25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


அழகுக் குறிப்பு

Feb 16, 2024

1000 ஆண்டு பழமையான மாய்ஸ்ச்சரைஸர் நெய்( ஷதா தௌத க்ரிதா )

1000 ஆண்டு பழமையான மாய்ஸ்ச்சரைஸர் நெய்( ஷதா தௌத க்ரிதா )naiநெய் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்துக்கும் நல்லது. நாம் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் நெய்யை முகத்திற்கு மாய்ஸ்ச்சரைஸராகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக நெய்யை 100 முறை கழுவி எடுத்து, இறுதியில் கிடைக்கும் க்ரீமை முகத்தில் அப்ளை செய்திருக்கிறார்கள். இதற்கு சதா தௌத க்ரிதா என்று பெயர். இது மார்க்கெட்டுகளில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது....விதவிதமான மாய்ஸ்ச்சரைஸர்கள். நிரந்தரமான பயன்களைத் தருவதில்லை.. அப்ளை செய்யும்போது மட்டும் சருமம் ஹைட்ரேட்டிங்காக இருக்கிறது. சிறிது நேரத்திலேயே வறட்சி அடைந்து விடுகிறது. ஆனால் நெய் அப்படியல்ல. சருமத்தை நாள் முழுமைக்கும் மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.ஷதா தௌத க்ரிதா (Shata Dhauta Ghrita) செய்வது எப்படி?தேவையான பொருள்கள்நெய் - 100 கிராம்,தண்ணீர் - 1 கப்,மஞ்சிஸ்டா பொடி - 1 ஸ்பூன்,அதிமதுரம் - 1 ஸ்பூன்,துளசி பொடி - கால் பூன்,செம்பு தாம்பலம் - 1செம்பு டம்ளர் - 1​செய்முறைசெம்பு தாம்பலத்தைக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சிஸ்டா பொடி, அதிமதுரப் பொடி, துளசி பொடி மூன்றையும் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.செம்பு தாம்பலத்தில் நெய்யை ஊற்றிக் கொண்டு, கலந்து வைத்திருக்கும் நீரில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து நெய்யில் விட்டு, செம்பு டம்ளரைக் கொண்டு வட்ட வடிவில் நன்குதேய்க்க வேண்டும்.ஊற்றிய தண்ணீரை நெய் முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறது அடுத்த ஸ்பூன் தண்ணணீரை ஊற்றித் தேய்க்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 100 முறை நெய்யை அந்த தண்ணீரில் கழுவி எடுக்க வேண்டும். 100 முறை கழுவி எடுத்த பின், ஸ்மூத்தான மாயஸ்சரைஸர் க்ரீம் கிடைக்கும். நெய் முழுசாக க்ரீமாக மாறியிருக்கும்.இதுதான் நெய்யை 100 முறை கழுவினால் கிடைக்கும் Shata Dhauta Ghrita என்னும் ஆயிரங்காலத்து பழமையான மாயஸ்ச்சரைஸர்.​பயன்படுத்தும் முறைமுகத்தை சுத்தம் செய்து விட்டு, நேரடியாக மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவது போல இந்த க்ரீமை பயன்படுத்தலாம்.நாள் முழுக்க சருமத்தை மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.குழந்தைகளுக்குக் கூட இந்த க்ரீமை பயன்படுத்தலாம்.அதிலும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை அப்ளை செய்து மசாஜ் செய்து வர, இந்த எல்லா சருமப் பிரச்சினைகளும் தீரும்.இந்த க்ரீமை சருமத்தில் அப்ளை செய்யும் சருமத்தில் இருக்கிற7 வகை லேயர்களுக்கு உள்ளேயும் ஊடுருவிச் செல்லும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். குறிப்பாக இதிலுள்ள ஒமேகா3, ஒமேகா9 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், நுண்ணிய கோடுகள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தை இளமையாக வைத்திருக்கும். வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.அதிலும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை அப்ளை செய்து மசாஜ் செய்து வர, இந்த எல்லா சருமப் பிரச்சினைகளும் தீரும்.இயற்கையான சன் ஸ்க்ரீன்,கருவளையங்களை போக்கும்.பரு, தழும்புகளை போக்கும்.வயதாவதை தடுக்கும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.

