25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமூக நல அலுவலகத்தின் கீழ் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நல அலுவலகத்தின் கீழ் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

  விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2005 ன் கீழ்; இளநிலை உதவியாளர் / தட்டச்சர் (JUNIOR ASSISTANT CUM TYPIST) பணியிடத்தினை நிரப்புவதற்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கீழ்க்காணும் தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
 
          விண்ணப்பிக்க தேவயான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் (முதுநிலை) தட்டச்சு தேர்ச்சி (Both Higher Typing) பெற்றிருக்கி வேண்டும், மேலும், கணினி பயன்பாட்டியல் (Computer on Office Automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எனவே,விண்ணப்பிக்க தகுதியுடைய (பெண்கள் மட்டும்) 30.09.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் மேற்கண்ட தகுதிச்சான்றுகளுடன் நோில் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News