”பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது - 2026” விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5 முதல் 18 வயதிற்குட்பட்ட தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர தீர செயல்களில் சிறந்த சாதனைகள் செய்த குழந்தைகளுக்கும், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், புதுமைகள் செய்தல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் ”பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது 2026”-னாது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதை பெறுபவர்கள் இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 31.07.2026 அன்றைய தினத்தில் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவராகவும், வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இதர தகுதிகளும் இருத்தல் வேண்டும். இவ்விருதினை பெற தகுதியுடையவர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் 10.07.2026-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply