25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரங்கள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரங்கள் .

நன்றாக வளர்ந்த ஒரு மரம். ஒரு நாளைக்கு 2 முதல் 10 மனிதர்கள் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என கண்டறியப்பட்டு உள்ளது. . ஒரு முதிர்ந்த மரம் ஓராண்டுக்கு ஏறக்குறைய 260 பவுண்டு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.

 

பொதுவாக, மரங்கள் கார்பன்டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்தி ஆக்சிஜன் மற்றும் குளுக்கோசை உற்பத்தி செய்கின்றன.

 

மரங்கள் பகல் நேரத்தில் ஆக்சிஜனை வெளியிடும். அதே வேளையில், இரவு நேரத்தில் சுவாசிப்பதற்காக அதில் சிறிதளவு பயன்படுத்துகின்றன. மரங்களை பொறுத்தவரை, அகன்ற இலை கொண்ட மரங்கள், அவற்றின் அதிக இலை மேற்பரப்பு காரணமாக சிறிய இலைகளை கொண்ட ஊசியிலை மரங்களை விட அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன .

 

இவற்றை எல்லாம்விட, ஒரு இடத்தில் மரங்கள் அதிக அளவில் இருந்தால் அந்த இடத்தின் வெப்பநிலை சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து குளிர்ச்சியாக காணப்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

 

ஒரு புள்ளி விவரப்படி, ஒரு மனிதனுக்கு 699 மரங்கள் என்ற விகிதம் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதுவே ஆஸ்திரேலியா 3,266, பிரான்சு 203, எத்தியோப்பியா 143, கிரீன்லாந்து 4,964 என்ற அளவில் காணப்படுகிறது. 

 

இந்தியாவில் ஒரு நபருக்கான மரங்களின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. எதிர்காலத்தில் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் குறைய வேண்டும் என்றால், மேற்கண்ட நாடுகளை போல மரங்களை ஏராளமாக வளர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News