25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அழகுக் குறிப்பு

Apr 21, 2026

மங்கு மறைய …

சோற்றுக் கற்றாழைச் சாற்றை இரவு நேரத்தில் தேய்த்து பூசி ,காலையில் வெந்நீரில் கழுவ முகத்தில் உள்ள மங்கு மறைந்து, முகம் பொலிவு பெரும்.நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் எண்ணெயுடன் பிசைந்து, முகத்தில் பூசவும். ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவ, மங்கு மறைந்து முகம் பொலிவு பெறும்.

Apr 14, 2026

15 நாட்களில் உடல் எடை குறைக்க எளிய மாற்றங்கள்.

சர்க்கரை 15 நாட்கள் முழுமையாக தவிர்க்கவும். காலை வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். உணவை சற்றுக் குறைத்து எடுத்துக்கொள்ளவும். தினமும் 20-30 நிமிடம் வேகமாக நடக்கவும். அதிக புரதம் உள்ள காலை உணவு தேர்வு செய்யவும். ஒரு நாளில் 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். வறுத்த உணவுகளை முழுமையாக தவிர்க்கவும். 7-8 மணி நேரம் உறங்கவும். இரவு 8 மணிக்குள் உணவு முடிக்கவும்.

Apr 14, 2026

முகத்தில் முடி வளர்வதைத் தடுக்க…

 குப்பைமேனிச் சாற்றுடன் மஞ்சள் பொடியை கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் முடி வளர்வது குறையும்.

Apr 07, 2026

கறிவேப்பலை இலை சிறந்த முடி டானிக்.

கறிவேப்பிலை இலைகளை சிறந்த முடி டானிக்காக பயன்படுத்தலாம்.கறிவேப்பிலை இலைகளை கொதிக்கவைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, உச்சந்தலையில் தடவவும்.குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். முடி நன்றாக வளர்வதற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை கடைபிடிக்கவும்.

Apr 04, 2026

முகத்தில் அம்மை வடு தழும்பு நீங்க, 

கருவேப்பிலை ஒரு கப்பிடி, கசகசா ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு வற்றைத் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் பூசவும். 30 நிமிடங்கள் இத்து முகம் கழுவ, தழும்பு குறையும். வடு மறையும் வரை தொடரவும்.

Mar 31, 2026

ஆரோக்கியமான முடிக்கான சிறந்த உணவுகள்!

அடர்த்தியான முடி - Pumpkin seedsமுடி வளர்ச்சி முட்டை.வலுவான முடி வால்நட்.வெண்ணெய் பளபளப்பான முடி.முடி உதிர்வு குறைக்க - பசலைக்கீரை,பொடுகு குறைக்க - தயிர்.Scalp ஈரப்பதம் - தேங்காய் எண்ணெய்.வேகமான வளர்ச்சி சால்மன்.முடி உதிர்வு குறைக்க - சக்கரைவள்ளிக்கிழங்கு.Scalp ஆரோக்கியம் -  Green tea.Damage repair - பாதாம்.Hair follider வலுப்படுத்த Flax seeds.மொந்த முடி ஆரோக்கியம் பருப்பு வகைகள்.உணவு சரியா இருந்தா,இயற்கையாக வலிமையானது.

Mar 28, 2026

நரை முடி மாற ஹேர் டை…

 பீட்ரூட், சிவப்பு செம்பருத்தி 10, கறிவேப்பிலை கப், இவற்றை கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.ஒரு இரும்பு கடாயில் 200மிலி 'தண்ணீர் விட்டு அதனுடன் 3 ஸ்பூன் காபி தூளை போட்டு மிதமாக சூடேற்றி, அதில் முன்பே அரைத்து வைத்த விழுதினை சேர்த்து, 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். பின் 12 மணி நேரத்திற்கு ஆறவிடவும்மறுநாள் காலை ஆறவைத்த ஹேர் டையுடன் 1ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்துங்கள்.வாரத்தில் ஒருநாள்  இந்த ஹேர் டை பயன்படுத்தினால் நரை முடி மாறும். இந்த ஹேர் டை 12 மணி நேரம் ஆறவைக்க வேண்டுமென்பதால் இரவில் தயாரிப்பது சிறந்தது.

Mar 24, 2026

இயற்கை அழகு தரும் காய், கனி, தழைகள்.

முக சுருக்கத்தை போக்கும் கேரட்.முக பொலிவை தரும் பீட்ரூட்..சரும வறட்சிக்கு உருளைக்கிழங்கு.கருவளையத்தை போக்கும் வெள்ளரி.பொடுகை போக்கும் எலுமிச்சை.நரை முடியை போக்கும் நெல்லிக்காய்.முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி தழை.உதட்டில் உள்ள கருமையை போக்கும் புதினா இலை.தலை முடியை கருமையாக்கும் கருவேப்பிலை தழை.முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள் .வசீகர அழகுக்கு ஆரஞ்சு.தோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை.

Mar 17, 2026

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க....

பப்பாளிப்பழத்தை மிக்சியில் அரைத்து. அத்துடன் முல்தானி மட்டி மற்றும் வேப்பிலைப் பொடி சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறைந்து, முகம் பளபளப்பாகும்.சோள மாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து,முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவலாம். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்னை உள்ளவர்கள், வெயிலில் சென்று, வீட்டிற்கு திரும்பியதும், சிறிது தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால், அதிகப்படியான எண்ணெய் வழிவது குறைந்து, முகம் பளபளப்பாகும்.

Mar 10, 2026

சின்னம்மையால் ஏற்பட்ட வடுவைப் போக்க,…

சின்னம்மையால் ஏற்பட்ட வடுவைப் போக்க, தேங்காய் தண்ணீர் பயன்படுகிறது. தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து, ஆறு மாதம் பூசி வர,வடு மறையும்.பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் பூசி வர, சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 26 27

AD's



More News