ஜீவன் ரக்ஷா பதக்கம் (Jeevan Raksha Padak Series) 2026 விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீவிரவாதிகள் தாக்குதல், நீரில் மூழ்குதல், விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனதாபிமான குணத்துடன், ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக ஜீவன் ரக்ஷா விருது, இந்திய அரசின் (பொதுப் பிரிவு) உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
இவ்விருது சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவரின் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதில் வெளிப்படையான தைரியத்திற்காககவும், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவரின் உயிருக்கு பெறும் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதில் தைரியமான செயலுக்காகவும், ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றிய செயலுக்காகவும் வழங்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கண்ட செயல்கள் மூலம் ஒருவரின் உயிரை மனதாபிமான குணத்துடன் காப்பாற்றி இருந்தால் 2026-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்கம் விருது (Jeevan Raksha Padak Series)-க்கு விண்ணப்பிக்கலாம்.
01.10.2024-க்கு முன்னர் இச்செயல்களை புரிந்தவர்களுக்கு பொருந்தாது. மேலும் இச்செயல்களை புரிந்த தகுதிவாய்ந்த நபர்கள், மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் மற்றும் மீட்கப்பட்டவரின் விபரங்களை சுயவிபர படிவத்தில் பூர்த்தி (அதிகபட்சம் 250 வார்த்தைகள்) செய்து அனுப்பவேண்டும்.
இதற்கான சுயவிபர படித்தினை அதிகாரப்பூர்வமான இணைய தளமான www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட சுயவிபர விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் ஒளிநகல்களுடன் ”மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண்.503, 5-ஆவது தளம், விருதுநகர் – 626 002 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 05.09.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் சேரும் வகையில் அனுப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply