25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அவல் ஊத்தப்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அவல் ஊத்தப்பம்.

தேவையான பொருட்கள்-

1/2 கப் அவல்,1/4 கப் ரவை,1/4 கப் புளிப்பில்லாத கெட்டி தயிர்,

2 டேபிள்ஸ்பூன் துருவிய கேரட்,2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,

சிறிதளவுபொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை,

தேவையானஅளவு உப்பு,தேவையான அளவு தண்ணீர்

செய்முறை -

முதலில் அவலை கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.பின் ஊற வைத்த அவலை நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின் இதனுடன் ரவை, தயிர் தேவையான அளவு , சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதிகமாக தண்ணீர் சேர்க்க கூடாது. பின்னர் ஊத்தப்பம் சரியாக வராது. அடை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

கேரட் ,வெங்காயம் , கொத்தமல்லி தழை மூன்றையும் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். அடுப்பை பற்றி வைத்து தோசை கல் சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். பின் மேலாக கேரட் வெங்காய கலவையை பரவலாக தூவி எண்ணெய் சேர்த்து இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்.  அவல் ஊத்தப்பம் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News