25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜூலை5ல்அறிமுகமான முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூலை5ல்அறிமுகமான முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.

 இந்தியாவிலேயே   முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள், ஜூலை 8-ஆம் தேதி சந்தையில் ,நோவா 5ஜி மற்றும் நோவா பிளஸ்4ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், உள்நாட்டுத் தயாரிப்பாக மட்டுமன்றி, உலக சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.இரண்டு மாடல்களுமே அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் வரவிருப்பதுடன், அவற்றின் விலை ₹5,000-லிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 நோவா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

செயலி: யூனிசோக் T8200 புராசஸர்.

 இயங்குதளம்: நெக்ஸ்ட் குவான்டம் ஓஎஸ் (Next Quantum OS).

 கேமரா: பின்புறத்தில் இரட்டை 50MP கேமரா அமைப்பு.

 பேட்டரி: 5000mAh பேட்டரி திறன்.

 நினைவகம்: 6GB ரேம் (உள் நினைவகம்), 128GB சேமிப்புத் திறன்.

 விரிவாக்கக்கூடிய நினைவகம்: 1TB வரை மெமரி கார்டு மூலம் விரிவாக்கம் செய்யலாம்.

 நிறங்கள்: கருப்பு, நீலம், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

 நோவா பிளஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

 செயலி: யூனிசோக் T7250 புராசஸர்.

 கேமரா மற்றும் பேட்டரி: நோவா 5ஜி மாடலில் உள்ள அதே பேட்டரி மற்றும் கேமரா அம்சங்கள்.

 இயங்குதளம்: நெக்ஸ்ட் குவான்டம் ஓஎஸ் (Next Quantum OS).

 இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News