25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அழகுக் குறிப்பு

May 25, 2025

உதடுகள் செவ்வாழை  நிறம் பெற...

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவிடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர, உதடுகள் செவ்வாழை   நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

May 21, 2025

தேமல் மறைய ...

அறுகம்புல், கஸ்தூரி மஞ்சள், மருதாணி இலை இம்மூன்றையும் அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் குணமாகும்.வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் தேமல் மறையும். வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்கலாம்.வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து, தேமல் உள்ள இடத்தில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

May 15, 2025

முடி  கொட்டுவதை தடுக்கும்  பாரிஜாதபூ .

பாரிஜாத பூக்கள் வெள்ளை நிற இதழ்களோடு மிகவும் அழகாக இருக்கக்கூடும். அதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால், கூந்தல் ஆரோக்கியத்திற்கு, ஏற்றதாக கருதப்படுகிறது. பாரிஜாத பூ, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்கிறது.இந்த பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால், முடி வளர்ச்சியை பாதிக்கும் பொடுகு மற்றும் பிற உச்சந்தலை நோய்த்தொற்று பிரச்சனைகளை சரிசெய்ய உதவக்கூடும்.இந்த பூவில் காணப்படும் ஃபிளாவனாய்டுகள், சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து கூந்தலை பாதுகாக்கக்கூடும். இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறக்கூடும் .பாரிஜாத பூ மற்றும் தேங்காய் எண்ணெய் காம்போ, உச்சந்தலைக்கு ஊட்டச்சத்து அளித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி இழைகளை வலுப்படுத்தி முடி உடைதலை தடுக்கவும் பயன்பெறுகிறது.கூந்தலில் பல பிரச்சனைகளுக்கு பாரிஜாத பூ பேஸ்ட் சிறந்த தீர்வாகும் இருக்கும். குறிப்பாக, முடி உதிர்தல், பொடுகு மற்றும் வழுக்கை தலை பிரச்சனையை சரிசெய்யக்கூடும். இதனை வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது பயன்படுத்த வேண்டும்.பாரிஜாத பூக்களை தண்ணீரில் அலசிவிட்டு, அவை பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக நசுக்கவும். அத்துடன் வெந்தய விதை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். பிறகு, அந்த பேஸ்டை உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவி 15 நிமிடங்கள் ஆனதும் சுத்தமான தண்ணீரில் அலச வேண்டும்.பாரிஜாத பூ தண்ணீர், முடி உடைதலை தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறையாவது பாரிஜாத தண்ணீரில் முடியை அலசி வந்தால், பல கூந்தல் பிரச்சனைகள் நீங்கக்கூடும். பாரிஜாத பூக்களை தண்ணீரில் 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, பூக்களை நீக்கிவிட்டு அந்த தண்ணீரை கொண்டு முடியை நன்றாக கழுவ வேண்டும்.

May 05, 2025

சரும பொலிவை அதிகரிக்கும் தேநீர் வகைகள்

 ரோஜா தேநீர்ரோஜா வாசனை மிக்க பூ. ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் நறுமணமிக்க பன்னீர் அழகுப் பராமரிப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கும் குல்கந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. சரும பராமரிப்பில் ரோஜாவுக்கு தனி இடம் உண்டு. இது சரும சுருக்கங்களை குறைத்து பொலிவாக வைத்திருக்க செய்யும். இந்த ரோஜா இதழ்களை தேநீராக்கி குடித்தால் சருமம் பளபளப்பதை நன்றாகவே பார்க்கலாம்.மல்லிகை பூ தேநீர்மல்லிகை தேநீரில் இருக்கும் இயற்கை எண்ணெய்கள் சருமத்தை புத்துயிர் பெறவும் நிறமிகளை சமன் செய்யவும் உதவுகிறது. சருமத்தில் மெல்லிய கோடு களை குறைக்கவும் செய்கிறது. இந்த மல்லிகை தேநீரை தினமும் பருகி வருவதன் மூலம் சருமத்தை பளபளப்பாக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் செய்யும். 

Apr 18, 2025

HIBISSCUS  tea

செம்பருத்தி. கூந்தல் அழகுக்கு இது மூலப்பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமாகவே உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் முடிக்கு ஏற்றது. வெளிப்பராமரிப்பு போன்று இது சருமத்துக்கும் நச்சு நீக்கும் மூலிகையாகவும் செயல்படுகிறது. நீரேற்ற பண்புகளைகொண்டுள்ளதால்,இதுதோல்வறட்சி, அரிப்புபிரச்சினைகளைகுறைக்கிறது.இதில்உள்ளகொலாஜன் சரும பொலிவிற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது

Apr 11, 2025

மகிழம்பூ.

கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாப்பதில் மிகவும் முக்கியம் வாய்ந்தது மகிழம்பூ என்றே சொல்லலாம். வேனல் கட்டி  சூடுகட்டி, உஷ்ணகட்டி, போன்ற அனைத்தையும் நீக்க ஒரு கைப்பிடி மகிழம் பூவை நீர் விட்டு அரைத்து அப்படியே முகத்திலும், உடலில் கட்டிகள் இருக்கும் இடத்திலும் தடவி காய்ந்ததும் குளித்து வர கட்டிகள் காணாமல் போகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்

Apr 10, 2025

வயதானாலும் பளபளப்பான சருமத்தை பெற…

அனைத்து பெண்களுக்கும் தங்களது சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்  ஆசை .ஆனால் நேரகுறைப்பாட்டால் அதை சீராக பராமரிக்க முடிவதில்லை. நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சில Face Pack முகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் நன்மையை வழங்கும்.முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடித்துக்கொள்ளவும். அதை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.ஓர் பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் ஒருடீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவும். வெள்ளரிக்காரய சிறிய துண்டுகளாக வெட்டி பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். பின் அதில் தயிர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் இறுக்கமான சருமம் கிடைக்கும். கற்றாழையை சிறிய துண்டுகளாக வெட்டி அதில் உள்ள ஜெல் மற்றும் வெட்டி எடுக்கவும். அதை முகத்தில் நேரடியாக தடவி 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு கழுவவும்.  ஓர் பழுத்த பப்பாளிப் பழத்தை மசித்து எடுத்து அதில் தேன் சேர்த்து முகத்தில் தடவவும்.20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.  ரோஸ் வாட்டர் அல்லது தயிருடன் உளுத்தம்பருப்பு மாவை கலந்து எடுத்துக்கொள்ளவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து ஸ்க்ரப் செய்யவும். பின்னர் தண்ணீரில் கழுவினால் பளபளப்பான சருமம் கிடைக்கும். 

Apr 04, 2025

வெயில் காலத்தில் முகம் எப்போதும் பிரகாசமாகவும், சரும பிரச்சனைகளின்றியும் இருக்க...

ஒவ்வொருவருமே தங்களின் முகம் எப்போதும் பிரகாசமாகவும், சரும பிரச்சனைகளின்றியும் இருக்க வேண்டுமென்று விரும்புவோம். இதற்காக சருமத்திற்கு பலவிதமான பராமரிப்புக்களையும் கொடுத்து பாதுகாத்து வருவோம். ஆனால் கோடைக்காலம் வந்துவிட்டால், இவை அனைத்தும் பாழாகி, சருமத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பதோடு, சருமமும் வெயிலால் கருமையாகத் தொடங்கும்ஆனால் நீங்கள் உங்கள் முகம் வெயில் காலத்தில் கருமையாகக்கூடாது என்று விரும்பினால், ஒருசில பொருட்களைக் கொண்டு தினமும் தவறாமல் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும்.ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 3-5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு அதை 15, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2, 3 முறை பயன்படுத்தி வர, சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், சிறிது தயிரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம், கழுத்து மற்றும் கருமையாக இருக்கும் கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு அதை 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், கருமையாக இருக்கும் சருமம் வெள்ளையாக மாறுவதைக் காணலாம்.ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், சரும கருமை விரைவில் நீங்கும். முதலில்4,5 ஸ்ட்ராபெர்ரியை துண்டுகளாக்கி, பிளெண்டரில் போட்டு, அத்துடன்1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு3 முறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பொலிவோடு மின்னும்.

Mar 24, 2025

சருமத்தில் உள்ள கருமையை அகற்ற...

வெயிலால் முகம் கருமையாகாமல், பளிச்சென்று வெள்ளையாகவே இருக்க வேண்டுமானால், அதற்கு நம் வீட்டில் உள்ள தயிர் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் வெளியேற்றி, சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக தயிர் மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இப்படிப்பட்ட தயிரை ஒருசில பொருட்களுடன் சேர்த்து ஃபேஸ் பேக் தயாரித்து கோடைக்காலத்தில் பயன்படுத்தி வந்தால், முகம் கருமையாகாமல் வெள்ளையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.  சரும கருமையைப் போக்கும்  தயிர் ஃபேஸ் பேக். ஒரு பௌலில்1,2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.பின் அதை முகம், கழுத்து மற்றும் கருமையாக இருக்கும் கைகளில் தடவி3,5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.அதன் பின்15,20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இப்படி வாரத்திற்கு2,3 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமையை அகற்றலாம்.

Mar 23, 2025

முகம் அழகு பெற...

தினமும் முகத்தில் சோப்பு போடுவதற்கு பதிலாக, ஆவாரம் பூ பொடி, மஞ்சள் பொடி சேர்த்து, முகத்தில் தேய்த்து குளித்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள்,கரும்புள்ளிகள், மருக்கள், கரும் திட்டுக்கள் நிரந்தரமாக நீங்கும். முகம் அழகு பெறும்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 25 26

AD's



More News