25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அழகுக் குறிப்பு

Aug 24, 2023

நரை முடியை கருப்பாக்க கருவேப்பிலை டை

இன்றைய காலத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை கருப்பாக மாற்றுவதற்காக கெமிக்கல் நிறைந்த எண்ணைகளையும், டையையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் நரை முடி பிரச்சனை ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் நாள் ஆனதும் நரை முடி மீண்டும், வந்து விடும். அதனால் இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். கருவேப்பிலை டை செய்முறை  - முதலில் கருவேப்பிலையை எடுத்து நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்.அதன் பிறகு அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் கழுவி வைத்த கருவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும். எண்ணெய் ஏதும் ஊற்றாமல் வெறுமென வறுக்க வேண்டும்.அதன் பிறகு வறுத்து வைத்த கருவேப்பிலையை பொடியாக அரைத்து ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும். இதனுடன் வைட்டமின் ஈ மாத்திரையின் ஜெல்லை 1 சேர்த்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சிறிதளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். தண்ணீரை அதிகமாக ஊற்ற வேண்டாம். மிக்ஸ் செய்யும் போது டை பதத்திற்கு வர வேண்டும்.அப்ளை செய்யும் முறை  -  செய்து வைத்துள்ள டையை கையில் கிளவுஸ் அணிந்து அதன் மூலம் டையை எடுத்து தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து விட்டு அலசி விட வேண்டும். இது போல் நீங்கள் வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து 1 மாதத்திற்கு அப்ளை செய்து வந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்.கருவேப்பிலையை வைட்டமின் சி, புரத சத்து, கால்சியம், அயன், கெரோட்டின் போன்றசத்துக்கள்நிறைந்துள்ளது,இந்தசத்துக்களானது முடி உதிர்வை தடுத்து முடி வளர உதவி செய்கிறது. மேலும் நரை முடியை கருப்பாக மாற்றவும் உதவி செய்கிறது.

Aug 22, 2023

சருமத்தை பொலிவாக்க பாசிப்பயறு மாவு

பாசிப்பயிரை மாவு போல அரைத்து ,சீயக்காய் தூள் போல தலையில் தேய்த்து குளிப்பது  முடி வளர்ச்சிக்கு இது உதவுகிறது.முகத்திற்கு இந்த பச்சைபயறுமாவைதேய்த்துகுளிப்பது மூலம்சருமத்தையும்,ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும்.முகத்தில் சிதைந்த செல்களைபுதுப்பிப்பதற்கு பாசிப்பருப்பு உதவுகின்றது.பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு  பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். 1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.பாசிப்பயறு மாவை முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். மேலும் பாசிப்பயறு பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள். இதனை முகம், கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது  பாசிப்பயறு மாவு மாஸ்க் தான். அதற்கு பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் போய்விடும்பெண்களுக்கு முகம் மற்றும் வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிப்பயறு மாவில் மஞ்சள் தூளை  சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில் முடி வளரும் இடத்தில் தடவி ஊறவைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடியின்  வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.1 ஸ்பூன் பாசிப்பயறு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து  பயன்படுத்தலாம். 

Aug 21, 2023

முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளீச்சென்று ஜொலிக்க, முருங்கை இலை பொடி

முருங்கை இலையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முருங்கை இலையை அரைத்து பொடியாக்கி, முகத்திற்கு  ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளீச்சென்று ஜொலிக்க, முருங்கை இலை பொடியில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து முகத்தை வாஷ் செய்யவும்.முகத்தை வெள்ளையாக்க பெஸ்ட் வீட்டு வைத்தியம். இதற்கு பச்சை பாலில் முருங்கை இலை பொடி, தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும். பின்பு காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைத்து எடுக்கவும்.முகப்பரு பிரச்சனையை சரிசெய்ய பல வைத்தியங்களை முயற்சித்தவர்கள் இந்த முருங்கை  இலை பொடியை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். தயிரில் பொடியை மிக்ஸ் செய்து பரு மீது தடவினால் போதும், இனி முகப்பரு பிரச்சனையே இருக்காது.முக சுருக்கத்தை தடுக்க முருங்கை இலை பொடியில் தேன் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் மதிய நேரத்தில் தடவவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை வாஷ் செய்யவும்.தழும்புகள்,முகப்பருவால் ஏற்பட்ட கருப்பு நீக்க, முருங்கை இலை பொடியுடன் எலுமிச்சை சாறு, தயிர், ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும்.

Aug 20, 2023

வீட்டில் அழகா ஒரு மினி FACIAL டிப்ஸ்

ஒரு FUNCTION கிளம்ப போகும் முன்  வீட்டில் அழகா ஒரு மினி FACIAL பண்ணி முகத்தை பளபள என செய்யலாம் வாங்க வீட்டில் உள்ள பொருள் போதும் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் உருளை கிழங்கு சாறு கொஞ்சம் கடலை மாவு கொஞ்சம் தேன், கொஞ்சம் ரோஸ் வாட்டர், கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி  காய்ந்தவுடன், கழுவி விட்டு பார்த்தால்  முகம் பளபள என ஜொலிக்கும்.

Aug 16, 2023

வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்

காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதனால்தான் பழங்கள் மற்றும் காய்கறிகள் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது. இதனை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை தரும். கோடை காலத்தில் வெள்ளரிக்காயை உட்கொண்டால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனையே வராது. வெள்ளரிக்காயை முக அழகை கூட்டவும் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் வெள்ளரிக்காயை முகத்தில் தடவி வரவும். வெள்ளரிக்காய் தோல், சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.. வெள்ளரி சாறுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இப்போது அதை உங்கள் முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்க்கவும்.கடைசியாக முகத்தை நீரால் அலசவும்.கற்றாழை பெரும்பாலான சரும வகைகளுடன் பொருந்தக்கூடியது. எனவே முகத்தை சுத்தம் செய்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும் . வெள்ளரிக்காயை வைத்து ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கதேவையான பொருட்கள்- தேயிலை மர எண்ணெய்-2 சொட்டு,வெள்ளரிக்காய் சாறு – 1 கப். வெள்ளரிக்காய் சாறுடன் தேயிலை மர எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இப்போது இந்த கலவையை ஃபேஸ் மாஸ்க் போல் முகத்தில் பூசவும்.முகப்பரு மீதும் இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.இந்த ஃபேஸ் மாஸ்க், சரும வறட்சி மற்றும் வெடிப்புகளை குறைக்கிறது.குறிப்பு: முகத்தை ஈரப்பதமாக்குவதற்கு முன்பு வெறும் சருமத்தில் தேயிலை மர எண்ணெயை தடவ கூடாது. 

Aug 14, 2023

வறண்ட உதடுகளை பளபளப்பாக்க....

கோடை காலத்தில் உதடுகள் வறட்சி, வெடிப்பு ஏற்படுவதை  தவிர்க்க,தினமும் குளித்து முடித்த பின்னர் ஆலிவ் ஆயிலால் உதடுகளை மசாஜ் செய்து வந்தால் உதடு வெடிப்புகள் குறையும்.அவ்வபோது தேங்காய் எண்ணெய்யை உதடுகளில் தடவி, மசாஜ் செய்து வந்தால் UV கதிர்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.கற்றாழை ஜெல்களை உதடுகளில் தடவி வந்தால், உதடு வறட்சி, சுருக்கம் மறையும்.எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரஸ் அமிலம், உதடுகளின் இறந்த செல்களை நீக்கி, உதடுகளை பொலிவுற செய்யும்.அன்னாசி பழச்சாறில் உள்ள ப்ரோமலைன் உதடு சுருக்கங்கள் மறைய உதவுகிறது.திராட்சை பழச்சாறில் உள்ள விட்டமின் இ, உதடு சுருக்கங்கள், வறட்சி சரியாக உதவுகிறது.ஆமணக்கு எண்ணெய்யை உதடுகளில் தடவி வர, உதட்டில் உள்ள சுருகங்கள் மறைந்து மென்மையாகும்.

Aug 13, 2023

முடி கொட்டுவது நின்று வளர.....

முடி கொட்டுவது, ஒரு முடி இரண்டாக பிளந்து இருக்கும் .தலை சீவினால் குட்டி குட்டி முடி வணங்காமல் நிற்கும். இதற்கு காரணம் முடிக்கு சத்து இல்லை. தலையில் பக்கு இருந்தால் முடி கொட்டும். இதற்கு வாரம் ஒருமுறை கொஞ்சம் தயிர் ஒரு எலுமிச்சம் பழச்சாறு எடுத்து கலக்கி தலையில் தேய்த்து குளிக்கலாம். கரப்பான் இலை சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து குளிக்கலாம்.தலையில் வாரம் ஒருமுறை, நல்ல எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் .இப்படி செய்தால் முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும்.

Aug 11, 2023

சார்கோல் மாஸ்க்

சரும பராமரிப்பு விஷயத்தில் ஃபேஸ் மாஸ்க் மிக மிக முக்கியமானது. அதிலும் கரித்தூள் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றன. முகப்பிரச்சனைகளை தொடங்கி பல சரும பாதிப்புகளை இது சரிசெய்கிறது. பற்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கரித்தூள் முகத்திற்கு, சருமத்திற்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.   தேவையான பொருட்கள் : கரித்தூள்- 1 டீஸ்பூன்,புரோபயாடிக் காப்ஸ்யூல் - 1, ஆப்பிள் சைடர் வினிகர்-2 டீஸ்பூன், அத்தியாவசிய எண்ணெய் - 1 சொட்டுபயன்படுத்தும் முறை:ஒரு கிண்ணத்தில் கரித்தூள், புரோபயாடிக் காப்ஸ்யூல், ஆப்பிள் சைடர் வினிகர், அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விடவும். உலர்ந்ததும், அதை குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை மீண்டும் நிரப்ப மாய்ஸ்சரை தடவவும். இப்படி மாதம் 2 முறை செய்தால் போது உங்கள் முகம் பளிச்சிடும். 

1 2 ... 18 19 20 21 22 23 24 25 26 27

AD's



More News