Feb 15, 2024

தேங்காய் பால் ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்தது.

 தேங்காய் எண்ணெய்  ,தேங்காய் பாலும் கூந்தலுக்கு சிறந்தது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.இரண்டிலுமே லாரிக் அமிலம் காணப்படுகிறது. இது முடியின் வேர்க்கால்களுக்குள் ஊடுருவி ஈரப்பதத்தை கொடுக்கிறது. வறட்சியை தடுக்கிறது.தேங்காய் பாலில் கரோட்டீன் புரதம் காணப்படுகிறது. இது முடியிழைகளை வலுவாக்கி முடி உடைவதை தடுக்கவும் உதவுகிறது. தேங்காய் பாலை ஹேர் மாஸ்க், கண்டிஷனராகக் கூட பயன்படுத்தலாம். ஷாம்பு போட்ட பிறகு தேங்காய் பால் கலந்த தண்ணீர் கொண்டு கூந்தலை அலசலாம். பொடுகுத் தொல்லையை போக்குகிறது, பாதிக்கப்பட்ட கூந்தலை ரிப்பேர் செய்யும். அதிக வெப்பத்தால் முடி வறண்ட உடைவதை தடுக்கிறது. தினமும் கூட அப்ளை செய்யலாம் அல்லது தலைக்கு குளிப்பதற்கு முன்பு அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது,. உச்சந்தலை எரிச்சல் மற்றும் அரிப்பை போக்கி கூந்தலை பொலிவாக மாற்றுகிறது. 

Feb 12, 2024

முகம் கருமை,எண்ணெய் பசை நீங்க.....

முகம் கருமையடையாமல் இருக்க வேப்பிலை, புதினாசிறிதளவு மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, அவற்றைதூள் செய்து பாலில் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகம் கருமை குணமாகும்..ஆரஞ்சு பழ தோலை நன்கு காயவைத்து, பொடி செய்து பாலுடன் கலந்து முகத்தில் தடவி வர முகம் கருமை நீங்கும்.எண்ணெய் பசை முகத்திற்கு தக்காளி பழத்தை2 துண்டு எடுத்து முகத்தில் தேய்த்து வர முக எண்ணெய் பசை நீங்கி, முகம்பளிச்சென்று இருக்கும்.ஆப்பிள் பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை நீங்கும்.

Feb 09, 2024

முகத்தை பொலிவாக்கும் வாழைப்பழ தோல்

மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழம்,. வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று.வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். நாம் எல்லோரும் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம்.ஆனால், நாம் தூக்கி எறியும் வாழைப்பழத்தின் தோலின் நன்மைகள் பயன்கள்அதிகமாக காணப்படுகின்றதுஇரவில் உறங்குவதற்கு முன்னர் வாழைப்பழத் தோலை முகத்தில் தடவி வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் மருக்கள் மறைவதுடன் மீண்டும் வராமல் இருக்கும்.வாழைப்பழத்தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கு துணைப்புரிகின்றது.வாழைப்பழத்தோலில் உள்ள பொட்டாசியம் சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் தழும்புகள் மற்றும் கறைகளை போக்குகின்றது.வாழைப்பழத்தோல்களில்பொட்டாசியம்மற்றும்ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவை சருமத்தில் இருக்கும் நுண் துளைகளைத் திறந்து ஆக்ஸிஜனை உள்ளே செல்ல உதவுகின்றது.முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் வாழைப்பழத் தோலை பருக்கள் மீது தடவினால் முகம் உடனடி பொலிவு பெறும். இது முகத்தை சுத்தப்படுத்தவும். அழுக்குகளை குறைக்கவும் துணைப்புரிகின்றது.இரவில் சரியான தூக்கம் இல்லாவிட்டால் கண்களை சுற்றி கருவளையம் காணப்படும். அதனை தவிர்க்க வாழைப்பழ தோலை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தடவி வந்தால் கருவளையம் விரைவில் மறைய ஆரம்பிக்கும்.முகத்தில் அதிக சுருக்கங்கள் இருந்தால், இந்த வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். இது ரத்த ஓட்டத்ததை சீர் செய்வதுடன் சுருக்கங்களை நீக்கும். வாழைப்பழ தோலில் சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பண்புகள் அதிகமாக காணப்படுகின்றது.இது சருமத்தில் கொலாஜனை உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் சருமத்தை இருக்கமாக்க உதவுகின்றது.முகச்சுருக்கங்கள் நீங்கி என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் வாழைப்பழ தோலை வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவந்தால் முகம் என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.

