25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


அழகுக் குறிப்பு

Oct 09, 2023

சோற்றுக்கற்றாழை

சோற்றுக்கற்றாழையை நல்லெண்ணெய்விட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், தலைமுடி நன்றாக வளர்வதோடு நல்ல தூக்கம் வரும். இதே எண்ணெயை உள்ளுக்கு சாப்பிடுவதால் கல்லீரல் நோய்களிலிருந்து விடுதலை கிடைப்பதோடு,நீண்டகால மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுதலை கிடைக்கும் மேலும் இந்த எண்ணெய் பெண்களுக்கு வரக்கூடிய மாதவிலக்கு கோளாறுகளை சரி செய்யும் வல்லமை படைத்தது.உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை  ஒழுங்குபடுத்துவதிலும் இதன் பங்கு அதிகம்.முகச்சுருக்கத்தை போக்கி முகத்துக்கு அழகுதரும், சோற்றுக்கற்றாழை.

Oct 04, 2023

வெயிட் குறைய வெந்தயத் தேநீர்  !

வெந்தயத்தில் தேநீர் தயாரித்து குடிப்பது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெந்தய டீயை தொடர்ந்து அருந்துவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.வெந்தயத்தை தேநீராக தயாரிக்க தேவையான பொருட்கள்1 தேக்கரண்டி வெந்தயம்1 கப் தண்ணீர்1 தேக்கரண்டி தேன்ஒரு கைப்பிடி துளசி இலைகள்தேயிலை இலைகள் (டீத்தூள் வழக்கமாக பயன்படுத்துவது)வெந்தய தேநீர் தயாரிக்கும் முறைஒரு சிறிய ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். இப்போது தண்ணீர், வெந்தய விதை தூள், துளசி இலைகள், டீத்தூளை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து, பின்னர் ஒரு கோப்பையில் வடிகட்டவும். இப்போது, இதில் தேனைக் கலந்து குடிக்கவும். இந்த தேநீரை சூடாக குடித்தால் அருமையாக இருக்கும்.இந்த தேநீரை தினசரி அருந்தினால், உணவுக் கட்டுப்பாடு இல்லாமலும் உடல் எடை குறையும் என்பது சிறப்பு. உடல் எடையை குறைக்க உதவும் இந்த வெந்தய டீ குடித்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேறு பல நன்மைகளும் உண்டு.

Oct 02, 2023

முகம் வசீகரமாக இருக்க..

அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளையும் அகற்றும்.முகம் பளபளக்க புதினா சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசிக்கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.தினமும் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் முகத்தில் பருக்கள் வராது.குளிர்ந்த நீர் சிறிதளவு அதனோடு பால் சேர்த்து துணியில் தொட்டு முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும். இதை தொடர்ந்து செய்வதால் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும்.  

Sep 28, 2023

தலை முடி சாப்டாக.....

தலை முடி பளபள என்று இருக்க வெந்தயம் ஊற வைத்து அரைத்துஅரைக்கும் போது செம்பருத்திப் போட்டு அரைத்தால் இன்னும்முடி சாப்டாக இருக்கும்வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி கொட்டுவது நின்று வளரஆரம்பிக்கும். வெந்தயம் உடம்பில் சூட்டை தணிக்கும் முடியில் உள்ள பிளவு இருந்தால்சரியாகி விடும் தலையில் பொடுகு வராமல் தடுக்கும்.

Sep 26, 2023

கண்களில் இருக்கும் சோர்வு நீங்க

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.எனவே தான் இப்போதும். எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும். முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர். எனவே கண் அழகை அதிகரிக்க தினமும் கண்களில் வெள்ளரிக்காயை வைத்து சிறிது நேரம் அப்படியே அமர்த்திருங்கள். பின்பு கண்களை கழுவிவிடுங்கள்.கண்களை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சரியான தூக்கமின்மை. எனவே தினமும் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவது மிக முக்கியம்.கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் கண்களுக்கு நல்லது. பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள், கண்களின் அழகை பராமரிக்கும் முக்கிய பொருட்கள். போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும் இது கண்களுக்கு புத்துணர்வை அளிக்கும்.

Sep 25, 2023

கொத்தாக தலைமுடி கொட்டுவதற்கு என்ன காரணம் ?

தலைமுடி கொட்டுவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் ,முதலில், முடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. முடி கொட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் குறைபாடுகள் முக்கிய காரணமாக திகழ வாய்ப்புள்ளது..அடர்த்தியான முடி: ஹார்மோன்கள் சரியாக இருந்தால், முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.. ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ள வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் காரணமாகவும், முடி கொட்டலாம்.. இதற்கும், சத்தான உணவு சாப்பிடுவது அவசியம்..மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம்.. அதேபோல, இளம்பெண்களுக்கு பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம். இதனால், தலைமுடியின் வேர்க்கால்களும் பலவீனமாகிவிடும். அளவுக்கு அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம். நம்முடைய தலைமுடிக்கும், மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. எனவே, ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. இதில், கீரைகள் முதலிடத்தை பிடிக்கின்றன.. அதிலும் முருங்கைக்கீரையையும், கறிவேப்பிலையையும் எந்த காரணம் கொண்டும் தவிர்க்க கூடாது. எலுமிச்சம் சாறு: முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. அதேபோல, முருங்கையின் ஈர்க்குச்சியில் சூப் செய்து குடிக்கலாம்..கறிவேப்பிலையை  எப்படி சாப்பிட்டாலும் நல்லதுதான். தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தடவி வரலாம்.. செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைத்து, ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதை கொட்டி காய்ச்ச வேண்டும். சிறிது வெந்தயத்தை பொடி செய்து போட்டு, கொள்ளலாம். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து தேய்த்து வந்தால், தலைமுடி கொட்டாது. 

