25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


அழகுக் குறிப்பு

May 22, 2024

நரைமுடிக்கு  இயற்கை ஹேர் பேக்

இயற்கை ஹேர் பேக் மூலம் நரைமுடியை எளிதாக கருப்பாக மாற்றலாம். ஒரு கப் நீரில்2 ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி கொள்ளவும். ஒரு கைப்பிடி மருதாணி இலை, மிளகு15, கிராம்பு5, காபி தூள் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு2 ஸ்பூன் மற்றும் டீ தூள் நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதை தலைக்கு தடவி 30 நிமிடங்கள் கழித்து முடியை அலசலாம். இதை வாரத்திற்கு 2 முறை செய்தால் பலன் கிடைக்கும் .

May 21, 2024

தேங்காய் பால் - பாதாம் பேஸ் பேக்!

முகத்தில் உள்ள சுருக்கங்களை விரட்டி, இளைமை தோற்றத்தை மீட்டு தரும்,தேங்காய்பால், பாதாம், எலுமிச்சை சாறு பயன்படுத்தி ஒரு பேஸ் பேக்,செய்முறை –  ஒரு  கோப்பையில் போதுமான அளவு தண்ணீருடன் பாதாம் சேர்த்து 8 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.பின் இந்த பாதாமை மட்டும் ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து பால் பவுடரையும் சேர்த்து அரைத்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும்.பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள இளமையை மீட்டு தரும் பேஸ்பேக் தயார்.முறையாக தயார் செய்த இந்த பேக்கினை முகம் ,கழுத்து பகுதிக்கு தடவி 25 - 30 நிமிடங்களுக்கு உலர வைக்கவும். பின் குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்துவிடவும்.பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தேங்காய் பால், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.  இந்த பேக் சரும வறட்சிபிரச்சனையை போக்குகிறது.பாதாம்பயன்படுத்திதயார்செய்யப்படும்இந்தபேக்ஆனது, சருமம்தளர்வடைவதைதடுக்கிறது.சருமத்தில்காணப்படும்சுருக்கங்கள், மென் கோடுகளை மறைக்கிறது.பால்பவுடர், தேங்காய்பால்உள்ளிட்டபொருட்கள்கொண்டுதயார்செய்யப்படும்இந்தபேக்கொலாஜென்தட்டுப்பாட்டைதடுத்து, பொலிவான , மிருதுவான சருமம் பெற உதவுகிறது.

May 20, 2024

 சருமத்துக்கு நன்மைகளை தரும் ஐஸ்கட்டி 

  சருமத்திற்கு ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்து வர, சருமத்தில் காணப்படும் இறந்த செல்கள் நீங்கும் அதேநேரம் புதிய திசுக்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, சருமம் பொலிவாக மாறும்.ஐஸ் கட்டியின் அழற்சி எதிர்ப்பு பண்பு, சரும தடிப்புகள் மற்றும் சரும கொப்புளங்களை குறைக்கிறது. அந்த வகையில் பருக்கள் மற்றும் பருக்களின் தழும்புகளை மறைக்கிறது.தூக்கமின்மை காரணமாக வீக்கமடையும் கண்கள் மற்றும் கண்விழி (உஷ்ண) கட்டிகளை கரைக்க இந்த ஐஸ் கட்டிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.சருமத்தின் இறந்த செல்களைவெளியேற்றும் ஐஸ் கட்டியினை வெள்ளரிக்காயுடன் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி பயன்படுத்த கருவளையங்கள் மறையும்.ஐஸ் கட்டிகள் கொண்டு உங்கள் சருமத்திற்கு தவறாது மசாஜ் செய்து வர, சருமம் தளர்வடைவது தடுக்கப்படுவதோடு சருமத்தில் காணப்படும் மென் கோடுகளும் மறையும்.சருமத்தின் pH அளவை மேலாண்மை செய்யும் ஜஸ் கட்டிகளை சருமத்திற்கு தவறாது பயன்படுத்தி வர, சருத்தின் அதிப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சரும வறட்சி பிரச்சனையும் நீங்குகிறது.பாலில் முக்கி எடுத்த ஐஸ் கட்டிகள் கொண்டு உங்கள் சருமத்திற்கு மசாஜ் செய்து வர, சருமத்தின் இறந்த செல்களை நீங்குவதோடு, சருமத்தில் காணப்படும் கருந்திட்டுக்களும் மறையும்சிறிதளவு கிரீம் டீ தூளுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து உங்கள் சருமத்திற்கு தவறாது மசாஜ் செய்து வர, சருமத்தில் காணப்படும் தழும்புகள் மறையும்.