Feb 06, 2024

( DRY SKIN ) வறண்ட சருமத்திற்கு....

சருமம் வறண்டும், சுருக்கமாகவும் இருந்தால் அப்போது முகத்தில் ஆலிவு எண்ணெயை தடவி சிறிது நேரம் கழித்து சோப்பு போட்டு கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.மோரை முகத்தில் தேய்த்து20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் வறண்ட சருமம் பொலிவுடன் காணப்படும் மற்றும் முகம் மென்மையாக இருக்கும். சருமம் மிருதுவாக பழுத்த வாழை பழத்தை நன்கு மசித்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ சருமம் மிருதுவாக காணப்படும். தினமும் முகத்திற்கு தேங்காய் பாலுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி வர முகம் மிகவும் புத்துணர்ச்சி பெரும்.சருமம் அழகுபெற பால், கடலை மாவு, மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும், பளப்பளப்பாகவும் மாறும், குறிப்பாக சருமம் அழகுபெற பெரிதும் உதவும்.

Feb 04, 2024

மேனி மினுமினுப்பாக.....

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள்கலந்து உடம்பில் தேய்த்து,சிறிது நேரம் கழித்துபயத்தமாவை தேய்த்து குளித்துவந்தால் மேனி பளப்பளப்பாகவும், சருமம்மிருதுவாகவும் இருக்கும்.மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுக்கும் 

Feb 02, 2024

இயற்கையான முறையில் மென்மையான சருமத்தை  தரும் சந்தனம்

 நம் முகத்தை இயற்கையான முறையில்  நம் வீட்டில் இருக்கும் சந்தனம் மற்றும் தயிரை கொண்டு எளிதாக அழகு பெறலாம்.சந்தனம்  மருத்துவக் குணம் கொண்டது. மிகவும் வாசனையாகவும் இருக்கும்,இது அதிக குளிர்ச்சி வாய்ந்தது. இதைநாம் முகத்தில் அப்ளை செய்தால் முகம் வறட்சி தன்மையை குணப்படுத்துகிறது. முகத்திற்கு அதிகம் ஈரப்பதத்தை அளிக்கின்றது. சந்தனம்முகத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைக்கும் சிறந்த ஃபேஸ் பேக்காக சந்தனம் விளங்குகிறது.சந்தன பவுடர்- சந்தன பொடியை முகத்தில் அப்ளை செய்வதனால் முகதளர்வுகள், முகத்தின் ஈரப்பதம் மற்றும் நிறம் மேம்படுத்தப்படுகிறது.வறட்சியின் காரணமாக முகத்தில் அரிப்பு மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.சந்தன பொடி சருமத்தின் சுருக்கங்களை இறுக்கமாக்குகிறது.முகத்தில் தோன்றும் தொற்றுகள் மற்றும் அரிப்புகளை சந்தனப் பொடி குணப்படுத்துகிறது.மேலும் புத்துணர்வையும், குழந்தையின் தோல் போன்று மென்மையான சருமத்தையும் தரும் ஆற்றல் சந்தனத்திற்கு உண்டு.சந்தனத்தை பயன்படுத்தினால் சருமத்தை சந்தனம் போன்று பளபளவென்று இருக்கும்..சந்தனம் இறந்த செல்கள் தேங்கியிருக்கும் சருமத்தின் மந்தமான தோற்றத்தை தடுக்க கூடியது. சந்தனத்தை பயன்படுத்தும் போது சில காலம் சருமத்தில் இறந்த செல்கள் இல்லாமல் சருமம் புத்துணர்ச்சியாக , பொலிவுடன் இருக்கும். இதை முகத்தில் மட்டும் அல்லாமல் கண்களுக்கு கீழ், கழுத்திலும் கூட பயன்படுத்தலாம். இது மருக்களை வரவிடாமல் செய்ய தடுக்கிறது. அழகுப் பராமரிப்பில் முகப் பருக்களை தடுக்க உதவுகிறது..சந்தனக்கட்டை வாங்கி கல்லில் இழைத்து பயன்படுத்துவது. இது மிக நல்லது. ஏனெனில் இது செயற்கையாக எதுவும் கலக்காத இழைத்த தூய்மையான சந்தனம். இதை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவினாலே சருமத்தின் உஷ்ணம் தணிக்கும்.எக்காரணம் கொண்டும் பூஜைக்கான சந்தன வில்லை (குறைந்த விலை ) வாங்க கூடாது. இது அசல் சந்தனம் கிடையாது. எம்போரியம் இருக்கும் இடங்களில் அசல் சந்தனம் கிடைக்கும். சந்தனம் எண்ணெய். இது அரோமா எண்ணெய் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும். இதுவும் சிறந்தது.வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் சந்தன எண்ணெயை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சந்தன பவுடர் அல்லது சந்தனத்தை இழைத்து பயன்படுத்தலாம்.

