25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


புத்திசாலித்தனம்  நிறைந்த சிலந்திகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புத்திசாலித்தனம் நிறைந்த சிலந்திகள்

இயற்கை எல்லா உயிர்களுக்கும் தனித்த திறன்களைத் தந்துள்ளது அவற்றை வைத்து அவை தங்கள் உணவு, பாதுகாப்பு, இனப் பெருக்கம் ஆகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. பூச்சிகளில் சிலந்திகள் மிகவும் புத்திசாலித்தனம் நிறைந்தவை. இவற்றின் அறிவாற்றல் குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் இதுவரை அறியப்படாத சிலந்தியின் ஆற்றலைக் கண்டறிந்துள்ளனர்.

சின்ஹுயாபு எனும் ஆய்வாளர் சிலந்திகளின் வலையில் சிக்கும் மின்மினிப் பூச்சிகளை ஆராய்ந்த போது, அவை பெரும்பாலும் ஆண் பூச்சிகளாகவே இருப்பது தெரிய வந்தது. பொதுவாக மின்மினிப் பூச்சிகளில் பெண், ஆண் பூச்சிகள் வெவ்வேறு விதமாக ஒளிரும்.'பூச்சி இனப்பெருக்கம். செய்வதற்கான சமிக்ஞையாக சிலவிதமான ஒளிகளை உருவாக்கும். பெண் பூச்சி பதில் சமிக்ஞையை ஒருவித மான ஒளி மூலம் காட்டும். இதைப் பார்த்த பின் ஆண்பூச்சி, பெண் பூச்சியை நோக்கி வரும். இதை எப்படியோ உணர்ந்த சிலந்திகள் தங்கள் தந்திரோபாயத்தைப் பயன்படுத்துகின்றன.

வைரஸ் கொண்டு கணினியை ஹாக் செய்வதுபோல தன் வலையில் சிக்கும் ஒரே ஓர் ஆண் பூச்சி யைக் கடித்து, அதைப் பெண் பூச்சி போல் ஒளிரச் செய்கிறது தந்திரக் கார சிலந்தி. இதைக் காணும் ஆண் பூச்சி, பெண் பூச்சி தான் தங்களுக்குச் சமிக்ஞை தருகிறது என்று எண்ணி சிலந்தி வலையில் பரிதாபமாகச் சிக்கிக் கொள்கின்றன. பிறகு என்ன? மின்னுவதெல்லம் பெண் என்று எண்ணி வந்த அத்த அப்பாவி ஆண் பூச்சிகளைச் சிலந்தி தன் ஆகாரம் ஆக்கிவிடும். சிலந்தி எப்படி ஆண் பூச்சியை பெண் போல் ஒளிரச் செய்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News