25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


அழகுக் குறிப்பு

Apr 09, 2024

கிருமி நாசினி மஞ்சள் தூள்

மஞ்சளில் ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் மிகுதியாக உள்ளது.  குர்குமினில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும்  ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது. இவை உடலில் கிருமி நாசினியாக செயல்படுகிறதுஸ்டிரெச் மார்க்குகள் இருப்பவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்த பகுதியில் பூச வேண்டும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் நாளடைவில் ஸ்டிரெச் மார்க்குகள் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும்.சிறிதளவு மஞ்சள்தூளுடன் அரிசிமாவு. தக்காளிச்சாறு,காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூச வேண்டும். இது நன்றாக உலர்ந்தவுடன் முகத்தை சுத்தப் படுத்த வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் ,சிறிதளவு மஞ்சள் தூளுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பாதங்களில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் பாதங்களைக் கழுவ வேண்டும். உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் ,வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால்  குணமாகி விடும்.  மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.

Apr 08, 2024

என்றும் இளமையாக இருக்க …

. சில பெண்களின் முகத்தில் வயதுக்கு முன்னரே முதுமை தோன்றத்தை அடைகிறார்கள். அதே நேரத்தில் சில பெண்கள் தங்கள் வயதை விட10 வயது இளமையாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் சரியான சரும பராமரிப்பு, ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம் மற்றும் சுகாதார நிலைமைகள் ஆகியவையும் இதில் அடங்கும். சில ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடித்தால் வயதை விட இளமையாக தோற்றமளிக்கலாம்ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க நம் உடலை உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்வது அவசியம். பல வகையான நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்கள் நம் நாக்கில் குவிந்து கிடக்கின்றன. தினமும் காலையில் செப்பு ஸ்கிராப்பரால் நாக்கை சுத்தம் செய்து வந்தால் நச்சுகள், பாக்டீரியா மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்கும்.காலையில் எழுந்தவுடன் சூரிய ஒளியை சில நிமிடங்கள் எடுக்க வேண்டும். சூரிய ஒளியில் சிறிது நேரம் நடக்கலாம் அல்லது உட்காரலாம். இது கார்டிசோல் ஹார்மோனின் அளவை சமப்படுத்துகிறது, உடலுக்கு வைட்டமின்D வழங்குகிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கும் முக்கியமானது.வயதை விட இளமையாக தோற்றமளிக்க ஆரோக்கியமான. புரதம் நிறைந்த காலை உணவுகாலையில் உணவில் சில ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நட்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உடலுக்கு புரதத்தை வழங்குகிறது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது.ஆரோக்கியமாக இருக்க யோகா மற்றும் உடற்பயிற்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உண்மையான வயதை விட இளமையாக இருக்க விரும்பினால், அனுலோம்-விலோம் தினமும் செய்யுங்கள். இது மன அழுத்தத்தைக் குறைத்து உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கிறது.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நற்பண்புகளின் பொக்கிஷம். நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இதில் காணப்படுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு செப்பு பாத்திரத்தில் சுமார் 300 மில்லி தண்ணீரை எடுத்துக் கொள்வதால் இளமையை தக்க வைத்துக்கொள்ளலாம்

Mar 11, 2024

வயோதிக தோற்றத்திலிருந்து தப்பிக்க!....

பெண்கள் தினமும் கிழங்கு மஞ்சளை தேய்த்து குளித்தால் தோல் சுருக்கத்திலிருந்தும் முக அலர்ஜியில் இருந்தும் அவர்கள் எளிதில் தப்பிக்கலாம்.கஸ்தூரி மஞ்சள் மற்றும் பூலாங்கிழங்கு பெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும். இவற்றை பொடியாக தயாரித்து முகம் மற்றும் கை கால்களில் தடவி குளிர்த்து வர வேண்டும்.தினமும் ஒரு ஜூஸ் என்ற அடிப்படையில் நெல்லி எலுமிச்சை மாதுளை போன்ற பழச்சாறுகளை அருந்தி வர வயோதிக தோற்றத்திலிருந்து தப்பிக்கலாம்.

