25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சும்மா நின்னு பேசுது மாமன்னன் படம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சும்மா நின்னு பேசுது மாமன்னன் படம்

.பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்இந்தப்படத்தில் நடிகர் வடிவேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்: மாமன்னன் திரைப்படம் இரண்டாவது வாரத்தில் வசூலை அள்ளி வருகிறது

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாமன்னன் திரைப்படம் ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.உதயநிதி, கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். படத்தில் மாமன்னாக நடித்த வடிவேலு, மாமன்னன் படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார். சிறப்பாக நடித்த வடிவேலுவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்ற பேச்சும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.
மகத்தான வசூல்: இந்நிலை மாமன்னன் திரைப்படம் வெளியாகி இன்றோடு சரியாக இரண்டு வாரம் ஆகி உள்ள நிலையில், படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் ரூ.62.58 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ரூ. 48 கோடியும், வெளிநாடுகளில் 13 கோடியும் வசூல் செய்துள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News