்ப்பால் அல்லது தயிருடன் கலந்து, கூந்தலில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசவும் பொடுகு அகன்று தலை சுத்தமாகும்.ஆவார இலைச்சாற்றை புற்று மண்ணுடன்.கலந்து தலையில் பூசி அரை மணி கழித்து குளித்து வந்தால் விரைவில் பொடுகு குணமாகும்.