25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இந்தியாவின் 'மிதக்கும் கிராமம்'.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் 'மிதக்கும் கிராமம்'.

இந்தியாவின் 'மிதக்கும் கிராமம்", கேரள மாநிலத்தில் அமைந்திருக்கிறது.கேரள மாநிலம் கொச்சி அருகே 14 சிறிய தீவுகள் உள்ள நிலையில், இதில் ஒன்றாக இருப்பதுதான் கடமக்குடி ஆகும்.

இந்த தீவு கிராமம், தண்ணீரில் மூழ்கியது போன்று காணப்படும். அதனால் 'மிதக்கும் கிராமம்' என்று அழைக்கப்படுகிறது.

சுற்றுலா செல்ல ஏற்ற இடமாகவும் இருக்கிறது. சாலைவழி அல்லது நீர் வழியில் இந்தக் கிராமத்தை அடையலாம்.

சொந்த வாகனத்தில் செல்வோர், கொச்சியில் இருந்து தேசிய நெடுஞ் சாலை 66-ல் வடக்கு பரவூர் நோக்கிப் பயணிக்க வேண்டும். அப்போது வரபுஜா பாலத்தை கடந்த பின்பு, கடமக்குடி செல்லும் பிரதான சாலை வரும். அங்கு திரும்பும்போது, அந்த கிராம பெயர் பொறித்த பலகை உள்ளது.

அவ்வாறு இல்லை என்றால், எடப்பள்ளி அல்லது எர்ணாகுளம் ஐகோர்ட்டு சந்திப்பில் இருந்துதொடங்கி, கன்டெய்னர் சாலையில் செல்லலாம்.

மூன்பில்லி பஸ் நிறுத்தத் துக்கு அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் செல்ல முடியும். மத்திய கொச்சியிலிருந்து பயணித்தால் இந்த கிராமத்துக்குச் செல்ல 30 முதல் 45 நிமிடங்களே ஆகும்.

கடமக்குடிக்கு பொதுப் போக்குவரத்து எனில் நேரடி பஸ்கள் குறைவாகவே உள்ளன. விட்டிலா மொபி லிட்டி ஹப் அல்லது எர்ணா குளத்தில் இருந்து நேரடியாக பஸ் மூலம் செல்லலாம்.

மெட்ரோ என்றால், கொச்சி யில் இறங்கி சங்கம்புழா நகரை அடைந்து, பின்பு ஒரு வாகனத்தை அமர்த்தி, கடமக்குடி கிராமத்தை அடையலாம்.

கடமக்குடிக்கு படகு மூலமாக செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது எர்ணாகுளம் ஐகோர்ட்டு படகுத்துறையில் இருந்து பிஜாலா சென்று, அங்கிருந்து வேறு சிறிய படகு மூலம் கடமக்குடியை அடைந்துவிடலாம்.

வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தை விரும்பு வோருக்கு ஏற்ற இடம் இந்த கடமக்குடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News