May 19, 2024

வெயிலினால் ஏற்படும் முகம் எரிச்சலை சரி செய்ய தர்ப்பூசணி

தர்ப்பூசணி சாற்றை ஒரு பவுலில் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் வெள்ளரிக்காய் எடுத்து அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இதனை வடிக்கட்டி வெறும் சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.  இதனை ஒரு காட்டன் துணியால் நனைத்து கொண்டு முகத்தில் அப்பளை செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி விடும்.தர்பூசணியை எடுத்து மிக்சி ஜாரில் எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். நீங்கள் வெயிலில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு பிறகு இந்த தர்பூசணி பேஸ்ட்டை முகத்தில் அப்பளை செய்ய வேண்டும். இதனை முகத்தில் ஒரு 15 நிமிடத்திற்கு வைத்து விட்டு அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வெயிலினால் ஏற்படும் முகம் எரிச்சலை சரி செய்ய  முடியும்.

May 16, 2024

சரும நிறம் மாற்றும் ஆவாரம் பூ

பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும்கஸ்தூரிமஞ்சளுடன்ஆவாரம்பூவைசமஅளவுசேர்த்துசிறிதளவுவசம்பும்சேர்த்துஅரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த மூலிகைக் கலவையை தேய்த்துக்குளிப்பதன் மூலம் சருமம் நிறமாக மாறும். அத்துடன் சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளிகள் மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் குறையும். ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்துபயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் ரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும். ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும். ஆவாரம் பூவுடன் சிறுவெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் அழகுபெறும். இதனால் உடல் நிறமும் கூடுவதுடன் புத்துணர்வாகவும் இருக்கும். ஆவாரம்பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவு பெறும். ஆவாரம்பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின்கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் உள்ள வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை அரைத்து சாறெடுத்து, சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளரத் தொடங்கும். முடி கொட்டுவதும் நிற்கும்..

May 15, 2024

அலோ வேரா ஜெல் , தயிர் ஹேர் மாஸ்க்

அலோ வேரா ஜெல் முடிக்கு மிகவும் நல்லது. ஏனெனில், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை முடிக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைக்கும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை நீக்கவும் உதவுகிறது. இதற்கு முதலில் கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் வைக்கவும். பிறகு அதனுடன் தயிர் சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கலந்து, தலைமுடியில் தடவவும்.இப்போது அதை 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.பின்னர், ஷாம்பு கொண்டு முடியை சுத்தம் செய்யவும்.

May 08, 2024

முடி வளர்ச்சிக்கு உதவும் சின்ன வெங்காயச்சாறு

எவராக இருந்தாலும்பெண்ணோ., ஆணோ அழகான தலைமுடிக்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பார்கள். கருகரு முடிதான் ஒருவருக்கு அழகைத் தருகிறது. அந்த முடியை பராமரிக்க உதவுவதில் சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயமும் ஒன்று .நம் பாட்டிமார்கள்காலத்தில் தலையில் பூஞ்சைத் தொற்றினால் அரிப்பு என்றால் உடனே இரண்டு சின்ன வெங்காயத்தை உழித்து அதன் சாற்றை தலையில் வைத்து அழுத்தி தேய்ப்பதை பார்த்திருக்கிறோம். அன்று பாட்டிமார்கள் செய்த விஷயம் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து ,சந்தைகளில் கிடைக்கும் வெங்காயச்சாறு கலந்த ஷாம்பூக்கள்.உதிர்வைத் தடுப்பதுடன், முடியின் வேரை வலுப்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள கந்தகம்(சல்பர்) என்னும் வேதிப்பொருள் இருப்பதே. இது முடி வளர்ச்சிக்கு உதவும் அவசியமான புரதம் ஆன கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் சின்ன வெங்காய சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், தலைமுடி உதிர்வைத் தடுப்பதுடன், முடியின் வேரை வலுப்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.  பொடுகு போன்ற தொற்றுக்களை நீக்கவும் உதவுகிறது..இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து முடியை பாதுகாக்க உதவுகிறது. மேலும் சிலருக்கு வயது ஆவதற்கு முன்பே முடி நரைக்கும் பிரச்சனை உண்டு இதை தடுக்கவும் சின்ன வெங்காயச்சாறு உதவுகிறது. நம் உச்சம் தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் கலவைகள் வெங்காயச் சாற்றில் உள்ளன மேலும் முடி வளர்ச்சிக்கு உதவும் மயிர் கால்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகிறது.ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதை தோல் உரித்து மண் போக நன்கு கழுவிக்கொண்டு மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாறை எடுத்து நேரடியாகவும் தலையில் தடவி 30 நிமிடம் கழித்து அலசலாம். தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வேசாக சூடுபடுத்தியும் முடியில் வேர்க்கால்களில் படுமாறு தடவி மசாஜ் செய்யலாம். இந்த சின்ன வெங்காய சாற்றுடன் தேன் அல்லது கற்றாழை ஜெல் போன்றவற்றைக் கலந்து ஹேர் பேக் போல்  முடிக்கு போட்டு பின் குளிக்கலாம்.முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர இதை டிரை செய்யுங்கள்.ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெங்காயச் சாற்றுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்துக் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர்.வெங்காயச்சாறு தயாரிக்கும் போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வெங்காயம் நன்கு வெந்து அதில் உள்ள சாறு வெளியேறி நீர் குறைந்ததும் அந்த நீரை வடிகட்டியும் முடிக்கு அப்ளை செய்வது இன்னொரு முறை. வெங்காயத்தை மைய அரைத்து அப்படியே பேக் போட்டுக் குளித்தாலும் முடிக்கு ஊட்டச்சத்து தரும்.  இப்படி பல முறைகள் உள்ளன.  கூடுமானவரை இந்தச் சாறைத் தடவி தனியே இருந்து தலைக்கு குளிப்பது நல்லது.அலர்ஜி அல்லது தொற்று பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணர் ஆலோசனைப்படி பயன் படுத்துவதே சிறந்தது.

