25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


நான்கு வழிச்சாலைக்காக நிலம் வழங்கி இழப்பீடு பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நான்கு வழிச்சாலைக்காக நிலம் வழங்கி இழப்பீடு பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம்.

விருதுநகர் மாவட்டம் வடுகபட்டி – தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை - 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் பொருட்டு நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெற உள்ளது.அதனடிப்படையில், இராஜபாளையம் வட்டத்தில் 23.09.2026 மேலூர்துரைசாமிபுரம் கிராமத்திலும், 25.09.2026 இளந்திரைகொண்டான் கிராமத்திலும், 29.09.2026  புத்தூர்  கிராமத்திலும், 01.10.2026 சமுசிகாபுரம் கிராமத்திலும், 06.10.2026 தெற்குவெங்காநல்லூர் கிராமத்திலும், 08.10.2026 மேலராஜகுலராமன் கிராமத்திலும்,

            திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 23.09.2026 நத்தம்பட்டி கிராமத்திலும், 25.09.2026 அத்திகுளம் செங்குளம் கிராமத்திலும், 29.09.2026 அயன் நாச்சியார்கோவில், நல்லிங்கப்பேரி, தெய்வேந்திரி கிராமத்திலும், 01.10.2026 பூவாணி, முத்துவெங்கட்ராயபுரம் கிராமத்திலும், 06.10.2026 களத்தூர், எஸ்.அம்மாப்பட்டி, வடுகப்பட்டி கிராமத்திலும், 08.10.2026 பிள்ளையார்குளம் கிராமத்திலும், 09.10.2026 குன்னூர் கிராமத்திலும், 12.10.2026 விழுப்பனூர், பாட்டக்குளம் சல்லிப்பட்டி கிராமத்திலும், நடைபெற உள்ளது.

           ஆகவே, தேசிய நெடுஞ்சாலை – 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிமை குறித்த ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நிலஉடைமைதாரர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News