சிவகாசியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் வரும் 21.06.2026 அன்று சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெற உள்ளது.
இச்சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஹூண்டாய் மோட்டார்ஸ் (HYUNDAI MOTORS), சியட் டயர்ஸ் (CEAT TYRES), ஃபாக்ஸ்கான் ஹான் ஹை டெக்னாலஜி (FOXCONN HON HAI TECHNOLOGY), அடையார் ஆனந்த பவன் (ADYAR ANADHA BHAVAN), வி.வி.வி அண்ட் சன்ஸ் எடிபிள் ஆயில் (V.V.V & SONS EDIBLE OIL), ராயல் என்பீல்ட் அகாடமி (ROYAL ENFIELD ACADEMY), பென்குயின் அப்பாரல்ஸ் (PENQUIN APPARELS), டிவிஎஸ் சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் (TVS SUNDARAM BREKELINING), 5கே கார் கேர் (5K CAR CARE), ஆனைமலைஸ் டொயோட்டா (ANAAMALAIS TOYOTA), டிவிஎஸ் மொபிலிட்டி பாலிமெரிக் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (TVS MOBILITY POLIMARIC PRODUCTS PVT LTD), செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAINT GOBAIN INDIA PVT LTD) போன்ற 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 3000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள தங்களது சுய விவர சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் Google Form https://forms.gle/hBAJ9cavdPKepNLVA ஐ பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்: 9360171161 அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு (vnrjobfair@gmail.com) தொடர்பு கொள்ளுமாறு மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply