இயற்கையான முறையில் மென்மையான சருமத்தை தரும் சந்தனம்
நம் முகத்தை இயற்கையான முறையில் நம் வீட்டில் இருக்கும் சந்தனம் மற்றும் தயிரை கொண்டு எளிதாக அழகு பெறலாம்.சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது. மிகவும் வாசனையாகவும் இருக்கும்,இது அதிக குளிர்ச்சி வாய்ந்தது. இதைநாம் முகத்தில் அப்ளை செய்தால் முகம் வறட்சி தன்மையை குணப்படுத்துகிறது. முகத்திற்கு அதிகம் ஈரப்பதத்தை அளிக்கின்றது. சந்தனம்முகத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைக்கும் சிறந்த ஃபேஸ் பேக்காக சந்தனம் விளங்குகிறது.
சந்தன பவுடர்- சந்தன பொடியை முகத்தில் அப்ளை செய்வதனால் முகதளர்வுகள், முகத்தின் ஈரப்பதம் மற்றும் நிறம் மேம்படுத்தப்படுகிறது.வறட்சியின் காரணமாக முகத்தில் அரிப்பு மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.சந்தன பொடி சருமத்தின் சுருக்கங்களை இறுக்கமாக்குகிறது.முகத்தில் தோன்றும் தொற்றுகள் மற்றும் அரிப்புகளை சந்தனப் பொடி குணப்படுத்துகிறது.மேலும் புத்துணர்வையும், குழந்தையின் தோல் போன்று மென்மையான சருமத்தையும் தரும் ஆற்றல் சந்தனத்திற்கு உண்டு.சந்தனத்தை பயன்படுத்தினால் சருமத்தை சந்தனம் போன்று பளபளவென்று இருக்கும்..சந்தனம் இறந்த செல்கள் தேங்கியிருக்கும் சருமத்தின் மந்தமான தோற்றத்தை தடுக்க கூடியது
. சந்தனத்தை பயன்படுத்தும் போது சில காலம் சருமத்தில் இறந்த செல்கள் இல்லாமல் சருமம் புத்துணர்ச்சியாக , பொலிவுடன் இருக்கும். இதை முகத்தில் மட்டும் அல்லாமல் கண்களுக்கு கீழ், கழுத்திலும் கூட பயன்படுத்தலாம். இது மருக்களை வரவிடாமல் செய்ய தடுக்கிறது. அழகுப் பராமரிப்பில் முகப் பருக்களை தடுக்க உதவுகிறது..சந்தனக்கட்டை வாங்கி கல்லில் இழைத்து பயன்படுத்துவது. இது மிக நல்லது. ஏனெனில் இது செயற்கையாக எதுவும் கலக்காத இழைத்த தூய்மையான சந்தனம். இதை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவினாலே சருமத்தின் உஷ்ணம் தணிக்கும்.எக்காரணம் கொண்டும் பூஜைக்கான சந்தன வில்லை (குறைந்த விலை ) வாங்க கூடாது. இது அசல் சந்தனம் கிடையாது. எம்போரியம் இருக்கும் இடங்களில் அசல் சந்தனம் கிடைக்கும்.
சந்தனம் எண்ணெய். இது அரோமா எண்ணெய் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும். இதுவும் சிறந்தது.வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் சந்தன எண்ணெயை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சந்தன பவுடர் அல்லது சந்தனத்தை இழைத்து பயன்படுத்தலாம்.
0
Leave a Reply