25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கொத்தாக தலைமுடி கொட்டுவதற்கு என்ன காரணம் ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொத்தாக தலைமுடி கொட்டுவதற்கு என்ன காரணம் ?

தலைமுடி கொட்டுவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் ,முதலில், முடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. முடி கொட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் குறைபாடுகள் முக்கிய காரணமாக திகழ வாய்ப்புள்ளது..அடர்த்தியான முடி: ஹார்மோன்கள் சரியாக இருந்தால், முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.. ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ள வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் காரணமாகவும், முடி கொட்டலாம்.. இதற்கும், சத்தான உணவு சாப்பிடுவது அவசியம்..

மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம்.. அதேபோல, இளம்பெண்களுக்கு பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம். இதனால், தலைமுடியின் வேர்க்கால்களும் பலவீனமாகிவிடும். அளவுக்கு அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம். நம்முடைய தலைமுடிக்கும், மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. எனவே, ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. இதில், கீரைகள் முதலிடத்தை பிடிக்கின்றன.. அதிலும் முருங்கைக்கீரையையும், கறிவேப்பிலையையும் எந்த காரணம் கொண்டும் தவிர்க்க கூடாது. எலுமிச்சம் சாறு: முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. அதேபோல, முருங்கையின் ஈர்க்குச்சியில் சூப் செய்து குடிக்கலாம்..

கறிவேப்பிலையை  எப்படி சாப்பிட்டாலும் நல்லதுதான். தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தடவி வரலாம்.. செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைத்து, ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதை கொட்டி காய்ச்ச வேண்டும். சிறிது வெந்தயத்தை பொடி செய்து போட்டு, கொள்ளலாம். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து தேய்த்து வந்தால், தலைமுடி கொட்டாது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News