பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் 19.12.2025 அன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்ட முகாம்.
வேளாண்மை உழவர் நலத் துறையால் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கும், விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெறுவதற்கும் நில உடைமை பதிவு எண் கட்டாயமானதாகும்.தற்பொழுது, விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை (PMKISAN) பெறும் விவசாயிகள், தங்கள் நில உடைமை விபரங்களை உடனடியாக பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை கிடைக்கப்பெறாது.எனவே, விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை (PMKISAN) பெறுவதற்கு, நில உடைமைகளை பதிவு செய்யாத 10115 விவசாயிகள், உடனடியாக அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் 10115 விவசாயிகள் நில உடைமைகளை பதிவுகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெறுவதற்கு இதுவரை நில உடைமைகளை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களான பட்டா, ஆதார் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு நில உடைமைகளை விடுதலின்றி 19.12.2025 அன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்றால் மட்டுமே மத்திய,மாநில அரசு திட்டங்களில் பயன்பெற இயலும்.விவசாயிகள் 19.12.2025 அன்று நடைபெறும் நில உடைமை பதிவுக்கான சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என். ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
0
Leave a Reply