25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


மீல் மேக்கர் பிரியாணி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மீல் மேக்கர் பிரியாணி .

 தேவையான பொருட்கள்-
2 ஆழாக்கு பிரியாணி அரிசி,100 கிராம் மீல்மேக்கர்,
2 பெரிய வெங்காயம்,2 தக்காளி,1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
2 துண்டு பட்டை,1டீஸ்பூன் சோம்பு,1/2 டீஸ்பூன் கரம் மசாலா,
1 டீஸ்பூன்தனி மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் தனியாத் தூள்,சிறிதளவு புதினா இலை,
சிறிதளவுகிராம்பு ஏலக்காய்,தேவையான அளவு எண்ணெய்,சிறிதளவு கொத்தமல்லி,
தேவையான அளவு உப்பு.

செய்முறை :-

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து பீல் மேக்கர்3 நிமிடங்கள் வேக வைத்து
பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள்
ஊறவிடவும்.ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை,கிராம்பு

ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து வெங்காயம் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு
விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் மீல்மேக்கரை நன்கு பிழிந்து அதனுடன் சேர்த்து மிளகாய் தூள், தனியா தூள் கரம்
மசாலா தூள் தேவையான அளவு உப்பு கொத்தமல்லி புதினா மற்றும் ஊற வைத்த அரிசியை
மட்டும் சேர்த்து கிளறி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மூன்று ஆழாக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு குக்கரில் ஊற்றி
மூடி வைத்து வெயிட் போட்டு குறைவான தீயில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால்
சுவையான மீல்மேக்கர் பிரியாணி தயார்.
மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News