2 வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் பானம். தொப்பையை குறைக்க இந்த பானம் உதவுகிறது.தொப்பை மற்றும் வயிற்றை சுற்றி உள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி லவங்க பட்டைக்கு உண்டு, முதல் நாள் இரவே பட்டையை ஊற வைத்து,காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், தொப்பை மற்றும் உடல் எடை குறையும். தினமும் மாலை நேரத்தில் கண்டிப்பாக பட்டை குடிப்பது தொப்பையை குறைக்க உதவும்.பட்டையை 3 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி.அந்த நீரை கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் தொப்பை கரையும் .தனியா மற்றும் லவங்கப்பட்டை இரண்டையும் நீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் இரண்டே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.
வாழைப்பழம் எலுமிச்சை சாறு முட்டை வெள்ளை கரு ஆகியவற்றை கலந்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு சுத்தமாக இருக்காது முடி உதிர்வும் இருக்காது... ஆலிவ் ஆயில் தயிர் முட்டை வெள்ளை கரு எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் முடி வலுவாக இருக்கும் முடி உதிர்வும் குறைந்துவிடும். செம்பருத்திப் பூவை வெயிலில் காயவைத்து உலர்த்தி தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை ஒழிவதுட நன்கு தலை முடியும் வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும் மேலும் கண்களும் உடலும் குளிர்ச்சி அடையும்.
இதில் உள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதன் மூலம் பசியை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் கேரட் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உங்களை நீரோட்டமாக வைத்துக் கொள்ள உதவும். இதனால் கோடையில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்கலாம் .சிறு நீர் பையில் கழிவுகள் தேங்குவதால் சிறுநீர் கழிப்பது சிறப்பு ஏற்படலாம். இதற்கு கேரட் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது பயன் தரும் இதைக் குடித்து வர சிறுநீர் எளிதில் வெளியேறும். பீட்ரூட்டில் இரும்பு சத்து நிறைந்துள்ளது இது கண் பார்வையை மேம்படுத்த உதவும். மேலும் கேரட்டில் உள்ள வைட்டமின் சி கண்களுக்கு அதிக நன்மைகளை தரும் பீட்ரூட் மற்றும் கேரட ஜூஸ் குடித்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கி சரும பொலிவு அதிகரிக்கும், இதனால் தெளிவான பளபளப்பான சருமத்தை பெறலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் கோரட் மற்றும் பீட்ரூட் ஜூசை குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
பெண்கள்அனைவரும்பொலிவான, ஆரோக்கியமானசருமத்தைவிரும்புவார்கள்.ஆனால்காலநிலைமாற்றம்சருமத்தின்தன்மையையும் பாதிக்கக்கூடும். சருமத்தை பராமரிக்க,சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியம். குறைந்தது SPF 15 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீன் தினமும் பயன்படுத்த வேண்டும். இது புற ஊதாக்கதிர்கள் உண்டாக்கும் பாதிப்புகளை குறைத்து, சருமத்தின் முதுமை தோற்றத்தை தடுக்க உதவும். வெயில், மழை, குளிர் எந்த பருவ நிலையாக இருந்தாலும் சன்ஸ்கிரீன் தவறாமல் பயன்படுத்துவது முக்கியம்.தண்ணீர் பருகுவது சருமத்திற்கு நன்றாக உதவும். தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மேலும், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதும் சரும ஈரப்பதத்தை தக்க வைத்திடும். பழங்கள், காய்கறிகள், புரோபயாடிக் உணவுகளை உட்கொள்வது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து வழங்கும்.தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை போன்ற இயற்கை பொருட்கள் சரும பொலிவை அதிகரிக்க உதவுகின்றன. முகத்திற்கு தயிர் பூசுவதும், நேராக கற்றாழை ஜெல் பயன்படுத்துவதும் நல்ல பலனை தரும். சிலருக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடியதால், புதிய பொருட்களை பயன்படுத்தும் முன் சிறிதளவு பரிசோதித்து பார்க்க வேண்டும்.
உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் தயிரில் ,புரோபயாடிக்குகள், புரதம் மற்றும் லாக்டிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.தயிர் சரும பராமரிப்பிற்கும் ,வறண்ட சருமத்திற்கு உடனடியாக நீரேற்றம் அளித்து, மந்தநிலையை போக்கி, சருமத்தை பொலிவாகவும் மென்மையாகவும் ஆக்குகிறது.இதில் உள்ள லாக்டிக் அமிலம், இறந்த செல்களை நீக்கி, மெலனின் உற்பத்தியை குறைத்து, சரும நிறத்தை மேம்படுத்தி பிரகாசமாக்க உதவுகிறது.தயிரில் உள்ள துத்தநாகம், சூரிய ஒளியால் ஏற்படும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து, லாக்டிக் அமிலம் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு, சுருக்கங்கள் மற்றும் வயதாவதற்கான அறிகுறிகளை குறைக்கிறது.தயிரில் உள்ள புரோபயாடிக்குகள், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்து போராடி, வீக்கத்தைக் குறைத்து, முகப்பருவை நீண்ட காலத்திற்குத் தடுக்க உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் ரோசாசியா, சொரியாசிஸ் போன்ற பிற தோல் நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகின்றன.
மஞ்சள்தூள் 2 ஸ்பூன், பச்சை பால், கடலை மாவு அரைஸ்பூன், சில துளிகள் எலுமிச்சைசாறு, ஆகியவற்றை கலந்து மென்மையான பேஸ்டாக்கி முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி விடவும். 20 நிமிடங்கள் கழித்து நன்கு காய்ந்ததும். அதனை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ .எளிமையான அதே சமயம் நல்ல ரிசல்ட் தரும் பேக்.
கேரட் புதினா மற்றும் பீட்ரூடை சேர்த்து அரைத்து சிறிது நீர், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்புகள் விரைவாக கரைய தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும். அதேபோல், தக்காளி, புதினாமற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து. எலுமிச்சை சாறு, உப்பு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.தக்காளி அதிகமாக உணவில் சேர்க்கும் பொழுது உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. காலையில் உள்ள அமினோ அமிலம் கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும். ஆனால் நாம் தக்காளியை சமைத்து சாப்பிடாமல் அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும், அப்பொழுது மட்டுமே முழு பலன் கிடைக்கும்.கலோரிகள் மிகக் குறைவாக உள்ள தர்பூசணியை அதிகப்படியாக சாப்பிடும் பொழுது உடல் எடை எளிதில் குறைக்க முடியும். வெள்ளரிக்காயில் வைட்டமின் கே அதிகமாக இருப்பதால் உடல் ஆன்ட்டி ஆக்சிடென்ட், விட்டமின்கள், கொழுப்பை குறைக்கும் உட்பொருட்கள் கொண்ட எலுமிச்சை பழத்தை தினமும் ஒன்று என நம் உணவில் சேர்க்கும் பொழுது எளிதில் உடல் எடையை குறைக்க முடியும்.விட்டமின் சி, நீர்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த ஆரஞ்சு பழம் தினமும் ஒன்று சாப்பிடும் விதத்தில் உடல் எடையை குறைக்க முடியும்.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முந்தைய நாள் இரவே ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்து வரும் பொழுது உடலில் நல்ல மாற்றம் தெரியும்.எடையை குறைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்- கருவேப்பிலை -2 கைப்பிடி மருதாணி - 2 கைப்பிடி செம்பருத்தி இலை -15 வெந்தயம் - 2 ஸ்பூன் சின்ன வெங்காயம் -10 பெரிய நெல்லிக்காய் -1 மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் அரைத்து ஒரு பத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து கிளற வேண்டும் இப்போது அதன் தண்ணி சத்து வெளியே வந்த பின்பு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் எடுத்து ஊற்ற வேண்டும். இப்போது இது நன்கு கொதித்த பின்பு 4-5 நாட்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு வடிகட்டி இதை பயன்படுத்தினால் இளநிறை இருக்கிறவர்களுக்கு இது அருமையான தீர்வாக இருக்கும்
தேன், ஆரஞ்சுப் பழச்சாறு, ரோஸ் வாட்டர், முல்தாணிமட்டித்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பேக் போட்டு நன்கு காய்ந்த பின்பு கழுவி வர சருமம் பொலிவு பெறும்.வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 1 தேக்கரண்டி இம்மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர பருக்கள் மறைவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.எண்ணெய் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருக்கும். இதற்கு தக்காளிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து பேக் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவி வர துவாரங்கள் இறுக்கமாகும்.நன்றாக பழுத்த வாழைப்பழத்தில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றை கலந்து நன்றாக மசித்து பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவவேண்டும்
தேவையான பொருட்கள்- கோதுமை மாவு - 2 ஸ்பூன் பால் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு பயன்படுத்தும் முறை- முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, பால் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்துக்கொள்ளவும் பின் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும். இதற்கடுத்து முகத்தில் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது சருமத்தில் உள்ள முடிகள் நீங்கும். அதன் பின் மூகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, உலர்த்த வேண்டும் இந்த பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.