May 03, 2024

அரிசி சாப்பிடுவதால் உடல் எடை கூடாது

நம்மில் பலருக்கு என்னதான் உணவு கட்டுப்பாடுடன் இருந்தாலும், ஒரு நேரமாவது சாதம் சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும். கொஞ்சம் சாப்பிட்டால் போதும், நமது வயிற்றை நிறைவாக வைக்கும். அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என பலர் கூறி கேட்டிருப்போம்.சாதம் சாப்பிட்டால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறு என நிபுணர்கள் கூறுகிறார்கள். அரிசி சாப்பிடுவதால் உடல் எடை கூடாது.அரிசியில் உள்ள மாவுச்சத்து உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில், உள்ள வைட்டமின்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை பல வழிகளில் சாப்பிடலாம்.நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அரிசியை அவித்தோ அல்லது வேகவைத்தோ சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால் உடல் எடை அதிகரிக்காது. இது மிகவும் நல்லது.சரியான நேரத்தில் அரிசி சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு மதிய உணவு அல்லது இரவு உணவுடன் சாதம் சாப்பிடலாம். கிச்சடி வடிவிலும் அரிசி உங்கள் உணவில் சேர்க்கலாம். ஏனெனில், இதில் பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் உள்ளன. இவை புரதத்தின் நல்ல மூலமாகும். வறுத்த அரிசி சாப்பிடலாம்.அரிசியை எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்த பின் சாப்பிடக்கூடாது. இந்த வகை உணவு தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது உடல் எடையை வேகமாக அதிகரிக்க கூடியது.நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், குறைந்த அளவு மட்டுமே அரிசி சாப்பிடுங்கள். காய்கறிகளுடன் வேகவைத்து சாப்பிடுவது மிகவும்ஆரோக்கியமானது..

May 03, 2024

கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.

உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் கற்றாழை முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்றாழையில் உடலுக்குத் தேவையான முக்கியமான எட்டு அமினோ அமிலங்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன.வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும்.கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி,15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப் பருவினால் ஏற்படும் ஒவ்வாமை நீங்கும். கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.சதைப் பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.கண்களில் அடிபட்டாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

May 02, 2024

பற்களை கறைபடுத்தும் துளசி இலை

துளசி இலைகளை எடுத்துக் கொண்டால், வெறுமனே மென்று சாப்பிட்டால், சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமாம்.. காரணம், துளசி இலைகளில் அதிக அளவு பாதரசம், இரும்புச்சத்து இருப்பதால், நாம் துளசியை மெல்லும்போது அவை வெளிப்படும்.. மென்று சாப்பிடுவது நம் பற்களை கறைபடுத்தும்.. நிறமாற்றத்தை பற்களுக்கு தந்துவிடும். எனாமலில் தேய்மானத்தையும் ஏற்படுத்தும்.. அதனால், லேசாக மெல்ல வேண்டும்.. அல்லது முழுவதுமாக துளசியை விழுங்க வேண்டும் என்கிறார்கள்.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 22 23

AD's



More News