Sep 24, 2023

பற்கள்  வெண்மையாக ஜொலிக்க

 பற்களுக்கு இடையில் சிக்கிய உணவு மற்றும் பிளேக்கிலிருந்து விடுபட ஒரு நாளைக்கு ஒரு முறை பல் ஃப்ளோஸ் மூலம் ஃப்ளோஸ் செய்யுங்கள். பல் துலக்குவதற்கு முன் ஃப்ளோஸ் செய்வது அதிக பிளேக் நீக்குகிறது. மென்மையான முட்கள் கொண்ட பல் துலக்குதல் மற்றும் ஃவுளூரைடு பற்பசை மூலம் பற்களை இரண்டு நிமிடங்கள் துலக்கவும், ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது துலக்குவது நல்லது.சாப்பிட்ட அல்லது குடித்த உடனேயே துலக்க முடியாவிட்டால்,  சர்க்கரை இல்லாத பசையை பயன்படுத்துங்கள். முடிந்தவரை சர்க்கரை மற்றும் மாவுச்சத்துள்ள உணவுகள் மற்றும் பானங்களை கட்டுப்படுத்தவும் அல்லது தவிர்க்கவும். அதற்கு பதிலாக தயிர், பாலாடைக்கட்டி, பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்.ஆயில் புல்லிங் என்பது ஒரு பாரம்பரிய தீர்வாகும். இது வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது.  வாயில் எண்ணெய் வைத்து கொப்பளிப்பது மூலம் பிளேக்காக மாறும் பாக்டீரியாக்களை அகற்றி  பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும்.ஆயில் புல்லிங் செய்ய மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் எண்ணெய் சூரியகாந்தி மற்றும் நல்லெண்ணெய் ஆகியவை.பேக்கிங் சோடா இயற்கையாகவே வெண்மையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் பற்பசையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. இது பற்களில் உள்ள கறைகளை துடைக்க முடியும். இது வாயில் கார சூழலை உருவாக்க உதவுகிறது. இது பாக்டீரியாக்களை வளரவிடாமல் தடுக்கிறது.

Sep 21, 2023

ஆரோக்கியமான முடிக்கு நட்ஸ்

அக்ரூட் பருப்புகள் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி மட்டுமல்ல, அவை முடி ஆரோக்கியத்தை அதிகரிக்க ஒரு இயற்கைதீர்வாகவும் செயல்படுகின்றன.பாதாமில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு மற்றும் முடி சேதத்தைத் தடுக்கவும் உதவும்.தேங்காய் ஒரு இயற்கையான முடி பராமரிப்பு தீர்வாகும், இது உங்கள் தலைமுடியின் தரத்தை மேம்படுத்த உதவும்.பயோட்டின் நிறைந்த பிஸ்தா முடி உதிர்வை எதிர்த்துப் போராடவும், உலர்ந்த கூந்தலுக்கு ஊட்டமளிக்கவும் உதவும்.எள் விதைகளில் இரும்பு மற்றும் கொழுப்பு அமிலங்கள்நிறைந்துள்ளன, இது உங்கள் முடி வேர்களுக்கு ஊட்டமளித்து புதிய முடி வளர்ச்சியைத் தூண்டும்.சியா விதைகள் சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கும்.

Sep 15, 2023

தலையில் முடி  கொட்டினால்....

தலையில் முடி  கொட்டினால்கொஞ்சம் சின்ன வெங்காயம் உரித்து |அதை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடி கட்டி அதில் சாறு பிழிந்து எடுத்துதலையில் தேய்த்து ஒரு1/2 மணி நேரம் கழித்து குளிக்கலாம் இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் கொட்டிய இடத்தில் புது முடி வளர ஆரம்பிக்கும் சின்ன வெங்காயம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சி தரும் இந்த மாதிரி செய்து பாருங்க முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும் முடி கொட்டுவது ஒரு முடி இரண்டாக பிளந்து இருக்கும் தலை சீவினால் குட்டி குட்டி முடி வணங்காமல் நிற்கும் இதற்கு காரணம் முடிக்கு சத்து இல்லை தலையில் பக்கு இருந்தால் முடி கொட்டும் இதற்கு வாரம் ஒருமுறை கொஞ்சம்தயிர் ,ஒரு எலுமிச்சம் பழச்சாறு எடுத்து கலக்கி தலையில் தேய்த்து குளிக்கலாம் .கரப்பான் இலை சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் வாரம் ஒருமுறை நல்ல எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் இப்படி செய்தால் ,முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும்

Sep 13, 2023

சருமத்திற்கு கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்

கற்றாழை சரும நன்மைக்கு மிகவும் நன்மை பயக்கும் தேங்காய் எண்ணெய் (CoconutOil) சரும கறைகளை நீக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.அத்தகைய சூழ்நிலையில், கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயைக்கலந்து சருமத்தில் தடவி வந்தால், அது சருமத்திற்கு ஒரு வரத்திற்குகுறைவில்லாமல் இருக்கும். இதனால் பருக்கள் மறைந்து பொலிவு வரும்.சருமத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும்.சம அளவு கற்றாழை ஜெல்லை இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கலக்கவும். இந்த கலவையை நன்றாக கலந்து, தூங்கும் முன் முகம்மற்றும் கழுத்து முழுவதும் தடவி, இரவு முழுவதும் முகத்தில் விட்டு,காலையில் முகத்தை கழுவவும்.

1 2 ... 19 20 21 22 23 24 25 26 27 28

AD's



More News