Mar 08, 2024

பற்சொத்தையை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் 

வாயில் உள்ள சில பாக்டீரியாக்கள் மாவுச்சத்து மற்றும் சர்க்கரையிலிருந்து அமிலத்தை உருவாக்குகிறது. இவை பற்களின் மேல் அடுக்கை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. இதனால் பற்களில் துளைகள் உருவாகும். இது குழி அல்லது புழு தொற்று எனப்படுகிறது.இனிப்பு பொருள்கள் அதிக இனிப்புகள், இனிப்பு குளிர்பானங்கள் மற்றும் ஒட்டும் உணவுகள் போன்றவை பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது. இவை துவாரங்களை வேகமாக வளரச் செய்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஃப்ளூரைடு பற்பசையை ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இரு முறையும் குறைந்தது 2நிமிடங்களுக்கு துலக்க வேண்டும்பற்களுக்கு இடையில் மறைந்துள்ள உணவுத்துகள்கள் அல்லது பாக்டீரியாக்களை அகற்ற  (FLOSS ) ஃப்ளோசிங் செய்யலாம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் வாயை சுத்தம் செய்யலாம். இதனுடன், இனிப்பு உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லதுபச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலம் பற்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்களைப் பெறலாம் ஒவ்வொரு6 மாதங்களுக்கும் பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்யவும். இதன் மூலம் துளைகளின் ஆரம்ப நிலையிலையை அடையாளம் கண்டு நிரப்பி, பெரிய சேதத்தைத் தடுக்கலாம் 

Mar 05, 2024

மூக்கில் உள்ள வெண்புள்ளி, கரும்புள்ளிகள் மறைய..

ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து20 நிமிடங்கள் கழித்து துடைத்தெடுக்கவும்.எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து10 நிமிடங்கள்கழித்து துடைக்கவும்.டீ ட்ரீ ஆயிலை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து துடைத்து எடுக்கவும்.பருக்கள் வந்துவிட்டால் க்ரீம், ஜெல் என எதுவும் தேடத் தேவையில்லை. ஐஸ் கட்டிகளை எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் வைத்து நன்கு மென்மையாக மசாஜ் செய்து வந்தாலே போதும் பருக்கள் வேகமாக மறைய ஆரம்பிக்கும்.முகப் பருக்களால் ஏற்படுகின்ற வீக்கம், சிவந்து போதல், கட்டிகள் உண்டாதல் போன்றவற்றையும் சரிசெய்வதில் ஐஸ் கட்டிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.

Mar 04, 2024

கண்களில்கருவளையம் வராமல் தடுக்க…

கண் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே .கண்களை சுற்றிகருவளையம்  இருக்காதுகருவளையம் ஆனது மனக்கவலை, தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இதுபோன்ற காரணங்களினால் தான் வருகிறது. இத்தகைய காரணங்கள் அனைத்தும் ஒவ்வொருவரின் உடல்நிலையினை பொறுத்ததுகண்களில் நீர்சத்து அதிகம் இல்லை என்றால் கருவளையம் வரும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு நிகழாமல் கருவளையம் வருவதை தடுக்க ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, பப்பாளி முட்டைகோஸ் மற்றும் ஆரஞ்சு இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டாலே போதும் கருவளையம் என்பதே எட்டி பார்க்காது.ஒருநாளைக்கு நாம் அனைவரும் தூங்க வேண்டிய சராசரியான தூக்கத்தினை தூங்கவில்லை என்றால் கண்களில் கருவளையம் வரும். ஆகையால் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணிநேரம் தூங்க வேண்டும்நீங்கள் கண்களுக்கு கிரீம் பயன்படுத்தும் போதும் அல்லது கண்களில் இருக்கும் கிரீமினை அகற்றும் போதும் கண்களுக்கு கீழே இருக்கும் பகுதியினை பொறுமையாக கையாள வேண்டும் கண்களுக்கும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மசாஜ் செய்வது என்பது நாம் செய்யும் வழக்கமான ஒன்று. கண்களுக்கு கீழே மசாஜ் செய்வது என்பது நம்முடைய கண்களில் கருவளையம் வருவதை தடுக்க செய்கிறது. எப்படி என்றால் கண்களில் நீர்சத்து அதிகமாக ஆகிவிட்டது என்றால் கண்களில் வீக்கம் மற்றும் கருவளையம் போன்றவை ஏற்படும். ஆனால் நாம் மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படியான நீர்சத்து ஏற்படுவதை தடுக்கலாம்.முகத்தில் இருக்கும் கண்களுக்கு கீழே வறட்சி ஏற்பட்டால் அதனை சரிசெய்ய Moisturizer பயன்படுத்துவோம். ஆனால் இதற்கு பதிலாக,அவர் அவருடைய கண்களுக்கு கீழே உள்ள தோலிற்கு ஏற்றவாறு, கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் கண்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, கருவளையம் வருவதையும் தடுக்கிறது

