ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்.
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் மா, தென்னை, வாழை, நெல் ஆகியவைசாகுபடி செய்யப்பட்டு உள்ளது.ராஜபாளையம் மலையடி வார பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக6 காட்டு யானைகள் கூட்டம் நச்சாடைப்பேரி கண்மாய் பகுதியில் உள்ள நெற்பயிர்களையும், - தென்னை, பனை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது.
உணவு மற்றும் நீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளில் தென்னை,மாமரங்களை சேதப்படுத்தும்.3 மாதங்களுக்கு மேலாக யானைகள் இதே பகுதியில் முகாமிட்டு உள்ளதால் இரவு நேரங்களில் காவலுக்கு செல்ல அச்சமாக உள்ளது. யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவிவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
0
Leave a Reply