Feb 01, 2024

நகங்களை பராமரிக்க....

நகங்களை வெட்டுவதற்கு முன் நகத்தில் கொஞ்சம் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால், நீங்கள்விரும்பும் வடிவத்திற்கு நகங்களை வெட்டலாம்.தினமும் பாலுடன் கொஞ்சம் பேரிச்சை கலந்து குடித்து வர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, நகம் உடைத்தல் குறையும். மேலும் நகத்திற்கு பாதாம் எண்ணெயை தடவி வர நகம் பளப்பளப்பாக இருக்கும்.

Jan 28, 2024

பொடுகு தொல்லைதீர உப்பு

 பொடுகுதொல்லை வருவதற்கான முக்கிய காரணங்கள் ஒழுங்கற்ற பராமரிப்பு, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதினாலும்,தலைமுடியை எண்ணெயைபசையுடன் அழுக்காக வைத்துக்கொள்வது, சரியாகதலை அலசாமல் இருப்பதினாலும், தினமும்தலைக்கு ஷாம்பு போடுவதினாலும்,தலைகுளித்துவிட்டு தலைமுடியை நன்றாக துவட்டாமல் இருப்பது., பொடுகு உள்ளவரின் சீப்பை பயன்படுத்துவது எனபல காரணங்கள் இருக்கின்றது..இந்தபொடுகு தொல்லை , உப்பு தலைமுடியில் இருக்கும் பொடுகை வெளியேற்ற மிகவும் பயன்படுகிறது. எனவேஉப்பு இரண்டு ஸ்பூன்எடுத்து கொண்டு, சிறிதளவுதண்ணீரில் கலந்து கொள்ளவும்.பின்பு அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் மென்மையாக 10,15 நிமிடம் மசாஜ்செய்ய வேண்டும்.பின்புமைல்டு ஷாம்பு போட்டுதலை அலச வேண்டும்.இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவந்தால் தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை விரைவில்குணமாகும்.

Jan 25, 2024

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க தினமும் எலுமிச்சை சாறை தேய்த்து வர முடி வளரும் தன்மையை இழந்து முகம் அழகு பெரும்.முகத்தில் உள்ள முடி நீங்க முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அவற்றில் சோளமாவு, சர்க்கரைஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்டு போல் கலந்து முகத்தில் தடவி, பின்புகாய்ந்தவுடன் அவற்றை கைகளால் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதாக வந்துவிடும்.கை, கால்களில் கருப்பு நிறம் முடிகள் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை சாறை தடவி சோப்பு போட்டு குளித்து வர கை, கால்களில் இருக்கும் கருப்பு நிறம் முடிகள் போய் விடும்.

1 2 ... 18 19 20 21 22 23 24 ... 27 28

AD's



More News