Mar 03, 2024

கைகள் பளிச்சென்று இருக்க....

வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்களுக்கு முகத்தை விட கைகள் கருமையாக இருக்கும். இந்த கருமையை போக்க1 கிண்ணத்தில்2 தேக்கரண்டி காபித்தூள்,2 தேக்கரண்டி சர்க்கரை,3 தேக்கரண்டி தயிர் எடுத்து நன்றாக கலந்து, கைகளில் தடவி15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் கைகளை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வர கைகளில் உள்ள கருமை நீங்கி, கைகள் பளிச்சென்று இருக்கும்.

Feb 29, 2024

அடர்த்தியாக  தலைமுடி வளர அழுகிய தேங்காய்

அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான். இருந்தாலும் தலைமுடி வளர வேண்டும் என்றால், முடியை நன்றாக பராமரிக்க வேண்டும்.ஷாம்பை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. ஏன் என்றால் அவற்றில் இருக்கும் ரசாயனப்பொருட்கள் உங்களுக்கு இருக்கும் முடியையும் அதிகமாக உதிர வழிவகுக்கும்.இயற்கை முறையை தினமும் பயன்படுத்தினால் தலைமுடிக்கு மட்டுமின்றி உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது.இயற்கை முறையில் தலைமுடியை அடர்த்தியாகவும், மிகவும் கருமையாகவும் தலைமுடி வளர, அழுகிய தேங்காயில் கொஞ்சம் சுடு தண்ணீர் ஊற்றி அரைத்து அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் வரை காத்திருந்து பின்பு தலை தேய்த்து குளிக்கவும்.இந்த முறையை வாரத்தில் இரு முறை செய்து வர தலைமுடி வேர்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும்.

Feb 28, 2024

முகப்பருவை தடுக்கும் பேஸ்ட்கள்

புதினா பேஸ்ட் பயன்படுத்தினால் முகப்பரு மாயமாகி விடும். பாக்டீரியாவை அழித்திடும்.வேப்பிலை மஞ்சள் பேஸ்ட் போட்டால் வீக்கம் குறைந்துவிடும்ஆரஞ்சு தோலை அரைத்து பருவில் போட்டால் பரு வேகமாக ஆறிவிடும்மஞ்சள், தேன் பேஸ்ட் விளக்கெண்ணெய் மஞ்சள் பேஸ்ட்இதை பயன்படுத்தினால் முகப்பருவை குணப்படுத்துவதுடன், தோலை பாதுகாக்கவும்' செய்யும்.

Feb 25, 2024

அடர்த்தியாக புருவம் வளர

1. விளக்கெண்ணெய், 2. தேங்காய் எண்ணெய், 3. ஆலிவ் எண்ணெய் 4. சின்ன வெங்காய சாறு 5. கற்றாழை சாறுஇந்த5 பொருட்களையும் கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து ஒன்றாக கலந்து இரவில் பருவங்களில் தடவி மறுநாள் கழுவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.'

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 22 23

AD's



More News