உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் (10.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.மேலும், இம்முகாம்களை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியானது, பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் அவர்களின் வீடுகளுக்கே தேடி சென்று கிடைக்கும் வகையில் அமைந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஒரு நல்ல அரசாங்கம் எவ்வாறு இருக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை தேடி மக்கள் அலுவலகத்திற்கு செல்வதை காட்டிலும், மக்களை தேடி அரசாங்கமும், அரசு அலுவலர்களும் இருப்பிடத்திற்கே சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அதனை நிறைவேற்றுவது தான் ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளமானதாகக் கருதப்படும்.
இம்முகாம்கள் வாயிலாக, அரசின் பல்வேறு துறைகள் சேவைகளானது, ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் செயல்பட்டு பொதுமக்களின் பல தரப்பட்ட மனுக்களின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அம்மனுக்களின் மீது 45 – நாட்களுக்குள்ளாக தீர்வு காண வேண்டும் என்பதே இம்முகாமின் நோக்கம்.இதனடிப்படையில், உருவாக்கப்பட்ட மற்றொரு திட்டம் தான் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம், பொதுமக்களின் நலனை பேணி காக்கும் வகையில், தங்கள் இருப்பிடத்திற்கே தேடி சென்று முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டங்கள் செயலாற்றி வருகின்றன.
இது போன்ற, முகாமில் மகளிர் உரிமைத்தொகை கோரி பெரும் அளவில் மகளிர் மனுக்கள் அளித்து வருகின்றனர். அது போல, பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்த மனுக்கள் மீது மக்கள் அலுவலகத்திற்கு செல்லாமல், இம்முகாம்களிலேயே தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.பெயர் மாற்றப் பணிகள், சரிபார்த்தல் பணிகள் என அனைத்து வகையான மனுக்கள் மீது இம்முகாம்களிலேயே தீர்வு காணலாம். பொதுவாக ஒரு மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் பொழுது நேர்மறையாக, பொதுமக்களுக்கு அதன் நன்மைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் முதலமைச்சர் அவர்கள் இது போன்ற திட்டங்களை வகுத்திருக்கிறார்.மேலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய பேருந்து நிலையம், சமத்துவபுரம் மற்றும் கல்லூரி போன்றவைகளும், சித்தலக்குண்டு அருகில் பள்ளியும், கிராமத்தைச் சுற்றி ITI-தொழில்நுட்பக் கல்லூரியும் அமையப் பெற்று பல்வேறு வளர்ச்சிகளை பெற்று வளர்ந்துள்ளதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது எனத் தெரிவித்தார்.
என்றைக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தக்கூடிய அளவில் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இன்றைய தினம், திருச்சுழி வட்டாரத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.அந்தவகையில், தற்போது விருதுநகர் மாவட்டத்தில் 279 முகாம்கள் நடைபெற்ற நிலையில்58, 000 மனுக்கள் பெறப்பட்டு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களின்ஆணைக்கிணங்கஅம்மனுக்களின்மீது45நாட்களுக்குள்ளாகதீர்வுகாணப்பட்டுவருகிறது.அதனைத்தொடர்ந்து, மகளிர் உரிமைத்தொகை வேண்டி 55,000 மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்களில் 50,000 மனுக்கள் சரிபார்த்தல் நிலையில் உள்ளன.
இதுபோல, பல்வேறு நலத்திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் மக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும், இம்முகாமில் மின்னனு குடும்ப அட்டை, பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்த மனுக்கள், மின் இணைப்பில் பெயர் மாற்றம் மற்றும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், திருச்சுழி வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply