25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"குருபக்தமணி"ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா-ராம்கோ குரூப் அவர்களின்,91-வது பிறந்தநாள் விழா .

04-07-2026 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு  

அன்னாரின் நினைவாலயத்தில்

ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவியர்களின் கீர்த்தனாஞ்சலியும் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.

அன்று காலை 7.35 மணிக்கு ஸ்ரீஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த பாரதீ வேதபாடசாலையில் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் திரு உருவ படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு ராம்கோ டெக்ஸ்டைல்ஸ் பிரிவின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர் ஜோதி ஏந்தி புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவிலில் பூஜைகள் செய்யப்பெற்று நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்து காலை 11 மணியளவில் ராஜபாளையம் மில்ஸ் வந்தடைய உள்ளது.

முன்னதாக காலை 8.30 மணியளவில் ராமமந்திரத்திற்கு ஜோதி வருகின்ற சமயம் ,அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பெற்று அனைவருக்கும் காலை 9 மணியளவில் காந்தி கலைமன்ற வளாகத்தில் பிரசாதம் வழங்கப்பட உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News