முடக்கத்தான் கீரை தோசை
தேவையான பொருட்கள்
தோசை மாவு: 2 கப்
முடக்கத்தான் கீரை: 1 கைப்பிடி
சின்ன வெங்காயம்: 4
சீரகம்: 1 ஸ்பூன்
மிளகு: 1/2 ஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய்: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு
செய்முறை
கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
மிக்ஸியில் கீரை, சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் மிளகு சேர்த்து
சிறிதளவு தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.
அரைத்த கீரை விழுதை தோசை மாவில் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், மாவை ஊற்றி
மெல்லிய தோசையாக வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, இரண்டு பக்கமும்
பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.முடக்கத்தான் கீரை தோசை
தயார்.
0
Leave a Reply